Home
News

சபாஷ்.. பெண்களின் பாதுகாப்புக்காக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன காலணி.. இதோ முழு விவரம்..

தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்புக்காக எஸ்ஒஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் அதிநவீன காலணிகளை (sandal with an SOS alert feature) வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பல வித்தியாசமான பாதுகாப்பு சாதனங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக இந்த பாதுகாப்பு சாதனங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது உத்தரப்பிரதேச மாணவர்களின் புதுவித காலணி (sandal) ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன காலணி..

அதன்படி உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் (Maharajganj district) இருக்கும் ஆர்பிஐசி பள்ளியில் (RPIC School) அம்ரித் திவாரி (Amrit Tiwari) மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் (Komal Jaiswal) என்ற மாணவர்கள் இந்த புதுவித காலணியை உருவாக்கியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த காலணியின் கீழ், பட்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்த காலணியில் கீழ் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், குடும்பத்தினர், நண்பர்கள் என தேவையானவர்களுக்கு எச்சரிக்கை ஒலி (SOS alert) சென்றுவிடும். மேலும் இதன் மூலம் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தைக் (location) கூட எளிமையாக அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர உரையாடல்களை கேட்கும் வகையில் இந்த அதிநவீன காலணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காலணியின் விலை ரூ.2500 என்று தெரிவித்துள்ளனர் மேலும் இந்த காலணியை உருவாக்கிய மாணவர் அம்ரித் திவாரி கூறியது என்னவென்றால், நாங்கள் உருவாக்கிய செயலி மூலம் காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்காலத்தில் காலணியில் கேமராவையும் (camera) பொறுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் சுற்றியுள்ள இருப்பிடம் மற்றும் காட்சிகளும் பகிரப்படும். அதேபோல் பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று அந்த மாணவர் தெரிவித்தார். மேலும் இந்த காலணி வெறும் பாதுகாப்பு குறித்தான தகவல்களை மட்டும் அனுப்பாது.

அதாவது இந்த செருப்பு அணிந்திருக்கும் ஒருவர், தாக்குதல் நடத்தும் ஒருவரை மிதித்தால், செருப்பில் இருந்து ஒருவகையான மின்சாரம் வெளியேறித் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலையச் செய்யும். அதேசமயம் செருப்பை அணிந்திருப்பவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அதிநவீன காலணி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சேவை என்று அரசாங்கமும் காவல்துறை ஆணையம் ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த வரிசையில், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தி மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன காலணி-க்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo credit: hindustantimes, Pixabay

More from GizBot

Best Mobiles in India

English summary
UP school students have developed an innovative sandal with SOS feature for womens safety
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X