ரூ.2,000 வரம்பு.. ரூ.10,000-க்கு ஏறுது.. இனி ATM-க்கு போக மாட்டீங்க.. வந்தது UPI-க்கு அப்ரூவல்.. வரம்பு என்ன?
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது ஏடிஎம்களுக்கு சென்று பணத்தை எடுக்கும் முறையை மாற்றும்படி புதிய மாற்றத்தை கொண்டுவந்து இருக்கிறது. இதற்கு ஏற்கனவே வரம்புகள் இருக்கின்றன. இந்த வரம்புகள் மாறயிருக்கின்றன. இது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் கியூஆர் கோட் ஸ்கேனிங் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்துகிறது. அதேபோல டவுன், சிட்டிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் இந்த வரம்புகள் பொருந்துகிறது.
ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க வேண்டுமானால், பின் நம்பர் மற்றும் ஏடிஎம் கார்டு இருக்க வேண்டும். இவை இல்லாமல், பிசி (BC) என்று அழைக்கப்படும் வணிக நிருபர்கள் (Business Correspondents) மூலமும் பணத்தை எடுக்க முடியும். இதற்கு ஆதார் கார்டுகள் இருந்தால் போதும், பணத்தை எடுக்கலாம். ஆகவே, ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டியது கிடையாது.

இந்த வணிக நிருபர்கள், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகவே, இவர்கள் மூலமாக பணத்தை எடுத்து கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. இது ஏடிஎம் இல்லாத பகுதிகள் மற்றும் ரொக்கமாக பணம் தேவைப்படும்போது உடனடியாக எடுக்க தேவை இருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதில் யுபிஐ பரிவர்த்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆதார் கார்டு மூலமாக எப்படி வணிக நிருபர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ள முடிகிறதோ, அதேபோல கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலமாக கியூஆர் கோட் ஸ்கேன் செய்தும் பணத்தை பெற்று கொள்ளும்படி சேவை வந்துள்ளது. இந்த புதிய சேவையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இப்போது களமிறக்கி இருக்கிறது. ஆனால், வரம்புகள் தெரிவிக்கப்படவில்லை.
இப்போதைய வரம்பை பார்த்தால், வணிக நிருபர்களிடம் இருந்து டவுன்கள் மற்றும் சிட்டிகளில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000 பெற்று கொள்ளலாம். அதேபோல கிராமப்புறங்களில் ரூ.2,000 பெற்று கொள்ளலாம். இது ஆதார் கார்டு மூலமாக பெறும் பரிவர்த்தனைக்கு கொடுக்கப்பட்ட வரம்பாக இருக்கிறது. இதில் யுபிஐ கியூஆர் கோட் ஸ்கேனும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த யுபிஐ மூலம் எவ்வளவு பணத்தை பெற்று கொள்ளலாம் என்பதை இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது குறிப்பிடவில்லை. ஆகவே, பழைய வரம்பிலேயே பணத்தை எடுக்க அனுமதி கிடைக்கும் என்பது தெரிகிறது. ஆனால், ஏற்கனவே இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, இந்திய ரிசரவ் வங்கியிடம் (Reserve Bank of India) ஒரு அப்ரூவலை கேட்டிருக்கிறது.
இதில் யுபிஐ ஆப்கள் மூலமாக வணிக நிருபர்களிடம் பணத்தை எடுக்கும்போது, அதற்கான வரம்பை ரூ.10,000ஆக அதிகரிக்க இருப்பது குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே, இந்த வரம்பின்படி யுபிஐ கியூஆர் கோட் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. ஆகவே, ஏடிஎம்களுக்கு செல்லாமலேயே ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10,000 வரையில் அனுமதி கிடைக்க இருக்கிறது.
இது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை டெபிட் செய்யும் அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் விரைவாக பணத்தை பெறுவதையும் உறுதி செய்கிறது. இந்த வணிக நிருபர்களிடம் இருந்து பணத்தை பெறும் சேவையானது, கையில் பணம் தேவைப்படும் பேங்க் கஸ்டமர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஏடிஎம் இல்லாத பகுதிகளிலும் இந்த சேவை கிடைக்கும்.
அதேபோல பேங்குகளுக்கு சென்று பணத்தை எடுக்க வேண்டியது கிடையாது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யாமல், கையில் ரொக்கமாக பணத்தை எடுக்க வேண்டிய சூழலில் இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10,000 வரையில் ரொக்கமாக பணத்தை எடுக்கும் வரம்பானது, வணிக நிருபர்களுக்கு மிக விரைவாக அமலுக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








