இலவசம், இலவசம்: எஸ்பிஐ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி- இனி ரூ.5 லட்சம் வரை பணப் பரிவர்த்தனைக்கு ஜீரோ கட்டணம்!

|

டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை ஊக்குவிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி ஆப்லைன் பேமெண்ட்-ஐ அறிமுகம் செய்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிமுகம் நெட்வொர்க் சிக்கல் காரணமாக பணப் பரிமாற்றம் செய்யாமல் இருப்பவர்களை பரிமாற்றம் செய்ய ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பார்க்கையில், எஸ்பிஐ வங்கி டிஜிட்டல் சேவை மூலமாக ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்யும் போது எந்த விதமான சேவை கட்டணமும் பெறப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டணம் ஆனது ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்துக்கு மட்டுமே பொருந்தும். ரூ.5 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் (IMPS) பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு ஜீரோ கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ஐஎம்பிஎஸ் பரிமாற்றம் டிஜிட்டல் சேவை தளத்தில் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதாவது YONO ஆப் மூலம் ரூ,5 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் செய்யும் போது மட்டுமே இந்த சேவை இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்பிஎஸ் சேவைக்கான முந்தைய வரம்பு

ஐஎம்பிஎஸ் சேவைக்கான முந்தைய வரம்பு

ஐஎம்பிஎஸ் சேவைக்கு முந்தைய வரம்பு குறித்து ரூ.2 லட்சமாக இருந்தது. தற்போது இந்த வரம்பு அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஎம்பிஎஸ் வரம்பானது ரூ.5 லட்சம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே சேவையை வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் ஆனால் 24*7 மணி நேரமும் வங்கி தளம் மூலம் ஐஎம்பிஎஸ் செய்யப்படும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச மாதாந்திர வரம்பு

இலவச மாதாந்திர வரம்பு

ஜனவரி 1, 2022 முதல், இலவச மாதாந்திர வரம்பு முடிந்தவுடன், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதி இப்போது நடைமுறையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவின் படி, ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளான எஸ்பிஐ வங்கி முதல் துவங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளன.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

இந்த புதிய விதியின் படி யாருக்கெல்லாம் செல்லுபடியாகும், எப்போதெல்லாம் உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது போன்ற தெளிவான விபரங்களைப் பார்க்கலாம். ATM மையங்களில் இருந்து பணம் எடுக்க எப்படி இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதேபோல், நீங்கள் வங்கி சென்று பணம் டெபாசிட் செய்தாலும் கூட இனி உங்களிடம் இருந்து ஒரு கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய விதியை கடைப்பிடிக்க வேண்டும்

புதிய விதியை கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவின் முக்கிய கடன் வழங்குநர்களான அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த புதிய விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கள் பணம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்த தகவலை தங்களின் இணையதளத்தில் புதுப்பித்துள்ளனர். குறிப்பாக இந்த புதிய விதியின் படி, பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மாதாந்திர அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்பைத் தாண்டிய பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை

பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை

ஜனவரி 2022 முதல் இலவச மாதாந்திர அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு அப்பால் ரொக்கம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க மத்திய வங்கி இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இனி வங்கி வாடிக்கையாளர்கள் மாதாந்திர இலவசப் பரிவர்த்தனைகளின் வரம்பை மீறினால், ஒவ்வொரு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கும் ரூ. 21 என்ற கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இந்த கட்டணம் ரூ.20 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Up to Rs 5 lakh free transaction through IMPS: How can SBI users make a free transaction?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X