இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 11- எப்படி பதிவிறக்கம் செய்வது?., முன்னதாக இதை செய்வது நல்லது!

|

விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் விண்டோஸ் 11-க்கு இலவசமாக மேம்படுத்த முடியும். தங்களது சாதனத்தை சரிபார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தி செக் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 பதிப்பு விரைவில் வர இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் மைக்ரோசாப்டின் புதிய இயக்க முறைமை மேம்படுத்தலாம். இது இலவசமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வுக்கு பிறகு வலைப்பதிவு இடுகையில் இதுகுறித்து அறிவித்தது.

விண்டோஸ் 11 புதுப்பிப்பு

விண்டோஸ் 11 புதுப்பிப்பு

விண்டோஸ் 11 புதுப்பிப்பை வழக்கமான புதுப்பிப்பு முறையில் புதுப்பிக்கலாம். சரியான தேதி தற்போதுவரை தெரியவில்லை. தங்களது தற்போதைய விண்டோஸ் 10 கணினி விண்டோஸ் 11 இலவச அப்டேட்டுக்கு தகுதியுள்ளதா என்பதை பார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தலாம். இதை பதிவிறக்கம் செய்ய விண்டோஸ்.காம் தளத்தை அணுகவும்.

புதிய கணினி வாங்கும் பயனர்கள்

புதிய கணினி வாங்கும் பயனர்கள்

தற்போதைய புதிய கணினி வாங்கும் பயனர்கள் அனைவரும் விண்டோஸ் 11 அப்டேட்டுக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். மேலும் தற்போதுவரை விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐ புதுப்பிக்காமல் இருப்பவர்கள் வருந்த வேண்டும். தற்போதுவரை விண்டோஸ் 10 அப்டேட் கிடைக்கிறது இதை அப்டேட் செய்து விண்டோஸ் 11 வருகைக்கு தயாராகலாம்.

விண்டோஸ் புதுப்பிப்பு செய்வது எப்படி

விண்டோஸ் புதுப்பிப்பு செய்வது எப்படி

விண்டோஸ் 11 கிடைக்கத் தொடங்கியவுடன் விண்டோஸின் எந்த புதிய பதிப்பையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். தற்போதுவரை தங்களுக்கு புதுப்பிப்பு உள்ளதா அல்லது எப்படி புதுப்பிப்பது என்பது தெரியாவதவர்கள். அமைப்பு(செட்டிங்ஸ்) பயன்பாட்டுக்கு சென்று புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இதில் விண்டோஸ் புதுப்பிப்புக்கு சென்று புதுப்பிப்புகளை சரிபார்த்து அப்டேட் செய்யலாம். விண்டோஸ் 11 கிடைக்கும் பட்சத்திலும் இதேமுறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

சோதிக்க விரும்பும் பயனர்களுக்கு வழிமுறைகள்

சோதிக்க விரும்பும் பயனர்களுக்கு வழிமுறைகள்

அதேபோல் விண்டோஸ் 11 முன்பே சோதிக்க விரும்பும் பயனர்கள், விண்டோஸ் இன்சைடர் திட்ட பயனர்களுக்கு அடுத்த வாரம் முதலே ஆரம்ப பீட்டா பதிப்பு கிடைக்கும். ஜூலை மாதத்தில் பொது பீட்டா வெளியிடப்படும். பீட்டா நிறுவம் பயனர்கள் தங்களது முக்கிய கணினியில் நிறுவ வேண்டாம், காரணம் சோதனை அடிப்படையில் பயன்பாடு இருக்கும் போது பிழை இருக்கலாம்.

விண்டோஸ் 11 வெர்ஷன் அறிமுகம்

விண்டோஸ் 11 வெர்ஷன் அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெர்ஷனைஅறிமுகம் செய்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட்

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட்

இதன் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது. அதன்பின்பு டாஸ்க் பாரில் ஐகான்களை புதிய முறையில் பொசிஷன் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவிதமான அப்ளிகேஷன் ஸ்டோர், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த விண்டோஸ் 11.

புதிய வெர்ஷன் இயங்குதளம்

புதிய வெர்ஷன் இயங்குதளம்

புதிய வெர்ஷன் இயங்குதளம் ஆனது கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ எச்டிஆர் அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வில் இந்த புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

சுமார் 1.3 பில்லியன் சாதனங்கள்

சுமார் 1.3 பில்லியன் சாதனங்கள்

விண்டோஸ் 10 இல் தற்போது சுமார் 1.3 பில்லியன் சாதனங்கள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா இந்த புதிய வெர்ஷன் வெளியீட்டை விண்டோஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று விவரித்தார்.

மைக்ரோசாப்டின் சிஇஓ மற்றும் தலைவர்

மைக்ரோசாப்டின் சிஇஓ மற்றும் தலைவர்

விண்டோஸ் 11 வெர்ஷன். மேலும் 2020 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதன் காரணமாக தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாதெள்ளா தனது டுவட்டர் பயோவில் மைக்ரோசாப்டின் சிஇஓ மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Upgrade Your System to Windows 11 For Free: How to Download and Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X