Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள "இதை" பண்ணிடுங்க! இல்லனா? கெடு வைத்த Microsoft!

|

அடுத்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகு "குறிப்பிட்ட" விண்டோஸ் ஓஎஸ் வெர்ஷனுக்கான ஆதரவு முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளப்படும் என்றும், மேலும் அந்த வெர்ஷனுக்கு எந்தவிதமான செக்யூரிட்டி அப்டேட்களும் வராது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதென்ன வெர்ஷன்? அது ஏன் நிறுத்தப்பட உள்ளது? குறிப்பிட்ட விண்டோஸ் ஓஎஸ்-ஐ பயன்படுத்துபவர்கள் அடுத்தது என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை எதுவுமே செய்யவில்லை என்றால் அவர்கள் எதையெல்லாம் இழக்க நேரிடும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

விண்டோஸின் எந்த வெர்ஷன் நிறுத்தப்பட உள்ளது?

விண்டோஸின் எந்த வெர்ஷன் நிறுத்தப்பட உள்ளது?

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8.1 ஓஎஸ்-ஐ "இழுத்து மூடும்" முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் கூற்றுப்படி, விண்டோஸ் 8.1 வெர்ஷன் ஆனது ஜனவரி 10, 2023 க்குள் நிறுத்தப்படும்.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8.1 ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் யூசர்களுக்கு, இதுகுறித்த 'ரீமைண்டரையும்' அனுப்ப தொடங்கி உள்ளது.

உடன் அடுத்த மாதத்திற்குள், தற்போது வரையிலாக விண்டோஸ் 8.1 ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் அனைத்து யூசர்களுக்குமே குறிப்பிட்ட "இடை நிறுத்தத்திற்கு" ஆதரவு தருமாறு கோரும் அறிவிப்புகளையும் மைக்ரோசாப்ட் அனுப்பும்.

அப்போது 2023 பிப்ரவரி மாத வாக்கில் விண்டோஸ் 8.1 வேலை செய்யாதா?

அப்போது 2023 பிப்ரவரி மாத வாக்கில் விண்டோஸ் 8.1 வேலை செய்யாதா?

ஜனவரி 2023 க்குப் பிறகு விண்டோஸ் 8.1 ஓஎஸ் ஆனது வேலை செய்வதை நிறுத்தி விடுமா என்று கேட்டால், நிறுத்தாது. மாறாக அதற்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்காது.

அதாவது விண்டோஸ் நிறுவனம், Windows 8.1 ஓஎஸ்-க்கான எக்ஸ்டென்டட் செக்யூரிட்டி அப்டேட் (Extended Security Update - ESU) ப்ரோகிராம்-ஐ ஜனவரிக்கு பிறகு வழங்காது.

செக்யூரிட்டி அப்டேட்ஸ் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் 8.1 டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் ஆனது இன்டர்நெட் அல்லது லோக்கல் வயர்டு மற்றும் வயர்லெஸ் கனெக்ஷன்கள் வழியிலான பல்வேறு ஆன்லைன் தொடர்பான ஆபத்துகள் மற்றும் சைபர் அட்டாக்களுக்கு ஆளாகலாம் என்று அர்த்தம்!

வேறு என்னென்ன இழப்புகளை சந்திக்க நேரிடும்?

வேறு என்னென்ன இழப்புகளை சந்திக்க நேரிடும்?

மைக்ரோசாப்ட் 365 போன்ற ஆப்களும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 8.1 பிசி-க்களை ஆதரிக்காது.

ஏனெனில் அவைகள் மைக்ரோசாப்டின் மாடர்ன் லைஃப்சைக்கிள் பாலிசியை (Microsoft's Modern Lifecycle Policy) பின்பற்றுகின்றன, இதன் கீழ் யூசர்கள், லேட்டஸ்ட் மற்றும் பாதுகாப்பான சாப்ட்வேர்-ஐ அப்டேட் செய்யும்படி எப்போதும ஊக்குவிக்கப்படுவார்கள்.

இதுக்கு முன்னாடி.. விண்டோஸ் 7 மற்றும் 8 -க்கு நேர்ந்த

இதுக்கு முன்னாடி.. விண்டோஸ் 7 மற்றும் 8 -க்கு நேர்ந்த "அதே கதி"!

மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து வரவிருக்கும் "விண்டோஸ் 8.1 நிறுத்தம்" தொடர்பான அறிவிப்புகள், விண்டோஸ் 7 ஓஎஸ்-இன் எஞ்சிய காலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை போலவே இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2016 இல் அதன் விண்டோஸ் 8 ஓஎஸ்-க்கான ஆதரவையும் நிறுத்தியது. அந்த நேரத்தில் விண்டோஸ் 8.1 ஆனது செயல்பாட்டில் தான் இருந்தது. ஆனால் இப்போது இன்நிறுவனம் வருகிற ஜனவரிக்குள் இதற்கான "ஆதரவை" முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன?

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன?

பெரிய காரணம் ஒன்றும் இல்லை! வழக்கமான காரணம் தான் - மிகவும் பழையதாகி விட்டது. மேலும், ஏற்கனவே பல விண்டோஸ் 8.1 மெஷின்கள் லேட்டஸ்ட் ஆக வெளியான விண்டோஸ் 11 ஓஎஸ்-ஐ ஆதரிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் 11 ஓஎஸ்-க்கான CPU தேவைகள் அப்படி!

இதெல்லாம் சேர்ந்து தான் விண்டோஸ் 8.1 ஓஎஸ்-ஐ, முடிவுக்கு கொண்டுவர உள்ளன!

விண்டோஸ் 11-க்கு அப்டேட் ஆக முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விண்டோஸ் 11-க்கு அப்டேட் ஆக முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மேலே குறிப்பிட்டபடி, பல விண்டோஸ் 8.1 யூசர்களால் நேரடியாக 11 ஓஎஸ்-க்கு அப்டேட் ஆக முடியாது. எனவே இந்த இடத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆப்ஷன் - விண்டோஸ் 10 தான்.

எந்தவொரு மால்வேரிடமும் தங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்களை காப்பாற்ற விரும்பும் விண்டோஸ் 8.1 யூசர்களுக்கான ஒரே வழி - விண்டோஸ் 10 ஓஎஸ்-க்கு அப்கிரேட் ஆவது மட்டும் தான்!

அப்போ.. விண்டோஸ் 10 ஓஎஸ் எப்போது நிறுத்தப்படும்?

அப்போ.. விண்டோஸ் 10 ஓஎஸ் எப்போது நிறுத்தப்படும்?

அதை நினைத்து இப்போதைக்கு பயப்பட வேண்டாம். ஏனெனில், விண்டோஸ் 10 ஓஎஸ் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 14 வரை தொடர்ந்து இயங்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆக குறைந்தது அடுத்த 3 ஆண்டுகளுக்காவது நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

Photo Courtesy: Microsoft

Best Mobiles in India

English summary
Upgrade alert from Microsoft Windows 8 1 Users need to Update before January 10 2023 Here is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X