புது ரூல்ஸ்.. இனி ரூ.5000 லிமிட்.. Google Pay, PhonePe, Paytm கதையை முடித்த Amazon Pay.. இதுதான் புது லிமிட்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவந்த புதிய விதிகளுக்கு (New Rules) உட்பட்டு யுபிஐ பேமெண்ட்கள் (UPI Payments) நடக்கப் போகின்றன. இப்போது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை தூக்கி சாப்பிடும் அமேசான் பே (Amazon Pay) ரூ.5,000 லிமிட்டை கொண்டுவந்துள்ளது.
அமேசான் பே வழியாக யுபிஐ பேமெண்ட்களை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு யுபிஐ பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் (UPI Biometric Authentication) அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய ஆதன்டிகேஷன் வழியாக பின் நம்பர் (PIN Number) இல்லாமல், யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். ஆனால், இதற்கு பயோமெட்ரிங் ஆதன்டிகேஷன் செய்ய வேண்டி இருக்கும்.

அதாவது, பின் நம்பருக்கு மாற்றாக கைரேகை (Fingerprint) அல்லது முக ஸ்கேன் (Face Scan) மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ஆகவே, அமேசான் பே வழியாக மொபைல் நம்பருக்கு பணத்தை அனுப்புதல், பெட்டி கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்புதல், இப்படி அனுப்பிய பிறகு பேலன்ஸ் சரிபார்த்தல்.
இந்த எதுக்கும் பின் நம்பர் தேவையில்லை. கைரேகை அல்லது முக ஸ்கேன் மட்டுமே போதும். இருப்பினும், இந்த யுபிஐ பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் வழியாக ரூ.5,000 வரையிலான பரிவர்த்தனைகளை மட்டுமே செய்து கொள்ள முடியும். இந்த தொகைக்கு மேல் பின் நம்பர் செலுத்த வேண்டி இருக்கும். இந்த தொகை அதிகரிக்கப்படவும் இருக்கிறது.
சொல்லப்போனால், பேங்க் கஸ்டமர்கள் செய்யும் பியர்-டு-பியர் பரிவர்த்தனைகள் (peer-to-peer transactions) சிறிய தொகைகளாகவே இருக்கின்றன. ஆகவே, இந்த யுபிஐ பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் ஆனது சுலபமாக பரிவர்த்தனையை செய்ய வைக்கிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களிலும் இந்த யுபிஐ பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் கட்டாயம் வர இருக்கிறது.
ஏனென்றால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது டிஜிட்டல் பேமெண்ட்களில் 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகளை அமல்படுத்த பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கு ஏப்ரல் மாதம் வரையில் அவகாசம் கொடுத்துள்ளது. அதாவது, பின் நம்பர் ஆதன்டிகேஷனுடன் கூடுதலாக ஒரு ஆதன்டிகேஷனை அமல்படுத்துவதை இந்த 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகள் உறுதி செய்கின்றன.
இதில் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனாலேயே யுபிஐ ஆப்கள் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனில் முனைப்பு காட்டி வருகின்றன. இதில் அமேசான் பே ஆனது கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ ஆப்களுக்கு முன்னதாக இந்த ஆதன்டிகேஷனை கொடுத்து முந்திவிட்டது.
சிறிய தொகைகளுக்கு கைரேகை அல்லது முக ஸ்கேஷன் இருக்கிறது. பெரிய பேமெண்ட்களுக்கு பின் நம்பர் இருக்கிறது. இது இப்போதைக்கு மட்டுமே, யுபிஐ வழியாக ரூ.50,000 தொகை அல்லது அதற்கு மேல் அனுப்பும்போது, கைரேகை அல்லது முக ஸ்கேஷன் முதலில் கொடுத்துவிட்டு, பிறகு பின் நம்பரையும் கொடுக்க வேண்டி வரலாம். இதுதான் 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதியாகும்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வரையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகளை அமல்படுத்த அவகாசம் இருக்கிறது. ஆகவே, இப்போதில் இருந்து கைரேகை மற்றும் முக ஸ்கேன் ஆதன்டடிகேஷன் வழியாகவும் பேமெண்ட்களை செய்யலாம் என்பதை பேங்க் கஸ்டமர்களுக்கு யுபிஐ ஆப்கள் தெரிவிக்க தொடங்கிவிட்டன.


Click it and Unblock the Notifications








