ஆக.1 முதல் புதிய விதி.. காலை 10 மணிக்கு முன்.. இரவு 9.30 க்கு பின்.. UPI பணம் செலுத்தும் முறையில் மாற்றம்!
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் யுபிஐ (UPI) சேவையில் மொத்தம் 6 மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. என்பிசிஐ (NPCI) அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் ஆனது பெரும்பாலும் - கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற - யுபிஐ ஆப் பயனர்களை அவ்வளவாக பாதிக்காது. ஆனால் இந்த 6 மாற்றங்களில் 1 மட்டும் "இத்தனை மணிக்கு முன்பாக", "இத்தனை மணிக்கு பின்பாக" என்கிற நேரக்கெடுவை கொண்டுள்ளது. அதென்ன மாற்றம்?
இந்த மாற்றம் யுபிஐ சேவையின் கீழ் அணுக கிடைக்கும் ஆட்டோபே வசதியில் (UPI Autopay Feature) அமல்படுத்தப்பட உள்ளது. யுபிஐ ஆட்டோபே என்பது பயனர்கள் தங்களுடைய யுபிஐ ஆப்களை பயன்படுத்தி - சந்தாக்கள், பில்கள் அல்லது லோன் இஎம்ஐ-க்கள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களை ஆட்டோமெட்டிக் ஆக பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

இந்த வசதியின் கீழ் ஆரம்ப அங்கீகாரத்திற்கு (Initial authorization) பிறகு, நீங்கள் செலுத்த வேண்டிய பணம் ஆனது ஆட்டோமெட்டிக் ஆக டெபிட் (Automatic Debit) ஆகும். ஆகஸ்ட் 1 முதல் ஆட்டோமெட்டிக் ஆக பணம் டெபிட் ஆவதற்கான நேரங்கள் (AutoPay Timings) ஒதுக்கப்படும்.
அதாவது யுபிஐ ஆப்களின் வழியிலான ஆட்டோபே பரிவர்த்தனைகள் ஆனது குறிப்பிட்ட 3 வகையான நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும்:
1. காலை 10 மணிக்கு முன்
2. பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
3. இரவு 9:30 மணிக்குப் பிறகு
ஆட்டோபே பணப் பரிவர்த்தனைகளுக்கு நிலையான நேர இடைவெளிகளை நிர்ணயப்பதன் மூலம் பகல் நேரங்களில் சீரற்ற முறையில் செயலாக்கப்படுவதற்கு பதிலாக, சந்தாக்கள், இஎம்ஐ-க்கள் மற்றும் பயன்பாட்டு பில் பேமண்ட்கள் ஆனது குறிப்பிட்ட நேரங்களில் கையாளப்படும் போது, யுபிஐ தளத்தின் வேகம்மேம்படுத்தப்படும் என்றும், யுபிஐ சேவையில் ஏற்படும் நெரிசல்கள் குறைக்கப்படும் என்றும் என்பிசிஐ நம்புகிறது .
ஆட்டோபே டைமிங்ஸ் தவிர்த்து ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ சேவையில் அமலுக்கு வரும் மற்ற 5 புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள்:
1. யுபிஐ ஆப் வழியாக பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Daily Balance Check Limit): ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே
2. மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் (Linked Bank Account View Limit): ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே
3. பேமண்ட் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு வரம்பு (Transaction Status Check Limit): குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளியுடன், நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸ்-ஐ 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
4. பேமண்ட் ரிவர்சல் கேப் (Payment Reversal Cap): 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகளை எழுப்பலாம், 1 அனுப்புநருக்கு 5 என்ற அதிகபட்ச வரம்புடன்.
5. பயனாளி பெயர் காட்சிப்படுத்தப்படும் (Beneficiary Name Display): பெறுநரின் பதிவுசெய்யப்பட்ட வங்கி பெயர் கட்டணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்பு தெரியும், இது பிழைகள் மற்றும் மோசடியைக் குறைக்கும். இதோடு சேர்த்து வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கான கடுமையான விதிகளையும் என்பிசிஐ அமல்படுத்துகிறது. இதன்கீழ் ஏபிஐ (API) பயன்பாடு கண்காணிக்கப்படும், மேலும் இதற்கு இணங்காத வங்கிகள் மற்றும் ஆப்கள் ஆனது அபராதம் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகலை எதிர்கொள்ள நேரிடும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பின் (PIN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தனிநபர் அடையாள எண்ணை (Personal identification number) உள்ளிடுவதற்கு மாற்றாக, முக அங்கீகாரம் (Facial recognition) மற்றும் கைரேகைகள் (Fingerprints) போன்ற பயோமெட்ரிக்ஸ் (Biometrics) விவரங்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க உதவும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனால் இது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வராது; சிறிது காலம் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








