1 இல்ல 2 இல்லை மொத்தம் 12 போன் வருது.. நவம்பரில் எந்த போன் வாங்கலாம்? புது ரிலீஸில் என்ன ஸ்பெஷல்?
ஒவ்வொரு மாதமும் புதுப்புது ஸ்மார்ட்போன் மாடல்களை தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன.அந்த வகையில் இந்த நவம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கும் 12 புது ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
புதிதாக மொபைல் (mobile) போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்களுக்கான பெஸ்ட் நேரம் இது தான். வருகிற நவம்பர் மாதம் தான் புது போன் வாங்க சரியான நேரம், காரணம், புதிய வரவுகளுடன் தீபாவளி கால சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கின்றன. ஆகையால், இந்த சரியான நேரத்தை மிஸ் செய்யாமல் உங்களுக்கு பிடித்த மாடல் போனை வாங்கி பயன்பெறுங்கள்.

சரி, இந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வெளிவருகிறது என்று பார்க்கலாம். குறைந்தது 12 பிராண்டுகள் அடுத்த மாதம் புதிய போன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் லாவா (Lava), ஐகியூஓஓ (iQOO), ஒப்போ (Oppo), விவோ (Vivo), ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus), ரெட்மி (Redmi), போக்கோ (Poco), சாம்சங் (Samsung), ஹானர் (Honor), இன்பினிக்ஸ் (Infinix) மற்றும் டெக்னோ (Tecno) ஆகியவை அடங்கும்.
1. லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G)
Lava Blaze 2 5G இந்தியாவில் நவம்பர் 2 (வியாழன்) அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது மதியம் 12 மணியளவில் YouTube லைவ்ஸ்ட்ரீமில் அறிவிக்கப்படும். இது ரூ.9,000 - ரூ.10,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஐகியூஓஓ 12 சீரிஸ் (iQOO 12 Series)
iQOO 12 தொடர் சீனாவில் நவம்பர் 7 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் iQOO 12 மற்றும் iQOO 12 Pro என 2 மாடல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஒப்போ ஏ2 (Oppo A2)
Oppo A2 சீனாவில் நவம்பர் 11 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும்.
4. விவோ எக்ஸ்100 (Vivo X100 சீரிஸ்)
Vivo X100 சீரிஸ் சீனாவில் நவம்பர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என வதந்தி பரவியுள்ளது.
5. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro)
Realme GT 5 Pro நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஒன்பிளஸ் 12 (OnePlus 12)
ஒன்பிளஸ் 12 நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
7. ரெட்மி கே70 சீரிஸ் (Redmi K70 series)
Redmi K70 தொடர் நவம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. ரெட்மி 13சி (Redmi 13C) மற்றும் போக்கோ சி65 (Poco C65)
Redmi 13C நவம்பர் மாத நாடு பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
9. சாம்சங் கேலக்சி ஏ15 (Samsung Galaxy A15)
Samsung Galaxy A15 ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் சாதனமாக 4ஜி மற்றும் 5ஜி ஆகிய 2 வேரியண்ட் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
10. ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT)
Honor X50 GT சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனை தொடர்ந்து இது இந்தியாவில் களமிறங்குகிறது.
11. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8)
Infinix Smart 8 ஸ்மார்ட்போன் சாதனமும் இந்த வருகிற நவம்பர் மாதத்தில் வெளிவர தயார் நிலையில் உள்ளது.
12. டெக்னோ ஸ்பார்க் 20 சீரிஸ் (Tecno Spark 20 Series)
Tecno Spark 20 சாதனம் Tecno Spark Go 2024 மாடலுடன் நவம்பரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மாடல்களின் அறிமுக தேதி இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








