Subscribe to Gizbot

நீங்க ஏமாற்றலாம். ஆனா.. நாங்க 'அதை' நம்பனுமே..!!

Written By:

ஏமாற்றுவது ஒரு திறமையெனில், ஏமாற்றுபவனை கண்டுப்பிடிப்பது ஒரு பெரிய திறமையாகும். அப்படியாக ஏமாற்றும் திறமைசாலிகளும், அதை 'பச்சை பொய்' என்று கண்டுப்பிடிக்கும் 'பெரிய திறமைசாலி'களும் உலகம் முழுக்க நிறைந்து கிடக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் தொகுப்பே இது.

நம்ம ஊருல ரோடு ஓரமா திரியுற சில்லரை பசங்க போட்டோஷாப் வேலை பண்ணி பார்த்து இருப்பீங்க, ஆனா.. நம்ம நாட்டு 'நியூஸ் டீம்' தொடங்கி வட கொரியா, பாரீஸ், ஸ்பெயின் போன்ற உலக நாட்டு நியூஸ் டீம்கள் செய்த போட்டோஷாப் வேலைகளை பார்த்து இருக்கிறீர்களா..? வாங்க பார்த்துடலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. டேவிட் கேமரூன் :

01. டேவிட் கேமரூன் :

கனடாவில், உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுப்படுத்தும் நாளான நினைவுறுத்தும் நாள் அன்று, பிரதமர் டேவிட் கேமரூன் நெஞ்சில் பொய்யாக 'போட்டோஷாப்' செய்து பொருத்தப்பட்ட பேஜ்.

02. நரேந்திர மோடி :

02. நரேந்திர மோடி :

சென்னையின் வெள்ள பாதிப்புகளை நரேந்திர மோடி பார்வையிட வந்திருந்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், தரைமட்டத்தில் உள்ள வீடுகள் தெளிவாக தெரியும்படி 'போட்டோஷாப்' செய்யப்பட்டுள்ளத்தை காணலாம்.

03. ஸ்பெயின் :

03. ஸ்பெயின் :

பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கள் காலடியில் பணிந்தது என்று சொல்லி தெற்கு ஸ்பெயின் பார்த்த வேலை தான் இது. எருமை மாடு, 10-15 ஜெட்கள், மலை உச்சியில் ஸ்பெயின் கொடி என்று உலகையே சிரிக்க வைத்த கலக்கல் போட்டோஷாப் வேலை.

04. வட கொரியா :

04. வட கொரியா :

ராணுவ நிகழ்ச்சியில் கலந்தே கொள்ளாத (முன்னாள்) வட கொரியாவின் தலைவரான கிம் ஜொங்-இல், கம்பீரமாக க்ரூப் போட்டோவில் நிற்பது போன்று செய்யப்பட்ட போட்டோஷாப் லீலை.

05. ஈரான் :

05. ஈரான் :

2008-ஆம் ஆண்டு ஈரான் நாடு பரிசோதனை செய்ததோ மொத்தம் 3 ஏவுகணைகளைத்தான், ஆனால் செய்தித்தாள் புகைப்படத்தில் இருப்பதோ 4 ஏவுகணைகள். என்ன ஒரு 'மிரட்டலான' போட்டோஷாப் வேலை.

06. பாரீஸ் :

06. பாரீஸ் :

பாரீஸ் நகரில் மாபெரும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது என்பதெல்லாம் ஓகே தான். ஆனால் அதற்காக தப்பான திசையில் கார்கள் பயணிப்பது போன்றா போட்டோஷாப் செய்வது..? கொஞ்சம் கவனிச்சிருக்க கூடாதா ?

07. எகிப்து :

07. எகிப்து :

மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் எகிப்து நாட்டு ஜனாதிபதி உலக தலைவர்களை முன் நடத்துவது போல் பத்திரிக்கை ஒன்று புகைப்படம் வெளியிட்டது. ஆனால் நடந்தது என்னவென்றால் - கீழே இருக்கும் போட்டோ தான்.

08. வட கொரியா :

08. வட கொரியா :

முதலில் உலகையே மிராட்டிய இந்த புகைப்படத்தில், ஒரே மாதிரியான பல 'ஹோவர்க்ராஃப்ட்கள்' கடலில் பயணித்து தரைக்கு வரும் 'போட்டோஷாப் வித்தை' கண்டுப்பிடிக்கப்பட்ட பின் ஊரே சிரித்தது..!

09. ஸ்பெயின் :

09. ஸ்பெயின் :

மக்கள் வரி பணத்தில் மீன் பிடித்து ஊர் சுற்றுக்கிறார் என ஸ்பெயின் நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்னதெல்லாம் சரி தான், அதற்காக பக்கத்தில் நிற்கும் நபரின் முகத்தையா 'கட் - காப்பி - பேஸ்ட்' செய்வது..!?

10. டோரோன்டோ :

10. டோரோன்டோ :

10. டோரோன்டோ :
டோரோன்டோ நகர அரசு, பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்காக எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தில் 'இன கலவை' இல்லை என்று பார்த்த போட்டோஷாப் வேலை தான் இது. நல்ல எண்ணம் தான், ஆனா நாங்க கண்டுப்பிடிச்சிட்டோமே..!

11. வட கொரியா :

11. வட கொரியா :

ராய்டார்ஸ்-க்கு அனுப்பி வைத்த புகைப்படத்தில் ஏதோ கொஞ்சம் கலர் கரக்ஷன்-லாம் செஞ்சீங்க ஓகே தான். அதுக்காக இப்படியா போட்டவை வெளிர்னு மாற்றி.. இடது பக்கம் இருக்குற கும்பல 'கட்' பண்ணி.!! கொஞ்சம் ஓவர் தான்.

12. விர்ஜினியா :

12. விர்ஜினியா :

"பல ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் மூடர்களுக்கு உண்மை தெரிந்து விடவா போகிறது" என்ற 23-ஆம் புலிகேசியை பின்பற்றி.. அந்த காலத்திலேயே 3 புகைப்படங்களை ஒன்றாக்கி ஒரே புகைப்படமாக செய்யப்பட்ட 'டார்க் ரூம்' தந்திரம்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..!

அன்றாடம் நடக்கும் 7 விசித்திரங்கள்..!

விஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Unsuccessful attempts to manipulate photographs. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot