Just In
- 22 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 24 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 31 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 2 hrs ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- News
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கொரோனா பரவல்., விண்வெளி திட்டம் ஒத்திவைப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக இஸ்ரோ திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தனியார் செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்
இந்த ககன்யான் திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மனித உருவிலான பெண் ரோபோ
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை முதற்கட்டமாக 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பெண் ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்.

கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது
இந்த நிலையில் கொரோனா தொற்றான கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதோடு இந்த வைரஸ் தொற்று பராவமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தம்
இஸ்ரோ ககன்யான் திட்டத்துக்கு விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விமானிகள் இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னதாகவே யு.ஏ.வில் பயிற்சியை மேற்கொண்டனர்.

நான்கு ஐ.ஏ.எஃப் பணியாளர்கள்
நான்கு ஐ.ஏ.எஃப்(இந்தியன் ஏர் போர்ஸ்) பணியாளர்களின் பயிற்சி பிப்ரவரியில் யூரி ககரின் பயிற்சி மையத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைய திட்டமிடப்பட்டது. கோவிட் 19 காரணமாக பயிற்சி காலத்தை மேலும் நீட்டிக்கக்கூடும். ரஷ்யா பயிற்சிக்குப் பிறகு, நான்கு வீரர்களுக்கும் இந்தியாவில் மேலும் பயிற்சி வழங்கப்படும்

விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஜென்சி
இஸ்ரோ வட்டார தகவல் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஜென்சி ஒரு மாத கால அவகாசம் இடைவெளி விட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரஷ்யாவில் எங்கள் நடவடிக்கைகள் சரியான பாதையில் இல்லை எனவும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் பயணத்திற்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவைப்படுவதால், தாங்கள் எங்கள் அணியை இருக்கும் இடத்திலேயே தங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம்
கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அனைத்து தரப்பிலும் மிக அதிகமாக உணரப்படும் நிலையில் தற்போது இதன் பாதிப்பு விண்வெளித் திட்டத்தையே ஒத்திப்போட வைத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிதிப் பிரச்சனை காரணமாகவும் ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்
ஆளில்லா விண்கலம் விண்ணுக்கு செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அதேபோல் சந்திரயான் 3 திட்டம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் செயல்ப்பட இருந்தது, இந்த திட்டமும் 6 மாதத்திற்கு ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
source: indiatimes.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470