புது போன் எதுவும் வாங்காதீங்க.. தரமா 3 போன் வருது.. சில தினங்கள் மட்டும் வெயிட் பண்ணுங்க..
இந்த மாத இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த மாதம் நிறைவடையும் நேரத்தில் வெறும் 3 போன்கள் மட்டுமே அடுத்த சில நாட்களில் அறிமுகமாகவுள்ளன. இவை எந்த பிராண்டில் இருந்து வெளிவருகிறது. இது என்ன மாடல்? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
இந்த வருகிற வாரத்தில், சியோமி (Xiaomi) நிறுவனத்தின் 2 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகவுள்ளது. அதேபோல், விவோ (Vivo) நிறுவனத்தின் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் மாடலாக ஒரு புதிய மாடலை நிறுவனம் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்கிறது. ஆகமொத்தம், இந்த வருகிற வாரத்தில் 3 மொபைல் (Mobile) மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

சியோமி 14 (Xiaomi 14) மற்றும் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro):
முதலாவதாக, சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் சியோமி 14 (Xiaomi 14) மற்றும் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) பற்றி விபரங்களை பார்க்கலாம். சியோமி நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களான சியோமி 14 (Xiaomi 14) மற்றும் சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro) சாதனங்களை வரிசையின் கீழ் வரும் அக்டோபர் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சீனாவில் அறிமுகம் செய்கிறது.
ஆம், Xiaomi 14 சீரிஸ் மாடல்கள் வரும் அக்டோபர் 27 வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் போஸ்டர் விபரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் போல, Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro என இரண்டு சாதனங்கள் இருக்கும். இதற்கு முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்கள் போலவே இந்த இரண்டு மொபைல் போன்களும் லைகா-டியூன் செய்யப்பட்ட கேமராக்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனில் என்ன ஸ்பெஷல்?
இந்த ஸ்மார்ட்போன்களுக்கான லைகா சம்மிலக்ஸ் (Leica Summilux) லென்ஸ்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் புதிய தலைமுறை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறார்த்து. இந்த சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் சாதனம் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்ணிலா Xiaomi 14 ஆனது ஆம்னிவிஷன் (OmniVision OV50H) பிரைமரி சென்சார் தலைமையிலான மூன்று 50MP கேமராக்களுடன் வெளிவரும். Xiaomi 14 Pro அதன் முன்னோடியிலிருந்து 1 இன்ச் Sony IMX989 சென்சாரை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் சியோமி வேல - ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Vela - HyperOS) அடிப்படையிலான Xiaomi இன் புதிய இயக்க முறைமையுடன் அறிமுகம் செய்யப்படும்.
விவோ ஓய்200 (Vivo Y200) அறிமுகம் எப்போது?
அடுத்தபடியாக, விவோ அறிமுகம் செய்யும் விவோ ஓய்200 (Vivo Y200) சாதனத்தை பற்றி பார்க்கலாம். இந்த சாதனம் இந்தியாவில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி (திங்கட்கிழமை) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்புக்கான அறிமுகச் சலுகைகள் அக்டோபர் 31 (செவ்வாய்கிழமை) வரை நேரலையில் இருக்கும். இந்த சாதனம் iQOO Z7 Pro மற்றும் விவோ எஸ்17e (Vivo S17e), Vivo T2 Pro உடன் ஒத்ததாக இருக்கும்.
இந்த விவோவின் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் போன் என்பதனால், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 4 Gen 1 SoC) வழங்கப்பட்டுள்ளது. இது 4,800mAh பேட்டரி மற்றும் 44W சார்ஜிங் ஆதரவுடன் வரும். இது 'ஆரா லைட்' (ரிங் எல்இடி லைட்) உடன் ஜோடியாக பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்கும். Vivo Y200 விலை ரூ.21,999 என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








