Home
News

நல்ல மாசம் பொறக்குது! ஆர்டர் போட ரெடியா? இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 6 புதிய போன்கள்! இதோ லிஸ்ட்!

2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் - ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு - உண்மையிலேயே ஒரு அட்டகாசமான மாதமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் இந்த டிசம்பரில் சில மிகப்பெரிய டெக் நிகழ்வுகள் நடக்கவுள்ளன; அதில் சில முக்கியமான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அப்படியாக இந்த டிசம்பர் மாதத்தில் என்னென்ன நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை (Upcoming Phones December 2023) அறிமுகம் செய்ய உள்ளன? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? அவைகள் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தின் கீழ் வெளியாகும்? இதோ விவரங்கள்:

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 6 புதிய போன்கள்!

ஒன்பிளஸ் 12 (OnePlus 12): உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 வருகிற டிசம்பர் 4 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இது ஜனவரி 24 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், சோனி எல்ஒய்டி-808 சென்சார் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14, பிஓஇ 2கே ரெசல்யூஷன் ப்ரோஏக்டிஆர் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 6 புதிய போன்கள்!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ஒன்பிளஸ் 11 மாடலின் விலையோடு ஒற்றுப்போகலாம். அதாவது இது ரூ.60,000 பட்ஜெட்டில் வெளியாகும். இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் சில புதிய மேம்பாடுகளை கருத்தில் கொண்டால், இது அதிகபட்சமாக ரூ.65,000 க்குள் என்கிற விலை நிர்ணயத்தை பெறும்.

ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5K பிளாட் LTPO AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 6 புதிய போன்கள்!

கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ஆம்னிவிஷன் மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் ஜூமிங் உடனான 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.50,999 மற்றும் ரூ.59,999 க்குள் என்கிற விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி 13சி (Redmi 13C): ரெட்மியின் இந்த சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் HD+ டிஸ்பிளே, மீடியா டெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டிருக்கலாம். இதன் விலை ரூ.10,000 க்குள் இருக்கும்!

சாம்சங் கேலக்ஸி எம்44 (Samsung Galaxy M44): இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் இது கூடிய விரைவில் வெளியாகும் என்பது போல் தெரிகிறது. முக்கிய அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான தகவல்கள் இல்லை. ஆனால் இது ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 100 சீரீஸ் (Honor 100 Series): சீனாவில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதியன்று அறிமுகமான ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது டிசம்பர் 2023 இல் இந்தியாவிற்ம் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் இவ்விரு போன்களும் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.29,200 க்கும், ரூ.39,700 க்கும் அறிமுகமாகி உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Phones December 2023 iQOO 12 OnePlus 12 Redmi 13C More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X