குஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.!
குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் 12 கிராமங்களில் வெகுவாக காணப்படுகின்றனர். இவர்களின் வீடுகளில் உள்ள இளம் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள
குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் 12 கிராமங்களில் வெகுவாக காணப்படுகின்றனர். இவர்களின் வீடுகளில் உள்ள இளம் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் தெரியுமா என்றால் இந்த காரணத்தை கேட்டால் நீங்களும் சிரிப்பீர்கள். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசு வேகமாக செயல்பட்டு வருகின்றது.
இதற்காக பல்வேறு அரசு துறைகளிலும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அதுவும் குஜராத் மாநிலம் மோடி பிறந்த மாநிலம். அங்குள்ள இந்த இனத்தை சேர்ந்த இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதால், அந்த கிராமங்களில் திருமணமாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பிறந்த மாநிலத்திலே உங்களுக்கு எதிரான கூத்து நடக்கின்றது இந்தியாவை எப்படி டிஜிட்டல் மயமாக்குவீர்கள் மோடி என்று பலரும் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

மோடி பிறந்த மாநிலம்:
நரேந்திர தாமோதர்தாசு மோடி குஜராத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார். பிஜேபி சார்பில் குஜராத்தில், இரண்டு முறை முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். மோடி தற்போது, இந்திய பிரதமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பொறும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், மோடி நாட்டின் பிரதமாக மீண்டும் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமாக பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிஜேபி அரசு செயல்படுத்தி வருகின்றது. பல்வேறு அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது.

டிஜிட்டல் இந்தியா:
மோடி தலைமையிலான அரசு பட்டி தொட்டியெங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மேலும், அதிவேக வை-பை, 5ஜி தொழில்நுட்பத்தின் கூடிய செல்போன்களையும் பயன்படுத்த ஊக்குவித்து வருகின்றது. நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் செல்போன் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகின்றது.

டிஜிட்டல் இந்தியா கேலிக் கூத்தா:
இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள 12 கிராமங்களில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 கிராமங்களில் செல்போனுக்கு தடை: தாக்கூர்
சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தந்தேவாடா தாலுக்காவிற்கு உட்பட்ட 12 கிராமங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. இதற்காகவே இதுபோன்ற தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

9தீர்மானங்கள் நிறைவேற்றம்:
இதற்கு அப்பகுதி பெண் எம்.எல்.ஏ. ஜெனிபன் நாகாஜி ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 4 ம் தேதி பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்திய தாக்கூர் சமூகத்தை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட தலைவர்கள், 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

செல்போனுக்கு பெற்றோரே காரணம்:
தாக்கூர் சமூக பெண்கள், மற்ற சமூக ஆண்களை காதலித்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவரின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், தாக்கூர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்ற சமூக பெண்களை காதலித்து, திருமணம் செய்து கொண்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவரின் பெற்றோர்களே காரணம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ முடிவு:
இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வாவ் தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஜெனிபன் நாகாஜி, இது போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் தான் சமீப காலமாக அதிகரித்து வரும் கலப்பு திருமணங்களை நிறுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 ஜோடிகள் இந்த விவாகாரத்தால் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இளம்பெண்களுக்கு இது போன்ற கட்டுப்பாடு விதித்தால் ஆண்கள் தானாக அடங்குவார்கள் என்றும், ஜெனிபன் நாகாஜி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு நிறைவேறுமா? :
பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரைவாக நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில், கிராமப்புறங்களை மட்டும் டிஜிட்டல் இந்தியாவாக்க வேண்டும் என்று மோடி விரும்புகின்றார். ஆனால் மோடி பிறந்த மாநிலத்திலே இதுபோன்ற சம்பவம் நடக்கின்றது. இதை தடுக்காமல் இதுபோன்ற நடவடிக்கையில், வேடிக்கை பார்ப்பது கேலிக் கூத்தானது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications