Home
News

நல்ல மாசம் பொறந்துருக்கு.. இந்த நவம்பரில் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்.. எல்லாமே வெயிட்டான மாடல்கள்!

2023 தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு விற்பனைகள் மற்றும் சலுகைகள் (2023 Diwali Sale and offers) முடிவுபெற்று விட்டன. இதற்காக பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தள்ளிப்போட்டன. அப்போது தான் பழைய ஸ்மார்ட்போன்களின் வியாபாரம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்ட காரணத்தால், பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளன. அப்படியாக இந்த நம்வாம்பர் மாதத்தில் மீதமுள்ள நாட்களில்.. என்னென்ன பிராண்டுகள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது (Upcoming Smartphones in November 2023) என்கிற விவரங்கள் இதோ:

இந்த நவம்பரில் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்!

விவோ எக்ஸ்100 சீரீஸ் (Vivo X100 Series): விவோ தனது பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்காகவே உருவாக்கிய அதன் எக்ஸ் சீரீஸின் கீழ் 3 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள முந்தைய ஜெனரேஷன்களை போலவே, இம்முறையும் விவோ எக்ஸ்100 சீரீஸின்கீழ் விவோ எக்ஸ்100, விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும்.

வெண்ணிலா மற்றும் ப்ரோ மாடல் ஆகிய இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் மூலம் இயக்கப்படும். இவ்விரண்டும் பெரும்பாலான அம்சங்களை பகிர்ந்து கொள்ளும். முக்கிய வேறுபாடுகள் கேமரா செட்டப்பில் மட்டுமே இருக்கும். ஸ்டாண்டர்ட் எடிஷனில் 64எம்பி 3எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும். ப்ரோ மாடலில் 50எம்பி 4.3எக்ஸ் பெரிஸ்கோப் ஜூம் கேமரா இருக்கும்.

இந்த நவம்பரில் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்!

கடைசியாக உள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் மாடலானது குவாலகாம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட்டை கொண்டிருக்கும். இது தொழில்துறையின் முதல் LPDDR5T RAM உடன் வரும் ப்ராசசர் ஆகும். மேலும் இது சோனி LYT-900 மெயின் கேமராவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்100 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற நவம்பர் 13 அன்று சீனாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்திய அறிமுகமும் நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் 3 மாடல்களுமே இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நவம்பரில் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்!

02. ஒப்போ ரெனோ 11 சீரீஸ் ( Oppo Reno 10 series): ஒப்போ நிறுவனத்தின் மிகவும் பிரபாலான ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆன ரெனோவின் கீழ் 3 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 11, ஒப்போ ரெனோ 11 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும்.

இம்மூன்று ஸ்மார்ட்போன்களுமே முன்னதாக அறிமுகமான ஒப்போ ரெனோ 10 சீரீஸின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் இந்தியாவில் ரூ.54,999 க்கும், ஒப்போ ரெனோ 10 ப்ரோ ரூ.39,999 க்கும் மற்றும் ஒப்போ ரெனோ 10 5ஜி ரூ.32,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 11 சீரிஸின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரு நம்பத்தகுந்த தகவலின்படி, இது வருகிற நவம்பர் 23 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாகும். அதனை தொடர்ந்து இந்திய சந்தையிலும் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

03. ஹானர் 100 சீரிஸ் (Honor 100 Series): ஹானர் நிறுவனத்தின் புதிய 100 சீரீஸ் மாடல்கள் ஒப்போ ரெனோ 11 சீரிஸ் அறிமுகமாகும் அதே நாளில், சீன சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸின் கீழ் ஹானர் 100 (Honor 100) மற்றும் ஹானர் 100 ப்ரோ (Honor 100 Pro) ஸ்மார்ட்போன்கள் வெளியாகும்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 3,840ஹெர்ட்ஸ் பல்ஸ் வைட் மாடுலேஷன் (PWM) டிம்மிங் உடனான 1.5K ரெசல்யூஷன் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை பேக் செய்யலாம். ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வருமா வராதா என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones November 2023 Vivo X100 Oppo Reno 11 Honor 100
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X