புது UPI ரூல்ஸ்.. ஜூலை.15 அமல்.. இனி 10 ரூபாயோ.. 100 ரூபாயோ.. உங்க பேங்க் பணத்துக்கு வருது.. என்னென்ன மாறுது?
பேங்க் அக்கவுண்ட் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ சார்ஜ்பேக் விதிகளை (UPI Chargeback Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் ஜூலை 15ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை செய்த பிறகு அந்த பணம் வேறு அக்கவுண்ட்டுக்கு சென்றாலோ, கிரெடிட் செய்யப்படவில்லை என்றாலோ இந்த விதிகளுக்கு உட்பட வேண்டும்.
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), அமேசான்பே (Amazon Pay), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்கள் மூலமாக பணம் அனுப்பும்போது, அதில் தவறு நடந்தால் உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து கழிக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கு சார்ஜ்பேக் விதிகள் இருக்கின்றன. இதை பணத்தை வழங்கும்/செலுத்தும் பேங்குகள் மேற்கொள்ளும்.

அதாவது, உங்களது பணம் தவறான பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றப்படுதல், உங்களது அக்கவுண்ட்டில் இருந்து கழிக்கப்பட்டும் பணம் பெறுபவருக்கு சென்று சேராமல் இருத்தல், தொழில்நுட்ப கோளாறு ஏற்படுதல் போன்ற காரணங்களால், உங்களது பணத்தை திரும்ப பெறுவதற்கு இந்த சார்ஜ்பேக் விதிகள் தவிர்க்க முடியாததாக இருக்கின்றன. இதிலேயே புதிய விதிகள் வந்துள்ளன.
ஒரு யுபிஐ ஐடி அல்லது ஒரு பேங்க் அக்கவுண்ட் மூலம் 30 நாட்களுக்கு அதிகபட்சம் 10 சார்ஜ்பேக் கோரிக்கைகளை வைக்க முடியும். அதேபோல அனுப்புநர் மற்றும் பெறுநர் சேர்ந்து 5 சார்ஜ்பேக் கோரிக்கைகளை வைக்கலாம். இதற்கு மேல் வைக்கப்பட்டால், என்பிசிஐ அதை தடுக்கும். பெரும்பாலும், யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transaction) சரியாகவே முடிக்கப்படுகின்றன.
இதனாலேயே 10 சார்ஜ்பேக் கோரிக்கைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கு மேல் சார்ஜ்பேக் கோரிக்கை தேவைப்படும்பட்சத்தில் பேங்குகள் ஆர்ஜிஎன்பி (RGNB) என்றழைக்கப்படும் ரெமிட்டிங் பேங்க் ரைசிங் குட் ஃபெய்த் நெகடிவ் சார்ஜ்பேக் (Remitting Bank Raising Good Faith Negative Chargeback) விதிகளை பின்பற்றி கோரிக்கைகளை எழுப்ப முடியும்.

அதாவது, ஒரு யுபிஐ ஐடி அல்லது பேங்க் கஸ்டமருடைய சார்ஜ்பேக் கோரிக்கை உண்மையானது என்று சம்பந்தப்பட்ட பேங்க் கருதும்பட்சத்தில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், பேங்கின் தலையீடு காரணமாக அந்த பணத்தைத் திரும்ப பெற்று கொள்ள முடியும். இந்த சார்ஜ்பேக் விதிகளே வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் யுபிஐ கஸ்டமர்களுக்கு அமல் செய்யப்பட இருக்கின்றன.
இதனால் யுபிஐ கஸ்டமர்களின் பணம் எளிதாக திரும்ப கிடைக்கும். இதற்கு அடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அடுத்த கட்ட யுபிஐ விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதன் மூலம் பேலன்ஸ் சரிபார்ப்பு (Balance Enquiry), டிரான்சாக்சன் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு (Check Transaction Status), ஆட்டோ பே மேன்டேட் எக்சிகியூசன் போன்ற பல்வேறு சேவைகளுக்கு லிமிட் விதிக்கப்பட இருக்கிறது.
ஆகவே, யுபிஐ ஆப்கள் மூலம் 24 மணி நேரத்துக்கு அதிகபட்சம் 50 முறை பேலன்ஸ் சரிபார்த்து கொள்ளலாம். உங்களிடம் பல யுபிஐ ஆப்கள் இருந்தால், ஒவ்வொரு ஆப் மூலமும் தலா 50 முறை சரிபார்த்து கொள்ளலாம். இப்படி பல்வேறு சேவைகளுக்கு லிமிட் இருக்கப்போகிறது. ஜூலை 31ஆம் தேதிக்குள் இதை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே ஆகஸ்ட் முதல் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஜூன் 16ஆம் தேதி முதல் யுபிஐ டிரான்ஸ்சாக்சன் ரெஸ்பான்ஸ் டைம் (UPI Transactions Response Time) விதிகள் அமலுக்கு வந்தன. இதில் டிரான்சாக்சன் ஸ்டேட்டஸ் செக், முகவரி சரிபார்ப்பு, டிரான்சாக்சன் ரிவர்சல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு எடுத்து கொள்ளப்படும் ரெஸ்பான்ஸ் டைம் மேலும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் கூடுதல் வேகத்தில் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.


Click it and Unblock the Notifications