Home
News

ஜியோ,ஏர்டெல்,வோடபோன் ஐடியா: தினசரி டேட்டா வரம்பு இல்லாத திட்டங்கள்.!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒரு சில திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தினசரி டேட்டா வரம்பு இல்லாத திட்டங்களை வைத்துள்ளன. அதாவது இதுபோன்ற திட்டங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றே கூறலாம். இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் தினசரி டேட்டா வரம்பு இல்லாத (No Daily Data Limit) அசத்தலான திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.247 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.247 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு இல்லை (No Daily Data Limit)என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.247 திட்டத்தில் மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. அதாவது பயனர்கள் தினசரி டேட்டா வரம்பை அடைவது பற்றி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் 25ஜிபி டேட்டாவையும் பயன்படுத்த முடியும்.

ப்ரீபெய்ட் திட்டத்தில்

இதுதவிர ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். மேலும் இந்த அசத்தலான திட்டத்தில் JioTV, JioNews, JioCinema, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட
நன்மைகளையும் பெற முடியும். ஜியோவின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்திலும் தினசரி டேட்டா வரம்பு இல்லை (No Daily Data Limit). குறிப்பாக வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் உள்ளன. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்திலும் தினசரி டேட்டா வரம்பு இல்லை (No Daily Data Limit) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளும் உள்ளன.

ன் பிரைம் வீடியோ மொ

இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, Apollo 24/7 Circle, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் பல சலுகைகள் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Unlimited daily data plans offered by Jio, Airtel, VI.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X