குழந்தைகள் ஆதார் அட்டைக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே "இதை" கட்டாயம் செய்ய சொல்லி உத்தரவு.!

|

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), குழந்தைகளுக்கான ஆதார் அட்டை (Children's Aadhaar card) தொடர்பான புதிய கட்டாய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது, பால் ஆதார் (Baal Aadhaar) எனப்படும் குழந்தைகள் ஆதார் வைத்துள்ள அட்டைதாரர்களுக்கு புதிய செயல்முறையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாய உத்தரவை வெளியிட்டுள்ளது. அது என்ன? எதற்காக இந்த புதிய செயல்முறை? ஏன் இது கட்டாயம் என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பால் ஆதார் அல்லது குழந்தைகள் ஆதார் வைத்துள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு.!

பால் ஆதார் அல்லது குழந்தைகள் ஆதார் வைத்துள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு.!

பால் ஆதார் (Baal aadhaar) எனப்படும் அட்டைதாரர்களுக்கு 5 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் தரவுகளில் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க (Aadhaar biometric update) கட்டாய வழிகாட்டுதல்களை UIDAI ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி, 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பெற்றோர்கள் உடனே அப்டேட் செய்து புதுப்பிப்பது கட்டாயம் (Aadhaar Mandatory update) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனே இதை கட்டாயம் செய்யணும்.. காசு வேண்டாம் முற்றிலும் இலவசம் தான்.!

உடனே இதை கட்டாயம் செய்யணும்.. காசு வேண்டாம் முற்றிலும் இலவசம் தான்.!

இந்த அப்டேட் நடைமுறைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், இது முழுக்க - முழுக்க இலவசமாகச் செய்து தரப்படும் ஒரு இலவச சேவை என்றும் UIDAI தனது டிவிட்டர் பக்கம் வழியாக இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. அதோடு, பயோமெட்ரிக்ஸைப் புதுப்பித்த (children's Aadhaar card biometric update) பிறகு குழந்தையின் ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது என்று யுஐடிஏஐ (UIDAI) மற்றொரு ட்வீட்டில் அறிவித்துள்ளது.

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!

இது அணைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமா?

இது அணைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமா?

எனவே, பெற்றோர்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் (nearest Aadhaar enrollment centre) சென்று படிவத்தை நிரப்பி, தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவைப் புதுப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது ஆதார் வைத்துள்ள அணைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமானது என்பதை ஆதார் ஆணையம் அழுத்தமாகவும், தெளிவாகவும் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் இதை உடனே செய்து முடிப்பது சிறந்தது.

எந்த வயது நிரம்பிய குழந்தைகளுக்கு எல்லாம் இது கட்டாயம்?

UIDAI தனது அதிகாரப்பூர்வ பதிவில், குழந்தையின் ஆதாருக்கு இரண்டு கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளது. ஒரு குழந்தை 5 வயதை அடையும் போது முதல் பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.

அதேபோல், அதே குழந்தை 15 வயதை அடைந்த உடன் இரண்டாவது முறையாக அவர்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது "கட்டாயம்" என்பதை மீண்டும் கூறியுள்ளது.

ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

பால் ஆதார் என்றால் என்ன?

பால் ஆதார் என்றால் என்ன?

12 இலக்க ஆதாரை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் UIDAI ஆனது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பால் ஆதார் அட்டையை வழங்குகிறது.

பிறப்பிலிருந்து குழந்தைகளுக்கு டிஜிட்டல் புகைப்பட அடையாளச் சான்றாக பல்வேறு நலன்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான அணுகலை இந்த பால் ஆதார் அட்டை (Baal Aadhaar Card) வழங்குகிறது.

பெரியவர்களைப் போல், இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கும் இது கட்டாயமானது.

பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் - அரசு போட்ட உத்தரவு.!

பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் - அரசு போட்ட உத்தரவு.!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கைரேகை போன்ற பயோமெட்ரிக்ஸ் தகவல்கள் உருவாக்கப்படுவதில்லை. கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் பால் ஆதார் அட்டையில் சேர்க்கப்படுவதில்லை.

எனவே குழந்தைகள் ஐந்து வயதை எட்டியவுடன் அவர்களின் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?

