Home
News

ஒரு நாளைக்கு ரூ.15,000 லிமிட்.. 5 பேர்.. Google Pay, PhonePe-வை தெறிக்க விடும் UPI சர்க்கிள் வசதி!

கூகுள் பே மற்றும் போன்பே ஆப்களில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கிடைக்கிவில்லை (உங்களுக்கு கிடைத்தால் கமெண்டில் குறிப்பிடவும்) என்று கூறப்படும் ஒரு வசதியை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அது யுபிஐ சர்க்கிள் (UPI Circle) வசதியாகும். யுபிஐ சர்க்கிள் என்றால்? இதன் பரிவர்த்தனை வரம்பு எவ்வளவு? எந்த ஆப்பில், எந்தெந்தவங்கிகளில் இது அணுக கிடைக்கும்? யுபிஐ சர்க்கிள் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

யுபிஐ போன்ற அதிநவீன பேமண்ட் சேவைகள் இருக்கும் போதிலும் கூட, குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான செலவுகளை நிர்வகிப்பது எப்போதுமே ஒரு கடினமான காரியமாகவே உள்ளது. அதை எளிமைப்படுத்தும் நோக்கத்தின்கீழ் அறிமுகமான அம்சம் தான் - யுபிஐ சர்க்கிள். இந்த அம்சத்தின் கீழ் ஒருவர் சார்பாக உங்கள் அங்கீகாரத்தின் கீழ் பணம் செலுத்த முடியும்.

ஒரு நாளைக்கு ரூ.15,000 லிமிட்.. தெறிக்க விடும் UPI சர்க்கிள் வசதி!

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், யுபிஐ சர்க்கிள் என்பது ஒரு முதன்மை பயனர் (Primary user) தனது கணக்கிலிருந்து பணம் செலுத்துவதற்கு இரண்டாம் நிலை பயனரை (Secondary user) அங்கீகரிக்க உதவும் ஒரு வசதியாகும். யார் பணம் செலுத்துவதற்கு யுபிஐ அங்கீகாரத்தை (UPI authentication) வழங்குகிறாரோ - அவர் முதன்மை பயனர் ஆவார். இரண்டாம் நிலை பயனர் என்பவர் - முதன்மை பயனரின் தகுந்த அங்கீகாரத்துடன் யுபிஐ பேமெண்ட்களை செய்பவர் ஆவர்.

ஒரு முதன்மைப் பயனரால், ஐந்து நபர்களுக்கு பணம் செலுத்துவதை அங்கீகரிக்க முடியும், இதன்கீழ் அவர்களின் செலவினங்களை கட்டுப்படுத்த முடியும். யுபிஐ சர்க்கிள்-ன் பரிவர்த்தனை வரம்பை (UPI Circle Transaction limit) பொறுத்தவரை, முதன்மை பயனர் ஒரு நாளைக்கு ரூ.15000 வரை பரிவர்த்தனை வரம்பை செட் செய்யலாம். ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5000 வரை என்கிற வரம்பை செட் செய்யலாம்.

தற்போது, பீம் யுபிஐ ஆப்பில் (BHIM UPI App) யுபிஐ சர்க்கிள் வசதி அணுக கிடைக்கிறது. எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) உட்பட பல வங்கிகள் இந்த அம்சத்தை ஆதரிக்கின்றன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்எம்எஸ் வழியிலான விழிப்பூட்டல்களை (SMS alerts) அனுப்புவதன் மூலம், யுபிஐ சர்க்கிள் அம்சமானது நிதி பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.

மேலும் யுபிஐ சர்க்கிள் அம்சமானது 2 வகையான டெலிகேஷனை (Two modes of delegation) வழங்குகிறது: பார்ஷியல் (Partial) மற்றும் ஃபுல் (Full). பார்ஷியல் டெலிகேஷனுடன், முதன்மை பயனர்கள் தங்கள் யுபிஐ பின்னை (UPI PIN) பயன்படுத்தி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். மறுகையில் உள்ள ஃபுல் டெலிகேஷனின் கீழ் இரண்டாம் நிலை பயனர்களை நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பரிவர்த்தனைகளை (Transactions within set limits) முடிக்க அனுமதிக்கப்படும்.

யுபிஐ சர்க்கிள் அம்சத்தை எப்படி செயல்படுத்துவது (How to Activate UPI Circle Feature)? பீம் யுபிஐ ஆப்பை பதிவிறக்கி, அதை உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கவும். பின்னர் ஆப்பில் உள்ள யுபிஐ சர்க்கிள் பகுதிக்கு செல்லவும். அங்கே நீங்கள் சேர்க்க விரும்பும் பயனர்களின் யுபிஐ ஐடிகள் (UPI IDs) அல்லது போன் நம்பர்களை (Phone Numbers) உள்ளிட்டு, அவர்களை குடும்ப உறுப்பினராக அல்லது நண்பராக சேர்க்கவும்.

அடுத்து, நீங்கள் அவர்களுக்கு வழங்க விரும்பும் டெலிகேஷன் வகையைத் தேர்ந்தெடுக்கவும் (ஃபுல் அல்லது பார்ஷியல்). ஒருவேளை ஃபுல் டெலிகேஷனை தேர்வுசெய்தால், அவர்களுக்கான பரிவர்த்தனை வரம்பை செட் செய்யவும். அவ்வளவு தான். பீம் யுபிஐ ஆப்பில் உங்களுக்கான யுபிஐ சர்க்கிள் வசதி எனேபிள் ஆகியிருக்கும். நீங்கள் அதை பயன்படுத்த தொடங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Circle in BHIM App Rs 15000 Daily Transaction limit Partial Full delegation How to Activate
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X