கூகுள் குரோம் பிரவுசரை உடனே அப்டேட் செய்யுங்கள்.! CERT-In
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் பயனுள்ள புதிய அம்சங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் கூகுள் குரோம் தளத்தை உலகம் முழுவதும் அதிக பயனர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் குரோம் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In) கூகுள் குரோம் பிரவுசர் பயனர்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக CERT-In என்பது இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளும் ஒரு அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இணைய அச்சுறுத்தல் பற்றிய தகவலை வழங்குவதுடன் இதற்கான தீர்வைத் தருகிறது.

மேலும் தற்போது கூகுள் குரோம் பதிப்பு 99.0.4844.74-க்கு முந்தைய குரோம் உலாவியைப் பயன்படுத்துபவர்களுக்கு CERT-In எச்சரிக்கையை
வெளியிட்டுள்ளது. குறிப்பாக கணினியை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடத்துவதற்கு சாதகமான பல காரணிகள் கூகுள் குரோம்
உலாவியில் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் கூகுள் குரோமில் பல தீங்கிழைக்கும் பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாக CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்பு உங்களது கூகுள் குரோம் உலாவி மூலம் மடிக்கணினிகள், மொபைல், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் சைபர் தாக்குதல்களுக்கு இந்த பக்ஸ் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக இதுபோன்ற தாக்குதலில் ஹேக்கர்கள் தன்னிச்சையான குறியீட்டைப் பயன்படுத்தி மொபைல்கள், கணினிகள் மற்றும் பிற கெஜெட்டுகளுக்கானஅணுகலை பெறுகிறார்கள். அதேபோல் இந்த வகையான தாக்குதல்களில் பயனர்களின் தனியுரிமை தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

கூகுள் குரோம் உலாவியின் பழைய பதிப்புகளில் இருக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை ஹேக்கர்கள் எளிதில் தகர்க்க முடியும். பின்பு கூகுள் குரோம்-இன் பழைய பதிப்புகளில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும் CERT-in தெரிவித்துள்ளது.
குறிப்பாக கூகுள் குரோம் பிரவுசரில் Blink Layout, Extensions, Safe Browsing, Splitscreen, ANGLE, New Tab Page, Browser UI, Heap buffer overflow on GPU போன்றவற்றில் தீங்கிழைக்கும் பிழைகள் உள்ளதாக CERT-in தெரிவித்துள்ளது.

எனவே பழைய பதிப்பை பயன்படுத்து கூகுள் குரோம் பயனர்கள் உடனே 99.0.4844.74 புதிய பதிப்பை அப்டேட் செய்யும்படி CERT-in கூறியுள்ளது.மேலும் இப்போது கூகுள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்யும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1
கூகுள் குரோம் பிரவுசரை ஓபன் செய்து, அதில் மேலே வலது பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2
அடுத்து திறக்கப்படும் டிராப் டவுன் பாக்ஸில் 'Help' - 'About Google Chrome' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.உடனே கூகுள் குரோம் குறித்தத தகவல்கள் அடங்கிய பக்கம் திறக்கப்படும்.
வழிமுறை-3
அந்த பக்கத்தில் Chrome is up to date என்று இருந்தால் உங்களது பிரவுசர் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.ஒருவேளை இல்லையெனில் Install Update என்பதை கிளிக் செய்து அப்டேட் செய்யவும். குறிப்பாக அப்டேட்
நிறைவடைந்த உடன் Restart Google Chrome என்பதை கிளிக் செய்து அப்டேட் முழுவதும் பூர்த்தி செய்யவும்.


Click it and Unblock the Notifications