ப்ளூ கலர் ஆதார் அட்டை என்றால் என்ன?

ப்ளூ கலர் ஆதார் அட்டை என்றால் என்ன?

பால் ஆதாரை சாதாரண ஆதாரில் இருந்து வேறுபடுத்த, UIDAI 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இருப்பினும், குழந்தை 5 வயதை அடைந்தவுடன் நீல நிற பால் ஆதார் செல்லாது.

எனவே, ஆதாரை புதுப்பிக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸுடன் ஆதார் விவரங்களை அவர்கள் ஐந்து வயதை அடைந்தவுடன் அப்டேட் செய்ய வேண்டியதுள்ளது.

பால் ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

பால் ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in ஐப் பார்வையிடவும்.
  • ஆதார் அட்டை பதிவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • குழந்தையின் பெயர், பாதுகாவலர் / பெற்றோரின் மொபைல் எண் மற்றும் குழந்தை மற்றும் பாதுகாவலர் /பெற்றோர் தொடர்பான பிற பயோமெட்ரிக் தகவல்கள் போன்ற கட்டாயத் தகவல்களை நிரப்பவும்.
  • அடுத்துக் குடியிருப்பு முகவரி, இருப்பிடம், மாநிலம் மற்றும் பிற மக்கள்தொகை விவரங்களை நிரப்பவும்.
  • WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

    இந்த முக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல மறக்காதீர்கள்.!

    இந்த முக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல மறக்காதீர்கள்.!

    • அனைத்து விவரங்களையும் மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்.
    • அடுத்து அப்பாயிண்ட்மெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
    • அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறிந்து, உங்களுக்கான அப்பாயின்மென்ட்டை திட்டமிடவும்.
    • அடையாளச் சான்று, முகவரிச் சான்று, உறவுச் சான்று, பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் போன்ற ஆதார ஆவணங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.
    • எத்தனை நாளில் குழந்தைகளுக்கான ஆதார் கையில் கிடைக்கும்?

      எத்தனை நாளில் குழந்தைகளுக்கான ஆதார் கையில் கிடைக்கும்?

      • ஆதார் நிர்வாகி செயல்முறையை நேரில் முடிப்பார் மற்றும் விண்ணப்ப செயல்முறையைக் கண்காணிக்க ஒப்புகை எண்ணை வழங்குவார்.
      • ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு 60 நாட்களுக்குள் தபால் மூலமாக அனுப்பப்படும்.
      • இந்த முறையை பின்பற்றி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கான புதிய பால் ஆதார் அட்டையை வாங்கலாம்.
      • 300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

        சரி, இப்போது பால் ஆதார் அட்டையை எவ்வாறு அப்டேட் செய்வதென்று பார்க்கலாமா?

        சரி, இப்போது பால் ஆதார் அட்டையை எவ்வாறு அப்டேட் செய்வதென்று பார்க்கலாமா?

        • உங்கள் குழந்தையின் ஆதாரில் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பிக்க uidai.gov.in ஐப் பார்வையிடவும்.
        • உங்கள் குழந்தையின் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிக்க ஒரு அப்பாயின்மென்ட்டை முன்பதிவு செய்யவும்.
        • உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களுடன் ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடவும்.
        • குழந்தைகளுக்கான ஆதார் அப்டேட் - முக்கிய குறிப்பு:

          குழந்தைகளுக்கான ஆதார் அப்டேட் - முக்கிய குறிப்பு:

          குறிப்பு: பால் ஆதார் அட்டையைப் பதிவு செய்யும் போது அல்லது புதுப்பிக்கும் போது பெற்றோர்களும் தங்கள் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

          அப்டேட் செய்ய செல்லும் போது, பெற்றோர்களும் தங்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல அறிவுரைக்கப்படுகிறது. ஆதார் நிர்வாகி, குழந்தையின் முகம் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக்ஸைச் சேர்ப்பார். ஆதார் நிர்வாகி ஒப்புகை சீட்டை வழங்குவார்.

Best Mobiles in India

English summary
Update Your Children's Aadhaar Card Biometrics Details Immediately UIDAI Says It Is Mandatory

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X