புது UPI ரூல்ஸ்.. டிசம்பர் 31 முதல் அமல்.. Google Pay, PhonePe, Paytm-க்கு 2 மாற்றங்கள்.. என்னென்ன மாறுது?
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் பணப்பரிவர்த்தனையை செய்யும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (National Payments Corporation of India) ஆனது இந்த புதிய விதிகளை அமல் செய்ய உள்ளது.
பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து யுபிஐ ஆட்டோபே (UPI Autopay) வழியாக பணத்தை செலுத்துவோருக்கு இந்த விதிகள் நேரடியாக மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் மட்டுமல்லாமல், பேங்குகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பதால், எனவே பேங்க் கஸ்டமர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

யுபிஐ ஆட்டோபே மேன்டேட்: யுபிஐ ஆப்கள் வழியாக மாதம் மாதம் சந்தா செலுத்துதல் மற்றும் எஸ்ஐபி (SIP) செலுத்துதல் உள்ளிட்டவைக்கு யுபிஐ ஆட்டோபே பயன்படுகிறது. ஆனால், இது எந்த யுபிஐ ஆப்பில் ஓப்பன் செய்யப்படுகிறதோ அந்த ஆப்பில் இருந்து மட்டுமே ஆட்டோபே சேவைகளை பெற முடியும். இது டிசம்பர் 31ஆம் தேதி வரும் புதிய விதிகளின்படி மாற்றப்பட உள்ளது.
* ஆட்டோபோ மேன்டேட்களை ஒரு யுபிஐ ஆப்பில் இருந்து மற்றொரு யுபிஐ ஆப்புக்கு மாற்றி கொள்ளலாம். இந்த போர்ட் மேன்டேட்கள் ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் பொருந்தும். ஆகவே, கூகுள் பே ஆப்பில் இருக்கும் ஆட்டோபே மேன்டேட்களை போன்பே ஆப்புக்கு மாற்றி கொள்ளலாம். அதேபோல ஒரேவொரு யுபிஐ ஆப்பின் கீழ் ஒட்டுமொத்த ஆட்டோபே மேன்ட்களை கொண்டுவரலாம்.
* பேங்குகள் மற்றும் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கு (Payment Service Providers) ஆட்டோபே மேன்ட்களுக்கான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள், பேங்குகள் ஆனது ஆட்டோபே மேன்டேட்களின் சேவைகளை ஒரேவொரு பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும். இதில் பார்த்தல் (View), போர்ட் செய்தல் செய்யப்பட வேண்டும்.
* இது மேனேஜ் பேங்க் அக்கவுண்ட்கள் மற்றும் யுபிஐ ஆட்டோபே (UPI Autopay) விருப்பத்தின் கீழ் இருக்க வேண்டும். இந்த ஆட்டோபே மேன்டேட்டில் பாஸ் (Pause), ரத்து செய்தல் (Revoke) மற்றும் மாற்றுதல் (Modify) ஆகிய விருப்பங்களும், இந்த விருப்பங்களை பயன்படுத்தி கொள்ள வெரிபிகேஷன செய்யப்பட வேண்டும். யுபிஐ பின் கட்டாயமாக இருக்க வேண்டும்.
* போர்ட் மேன்டேட் (Port Mandate) விருப்பம், வியூ மேன்டேட்டின் (View Mandate) கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஆகவே, வியூ மென்டேட்டுக்கு சென்று ஒரு யுபிஐ ஆப்பில் இருந்து மற்றொரு யுபிஐ ஆப்புக்கு ஆட்டோபே மேன்டேட்களை மாற்றி கொள்ள முடியும். பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் தங்களது ஆப்பில் ஆட்டோபேகளை செய்ய நேட்டிபிகேஷன், கேஷ்பேக் கொடுக்க கூடாது.
* ஆட்டோபே மேன்டேட் விவரங்களை நோக்கத்திற்காகவும் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் பயன்படுத்தக் கூடாது. 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே போர்ட் மேன்டேட் செய்ய அனுமதி கொடுக்கப்பட வேண்டும். ஒரு முறை போர்ட் மேன்டேட் செய்துவிட்டால், அதை மாற்ற அல்லது வேறு ஆட்டோபே மேன்டேட்டை ஒரு ஆப்பில் கொண்டுவர 90 நாட்கள் இடைவெளி இருக்கும்.
* இந்த விதிகள் ஏற்கனவே யுபிஐ ஆப்கள் வழியாக ஆட்டோபே மேன்டேட்களை செய்யும் கஸ்டமர்களுக்கும், புதியாக ஆட்டோபே மேன்டேட்களை செய்ய இருக்கும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் கொண்டுவந்துள்ள இந்த வழிகாட்டுதல்கள் யுபிஐ ஆட்டோபேவுக்கு மட்டுமல்லாமல், ஈ-மேன்டேட்களுக்கும் (e-madates) அமல் செய்யப்பட உள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி முதல் இந்த விதிகள்படி யுபிஐ ஆப்களில் ஆட்டோபே மேன்டேட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








