"வாட்ஸ் ஆப் இல் மணப்பெண் அதிக நேரம் செலவிட்டார்" திருமணத்தை நிறுத்திய மணமகன்.!
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் திருமணம் வாட்ஸ் ஆப்-பினால் நின்று போனது.
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் திருமணம் வாட்ஸ் ஆப்-பினால் நின்று போனது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கொமார் ஹைதர் என்பவருக்கும் அம்ரோஹா பகுதியை சேர்ந்த மணப்பெண்ற்கும் (பெயர் குறிப்பிடவில்லை) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தன்று மணமகன் ஹைதர் மணப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

அவரை மணந்து கொள்ள விருப்பம் இல்லாததற்கு அவர் சொன்ன காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மணப்பெண் "வாட்ஸ்ஆப் இல் அதிக நேரம் செலவிட்டார்" அதனால் எனக்குப் பெண்ணை பிடிக்கவில்லை என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.

மணமகன் தலை காட்டவில்லை
செப்டம்பர் 5 ம் தேதி, மணமகளின் குடும்பம் மற்றும் நண்பர்கள், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர். ஆனால் மணமகன் கொமர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை வரை மண்டபத்தின் பக்கம் தலை காட்டவில்லை.

ரூ.65 லட்சம் வரதட்சணை
மணமகளின் தந்தை தன் சகோதரரை, மணமகன் கொமர் வீட்டிற்கு அனுப்பி நிலவரத்தைத் தெரிந்து கொண்டார். மணமகளின் தந்தை மணமகன் வீட்டிற்கு விரைந்து சென்று அவர்கள் சமாதானம் செய்ய முயற்சித்து அலுத்துப் போய் ஒரு வழியாக மணமகனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். ஆனால் கொமர் அதிரடியாக ரூ.65 லட்சம் வரதட்சணை கேட்டு மணமகளின் தந்தை இடம் பேரம் பேசி இருக்கிறார். உடனடியாக 65 லட்சம் கொடுத்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன், இல்லை என்றால் திருமணம் நின்றுவிட்டதாக அறிவித்து விடுங்கள் என்று கொமர் தெரிவித்துவிட்டார்.

முக்கிய காரணம்
மணப்பெண்ணை வேண்டாம் என்று கூறியதற்கு முக்கிய காரணம் "மணப்பெண் வாட்ஸ் ஆப் இல் அதிக நேரம் செலவழித்ததால்", அவர் நல்ல பெண் இல்லை என்று அவர் சொல்லியது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் புகார்
மணமகளின் தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதன் படி வாட்ஸ் ஆப் பயன்படுத்தியதால் மணப்பெண்ணைத் தவறாக பேசியது மற்றும் திருமணம் செய்துகொள்ள ரூ.65 லட்சம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியது என இரண்டு புகார்கள் அவர் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications