ஆரம்பிக்கலாங்களா? இந்த வாரம் ஒரு விருந்தே இருக்கு; 1 இல்ல 6 போன்கள் அறிமுகமாகுது!

|

ஜூன் மாதம் நான்காம் வாரத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். மலிவு விலை முதல் மிட்-ரேஞ்ச் விலையிலான சாதங்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு சாதனங்கள் இந்த வாரம் அறிமுக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சாதனங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்

ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்

ஜூன் நான்காவது வாரத்தில் மொத்தம் ஆறு ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு பிராண்டுகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மலிவு விலை முதல் மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவு வரை அறிமுகமாகும் இந்த சாதனங்கள் ஜூன் மாத கடைசியில் ஸ்மார்ட்போன் சந்தையை பிஸியாக வைத்திருக்க போகிறது. ஸ்மார்ட்போன்கள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக இந்த பட்டியல் அமையப்போகிறது.

பட்டியலில் ஆறு ஸ்மார்ட்போன்கள்

பட்டியலில் ஆறு ஸ்மார்ட்போன்கள்

வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் ஆறு ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 13 மற்றும் போக்கோ எக்ஸ்4 ஜிடி ஆகிய சாதனங்கள் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. அதேபோல் Realme Narzo 50i Prime, POCO F4 5G மற்றும் Realme C30 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. என்னென்ன விலைப் பிரிவு, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Realme C30 ஸ்மார்ட்போன்

Realme C30 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் தனது சி பிரிவில் ஒரு புது ஸ்மார்ட்போனை நேற்று (ஜூன் 20) அறிமுகம் செய்துள்ளது. அது Realme C30 ஸ்மார்ட்போனாகும். இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டாகோர் யூனிசோக் எஸ்ஓசி, 3ஜிபி ரேம் என விலையை மீறிய சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.7499 எனவும் 3 ஜிபி ரேம் ரூ.8299 எனவும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஒற்றை 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy F13

Samsung Galaxy F13

சாம்சங் நிறுவனம் ஜூன் 22 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஃப்13 சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சாதனம் பிங்க், ப்ளூ மற்றும் க்ரீன் என்ற மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாக உள்ளது. இந்த சாதனம் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் செல்பி கேமரா ஸ்பேஸ் ஆகியவற்றுடன் வரும். முதல் சிம்மில் அழைப்பு மேற்கொள்ளும் போது இரண்டாவது சிம் கார்டில் டேட்டா பயன்படுத்த இந்த சாதனம் அனுமதிக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாதனம் இது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 850 செயலி மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tecno Pova 3

Tecno Pova 3

டெக்னோ நிறுவனம் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனம் ஜூன் 27 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியாக உள்ளது. 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இந்த சாதனத்தின் விலை என்னவென்று தெரியுமா?.

7000 எம்ஏஎச் பேட்டரி வசதி

7000 எம்ஏஎச் பேட்டரி வசதி

இந்த ஸ்மார்ட்போன் 11 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கும் எனவும் 33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவோடு 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் பிளாக், ப்ளூ மற்றும் வைட் வண்ண விருப்பத்தில் வெளியாகும் எனவும் ரூ.11,499 என்ற விலைப் பிரிவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Realme Narzo 50i Prime

Realme Narzo 50i Prime

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி30 சாதனத்தை அறிமுகம் செய்ததை தொடர்ந்து நார்சோ 50ஐ ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 22 ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. இது மற்றொரு மலிவு விலை சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.7,800 என்ற விலை புள்ளியில் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற இரண்டு வேரியண்ட்களில் இது வெளியாகலாம். ஒற்றை பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் உடன் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என தகவல்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது.

Poco F4 5G

Poco F4 5G

போக்கோ நிறுவனம் POCO F4 5G ஸ்மார்ட்போனை ஜூன் 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி ஓஐஎஸ் பிரதான சென்சார் உட்பட சதுர கேமரா அமைப்பை கொண்டிருக்கும் எனவும் 1300 நிட்ஸ் பிரகாசத்துடன் AMOLED பேனலைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனமானது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வசதியோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கலாம். இந்த சாதனத்தில் பிரத்யேகமாக ஒரு அம்சம் இடம்பெறலாம்.

பிரத்யேக குளிரூட்டும் அறை

பிரத்யேக குளிரூட்டும் அறை

POCO F4 5G ஆனது சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க 7 கிராஃபைட் அடுக்குகள் உடன் திரவு 2.0 குளிரூட்டும் வசதி இதில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. போக்கோ ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் சாதனம் POCO F4 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெரும் என கருதப்படுகிறது.

POCO X4 GT

POCO X4 GT

அடுத்த சாதனமும் போக்கோ நிறுவனத்துக்கு சொந்தமானதுதான். போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ்4 ஜிடி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. அது POCO X4 GT ஆகும். POCO F4 5G உடன் இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் இந்த சாதனம் அறிமுகமாகலாம். இதன் கூடுதல் அம்சங்கள் குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.

64 எம்பி பிரதான சென்சார்

இந்த சாதனம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வாட்டர் டிராப் நாட்ச் வசதியைக் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரதான சென்சார் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா இடம்பெறலாம். 8 ஜிபி ரேம், மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி, 6.6 இன்ச் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி+ டிஸ்ப்ளே வசதி இதில் இருக்கும் எனவும் 67 வாட்ஸ் சார்ஜ் வசதியோடு 5080 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones this Week: samsung Galaxy F13, Poco X4 GT and More in List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X