பால்வெளி மையத்திலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்.. மர்மத்தை கட்டவிழ்க்க போராடும் வானியலாளர்கள்..

|

பறந்து விரிந்த பால்வெளி விண்மீன் கூட்டத்திற்கு இடையையும், அதற்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தின் அமைதியான இடங்களிலும் மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத பல ஆச்சரியங்களும் அதிசயங்களும் ஒளிந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்குச் சான்றாக தற்பொழுது விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் வானியலாளர்கள் புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளனர். ஆம், நமது பால்வெளி மண்டலத்தில் நடுவில் இருந்து அடையாளம் தெரியாத புதிய ரேடியோ அலைவரிசையை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பால்வெளி விண்மீன் மையத்தின் நடுவில் இருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்

பால்வெளி விண்மீன் மையத்தின் நடுவில் இருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்

பால்வெளி விண்மீன் மையத்தின் திசையில் இருந்து வரும் மிகவும் துருவப்படுத்தப்பட்ட வானொலி அலைகளை வானியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ அலைகளிலிருந்து வரும் ஒளி ஒரே ஒரு திசையில் மட்டும் ஆசிலேட் ஆவதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இதன் திசை காலப்போக்கில் ஒவ்வொரு முறையும் மாற்றத்துடன் சுழல்கிறது என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர்.

பிரபஞ்சத்தின் மர்மங்களை கண்டறிய உதவும் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மர்மங்களை கண்டறிய உதவும் தொழில்நுட்பம்

இந்த கண்டுபிடிப்பைச் சாத்தியமாக்கிய வானொலி வானியலின் முன்னேற்றங்களுக்கு வானியலாளர்கள் நன்றி கூறியுள்ளனர். வானியலாளர்கள் இப்போது பிரபஞ்சத்தின் மிகப் பெரிய மர்மங்களை வெளிப்படுத்த இந்த அதிநவீன தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வில், வானியலாளர்கள் ஆரம்பத்தில் இந்த ரேடியோ அலைகளின் ஆதாரம் ஒரு பல்சராக இருக்கலாம் என்று நினைத்தார்கள்.

தானாகவே ஆன் மற்றும் ஆஃப் ஆகும் சிக்னல்

தானாகவே ஆன் மற்றும் ஆஃப் ஆகும் சிக்னல்

ஆனால், இந்த புதிய மூலத்திலிருந்து வரும் சிக்னல்கள் இந்த வகையான வான பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படுவதோடு பொருந்தவில்லை என்பது அவர்களுக்கு ஆச்சரியமிளித்துள்ளது. பொருளின் பிரகாசத்தில் வியத்தகு மாறுபாடு உள்ளது என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர். இது 100 காரணி என்று நாம் வைத்துக்கொள்வோம். மேலும், கண்டறியப்பட்ட சிக்னல் தானாகவே ஆன் மற்றும் ஆஃப் ஆகிறது என்று வானியலாளர்கள் கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது போன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததில்லை

இது போன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததில்லை

ஜெங் வாங், புதிய ஆய்வின் முன்னணி எழுத்தாளர் மற்றும் Ph.D. சிட்னி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளி மாணவராவர், "இது போன்ற எதையும் நாங்கள் பார்த்ததில்லை" என்று கூறியுள்ளார். பேராசிரியர் தாரா மர்பி, சிட்னி இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரானாமி மற்றும் ஸ்கூல் ஆஃப் பிசிக்ஸ் கூறுகையில், "2020 மற்றும் 2021 முழுவதும் வேறியபிள் மற்றும் ஸ்லொவ் ட்ரான்சியின்ட் (VAST) எனப்படும் திட்டத்துடன் அசாதாரண புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க ASKAP உடன் வானத்தை ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

மர்மத்தின் பின்னணியில் ASKAP J173608.2-321635

மர்மத்தின் பின்னணியில் ASKAP J173608.2-321635

கேலக்ஸியின் மையத்தை நோக்கிப் பார்த்தால், ASKAP J173608.2-321635 ஐக் வானியலாளர்கள் கண்டறிந்தாக கூறியுள்ளனர். இந்த பொருள் தனித்துவமானது, அது கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கியது, பின்னர் பிரகாசமானது, அதற்குப் பின் மங்கிவிட்டது, பின்னர் மீண்டும் தோன்றியது என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த நடத்தை அசாதாரணமானது, இதுவரை இப்படி ஒன்றை வானியலாளர்கள் கண்டறியாதது என்று கூறியுள்ளனர்.

