நேர என்கவுண்டர் பாக்க வாங்க என்று அழைத்த காவல்துறை.! இருவர் பலி.!

|

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை நேரில் காண பத்திரிகையாளர்களுக்கு உத்தர பிரதேச காவல்துறை நேரடி அழைப்பு விடுத்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றது. அதுமுதல், தற்போதுவரை 66 பேர், போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாநகரத்தின் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்கவுண்டர்

என்கவுண்டர்

இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த என்கவுண்டரை நேரில் வந்து பார்த்து செய்தியைப் பதிவு செய்யும்படி பல மீடியா நிறுவனங்களை உத்தர் பிரதேச காவலித்துறை அழைப்புவிடுத்துள்ளது. விஷயத்தைக் கேட்ட ஊடக செய்தியாளர்கள் உடனே நேரடியாக என்கவுண்டர் நடந்த இடத்திற்கே சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

அலிகார் இல் சந்தேகத்துக்கிட்டமான வகையில் 2 பேர் மோட்டார் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர். அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்துவிட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து துரத்திச் சென்று அந்த இருவரையும் ஓரிடத்தில் சுற்றிவளைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஆவார்கள் பைக்கில் இருந்து இறங்கி ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கிவிட்டனர்.

 6 கொலை

6 கொலை

இவர்கள் இருவரும், 6 கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் மற்றும் அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனக் காவல் துறை தெரிவித்தது. இவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளை நோக்கி 34 தடவை துப்பாக்கி சூட்டு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17 வயது மைனர்

17 வயது மைனர்

அவர்கள் இருவரையும் போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். சுடப்பட்ட இருவரில் ஒருவர் 17 வயதே ஆன மைனர் என்பதும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் அவரின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா நிறுவனங்களை அழைத்த காவல்துறை

மீடியா நிறுவனங்களை அழைத்த காவல்துறை

நேரடியாக என்கவுண்டர் பாக்க வாங்க என்று மீடியா நிறுவனங்களை அழைத்த காவல்துறை, இந்தச் சம்பவம் குறித்த பதிவுகள் மற்றும் வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
UP Police 'Invited' Media to Watch an Encounter in Which Two Men Were Killed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X