Home
News

பேங்க் அக்கவுண்ட்டில் பணம் போச்சா? ரூ.100 கொடுக்க ரூல்ஸ் சொல்லுது.. ATM, UPI-க்கு RBI ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ (UPI) வழியாக பணம் அனுப்புவது, ஏடிஎம் (ATM) வழியாக பணம் எடுப்பது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வது என பல்வேறு பண பரிவர்த்தனைகள் டிஜிட்டலாக மாறிவிட்டன. ஆனால், சில நேரங்களில் பேமெண்ட் ஃபெயில்டு (Payment Failed) என்று வந்தாலும் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட்டாகிவிடும்.

இதுபோன்ற சூழலில், பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஆர்பிஐ (RBI) விதிகளை வகுத்து கொடுத்துள்ளது. குறிப்பாக, தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்ப வரவில்லை என்றால், வாடிக்கையாளர்களுக்கு தினமும் ரூ.100 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த விதியை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.

பேங்க் அக்கவுண்ட்டில் பணம் போச்சா? ரூ.100 கொடுக்க ரூல்ஸ் சொல்லுது!

எனவே, யுபிஐ, ஏடிஎம் அல்லது கார்டு பேமெண்ட் செய்யும்போது பணம் டெபிட் ஆகி, திரும்ப வருவதில் தாமதம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் இந்த விதிகளை தெரிந்துகொள்வது அவசியம். ஆர்பிஐ விதிகளின்படி, ஒரு நபருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது, அனுப்பியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் டெபிட் ஆகி, பெறுநரின் அக்கவுண்ட்டில் வராம் போகும்போது,

அடுத்த நாளுக்குள் பணம் திரும்ப வழங்கப்பட வேண்டும். அதாவது, பரிவர்த்தனை (Transaction) நடைபெற்ற நாளை டி (T) என கணக்கிட்டால், டி+1 (T+1) நாளுக்குள் பணம் திரும்ப வர வேண்டும். இந்த காலக்கெடுவை தாண்டியும் பணம் திரும்ப வரவில்லை என்றால், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

கியூஆர் கோட் வழியாக கடைகளில் யுபிஐ மூலம் பேமெண்ட் செய்யும்போது, வாடிக்கையாளரின் கணக்கில் பணம் டெபிட் ஆகியும் கடைக்காரருக்கு பணம் செலுத்தப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் (Confirmation) கிடைக்கவில்லை என்றால், அந்த தொகை 5 நாட்களுக்குள் திரும்ப வழங்கப்பட வேண்டும். இந்த காலக்கெடுவைத் தாண்டினால் தினமும் ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும்.

ஏடிஎம் வழியாக பணம் எடுக்கும்போது சில நேரங்களில் அக்கவுண்டில் இருந்து பணம் டெபிட் ஆகிவிடும். ஆனால், ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் வராது. இதுபோன்ற சூழலில், வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பதற்றமடையத் தேவையில்லை. இதுபோன்ற தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு 5 நாட்களுக்குள் பணம் திரும்ப கொடுக்கப்பட வேண்டும்.

அதாவது, ஏடிஎம் மெஷினில் ரூ.2,000 பணம் எடுக்க முயற்சி செய்கிறீர்கள். அப்போது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.2,000 டெபிட் ஆகிறது. ஆனால், மெஷினில் இருந்து பணம் வரவில்லை என்றால், 5 நாட்கள் காலக்கெடுவுக்குள் அந்த தொகையை கொடுக்கப்பட வேண்டும். 5 நாட்களைக் கடந்தும் பணம் திரும்ப வரவில்லை என்றால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடு பெறலாம்.

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போதும், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போதும் பேமெண்ட் ஃபெயில்டு என்ற பிரச்சினை ஏற்படலாம். இத்தகைய நேரங்களில் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் ஆகியும், கடைக்காரருக்கோ அல்லது ஆன்லைன் தளத்திற்கோ பணம் செல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது.

இந்த, பணத்தைத் திரும்ப வழங்குவதற்கான காலக்கெடுவை ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது. ஆகவே, 5 நாட்களுக்குள் பணம் திரும்ப வழங்கப்பட வேண்டும். இந்த காலக்கெடுவைத் தாண்டி ரீபண்ட் (Refund) தாமதமானால், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் விண்ணபிக்க வேண்டிய கட்டயாமில்லை.

ஆர்பிஐ வகுத்துள்ள விதிகளின்படி, தகுதியான பரிவர்த்தனைகளில் பணம் திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தனியாக இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இழப்பீட்டை பேங்குகள் தானாகவே வாடிக்கையாளர்களின் பேங்க் அக்கவுண்ட்டில் செலுத்த வேண்டும். காலக்கெடுவுக்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், அளிக்கலாம்.

Best Mobiles in India

English summary
UPI ATM Card Payment Failed Every Bank Customers Get Rs 100 Compensation Daily for Refund Delay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X