இத்தனை தொலைநோக்கியை பயன்படுத்தியும் சிக்காத சிக்கனலின் மையம்

இத்தனை தொலைநோக்கியை பயன்படுத்தியும் சிக்காத சிக்கனலின் மையம்

2020 ஆம் ஆண்டில் ஒன்பது மாதங்களில் ஆறு வானொலி சிக்னல்களை வானியலாளர்கள் கண்டறிந்தனர். முதலில் காணக்கூடிய ஒளியில் பொருளைக் கண்டுபிடிக்க வானியலாளர்கள் முயன்றபோது, ​​அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. பின்னர், அவர்கள் பார்க்ஸ் வானொலி தொலைநோக்கியைப் பயன்படுத்தினார்கள், ஆனால் அப்போதும் அவர்களால் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை. பின்னர், அவர்கள் அதிக உணர்திறன் கொண்ட மீர்காட் ரேடியோ தொலைநோக்கியை நோக்கிப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

ஒரே நாளில் ஆதாரம் மறைந்ததா?

ஒரே நாளில் ஆதாரம் மறைந்ததா?

இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்திய போது அவர்களுக்கு ஆச்சரியமாக, சிக்னல் இடைப்பட்டதாக இருப்பதைக் கண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு சில வாரங்களுக்கும் 15 நிமிடங்கள் அதைக் கவனித்தாக பேராசிரியர் மர்பி கூறினார். "அதிர்ஷ்டவசமாக, சிக்னல் மீண்டும் திரும்பியது, ஆனால் மூலத்தின் நடத்தை வியத்தகு முறையில் வேறுபட்டது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் முந்தைய ASKAP அவதானிப்புகளில் வாரங்கள் நீடித்திருந்தாலும், ஒரே நாளில் ஆதாரம் மறைந்தது." என்று அவர் கூறியுள்ளார்.

காஸ்மிக் பர்பர்' என்று அழைக்கப்படும் கேலடிக் சென்டர் ரேடியோ டிரான்சியண்ட்ஸ்

காஸ்மிக் பர்பர்' என்று அழைக்கப்படும் கேலடிக் சென்டர் ரேடியோ டிரான்சியண்ட்ஸ்

விஸ்கான்சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கப்லான் கூறினார். "'காஸ்மிக் பர்பர்' என்று அழைக்கப்படும் கேலடிக் சென்டர் ரேடியோ டிரான்சியண்ட்ஸ் எனப்படும் மற்றொரு வளர்ந்து வரும் மர்மமான பொருட்களுடன் சில இணைகளை இது காட்டுகிறது. புதிய பொருள், ASKAP J173608.2-321635, GCRT-களுடன் சில பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​வேறுபாடுகளும் உள்ளது. எப்படியிருந்தாலும் அந்த ஆதாரங்களை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை, எனவே இது மர்மத்தை அதிகரிக்கிறது."

பிரமிக்க வைக்க இந்த பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கிறது

பிரமிக்க வைக்க இந்த பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கிறது

வானியல் ஆராய்ச்சியாளர்கள் இப்போது அந்த பொருளைச் சரியாகக் கண்டறிந்து அதன் மீது ஒரு கண் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் இதன் உண்மையான பின்னணி என்ன என்பது இன்னும் தெளிவாகாமல் இருக்கிறது. தொடர்ந்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் கூடுதல் விபரங்கள் மற்றும் மர்மத்தைக் கட்டவிழ்க்கும் புதிய தகவல்கள் கிடைக்குமென்று வானியலாளர்கள் நம்புகிறார்கள். விரைவில் இன்னும் சில சுவாரசியமான தகவலுடன் உங்களைப் பிரமிக்க வைக்க இந்த பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Unusual Signals Emerging From The Direction Of The Milky Way Galactic Centre : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X