Home
News

34% நேரடி டிஸ்கவுண்ட்.. அடிச்சு புடிச்சு வாங்கப்படும் 5 Acer லேப்டாப்கள்.. என்னென்ன மாடல்கள்?

பெர்ஃபார்மென்ஸில் எந்தவொரு குறையும் இல்லாத ஒரு தரமான பிரீமியம் லேப்டாப்பை வாங்கும் தேடலில் உள்ளீர்களா? உங்களுடைய கவனம் ஏசர் பிராண்ட் லேப்டாப் மாடல்கள் மீது உள்ளதா? ஆம் என்றால்.. ஒரு நல்ல ஏசர் லேப்டாப்பை (Acer Laptop) வாங்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும்!

ஏனென்றால் கடந்த அக்.8 ஆம் தேதி தொடங்கி, இன்னமும் நீண்டு கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ஏசர் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்விஃப்ட் 3 (Swift 3) லேப்டாப் மாடல்கள் மீது 20% முதல் 34% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

34% டிஸ்கவுண்ட்.. அடிச்சு புடிச்சு வாங்கப்படும் 5 Acer லேப்டாப்கள்!

01. 14-இன்ச் ஏசர் ஸ்விஃப்ட் 3 இன்டெல் ஈவோ (Acer Swift 3 Intel Evo): இவ்வளவு தான் என்னுடைய பட்ஜெட் என்கிற எந்த கட்டுப்பாடுகளும் இல்லாதவர்கள், அனைத்து லேட்டஸ்ட் அம்சங்களுடனும் வரும் இந்த லேப்டாப்பை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது 20% தள்ளுபடியை பெற்று ரூ.1,04,632 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்டெல் கோட் ஐ7 ப்ராசஸர், 4 கோர்ஸ் மற்றும் 8 த்ரெட்ஸ் கொண்ட இந்த லேப்டாப், அபரிமிதமான ஸ்பீடை வழங்குவதால் மல்டி-டாஸ்கிங்கிற்கு மிகவும் சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும். பேக்லிட் கீபோர்ட் உடன் வரும் இந்த ஏசர் லேப்டாப் அற்புதமான பேட்டரி லைஃப்பையும் வழங்குகிறது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடரின் உதவியுடன், ஒரே ஒரு டச்சில் வேகமாக லாக்-இன் செய்ய முடியும்.

02. ஏசர் ஸ்விஃப்ட் 3 ஏஎம்டி ரிசைன் 5 (Acer Swift 3 AMD Ryzen 5): 14 இன்ச் ஸ்க்ரீன், விண்டோஸ் 10 ஓஎஸ், மெலிதான மற்றும் இலகுரக டிசைன், அலெக்ஸா, 8 ஜிபி ரேம் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப் மாடலானது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது 34% தள்ளுபடியை பெற்று ரூ.59,290 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ஏசர் ஸ்விஃப்ட் 3 ஏஎம்டி ரைஸன் 7 (Acer Swift 3 AMD Ryzen 7): நீங்கள் ஒரு பிஸ்னஸ் லேப்டாப்பை தேடுகிறீர்களானால், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிகவும் அற்புதமான தேர்வாக இந்த லேப்டாப் இருக்கும்.

எந்த பின்னடைவும் இல்லாத செயல்திறன், வைஃபை இணைப்பிற்கான ஆதரவு, வலுவான லைஃப், ஃபிங்கர் பிரிண்ட் ரீடரின் உதவியுடன், மிகவும் எளிமையாக லாக்-இன் செய்யலாம்; நீளமான அல்லது கடினமான பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப் மாடலானது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது 20% தள்ளுபடியை பெற்று ரூ.1,09,566 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ஏசர் ஸ்விஃப்ட் 3 லே[லேப்டாப் 2022 (Acer Swift 3 Laptop 2022): விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம், வைஃபை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவு, 1920 x 1080 பிக்சல்ஸ் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் டிஸ்பிளே, 10 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப், மெலிதான மற்றும் நேர்த்தியான டிசனுடன் வரும் இந்த லேப்டாப் அமேசான் பெஸ்டிவல் விற்பனையின் போது 20% தள்ளுபடியை பெற்று ரூ.1,38,696 க்கு வாங்க கிடைக்கிறது.

05. 13.5-இன்ச்ஏசர் ஸ்விஃப்ட் 3 இன்டெல் ஈவோ (Acer Swift 3 Intel Evo): அதிகவேக செயல்திறன், அற்புதமான பேட்டரி லைஃப் தான் உங்களுக்கான முன்னுரிமை என்றால் இந்த லேப்டாப் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். 14 மணிநேர பேட்டரி லைஃப் உடன் வரும் இந்த லேப்டாப் பின்னடைவு இல்லாத செயல்திறனை வழங்குகிறது. இந்த லேப்டாப் அமேசான் விற்பனையின் போது 20% தள்ளுபடியை பெற்று ரூ.1,02,782க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Up To 34 Percentage Discount Best Time to buy Acer Swift 3 Laptops in Amazon Great Indian Festival
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X