சந்தையில் ரூ.350/- புள்ளியில் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்கள் என்னென்ன.?
எது வரம்புகள் இல்லாத அழைப்பு நன்மைகளை தருகிறது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் இக்கட்டுரை அதை தெளிவுப்படுத்தும்.
"பெருநிறுவனங்களின் கட்டண திட்டங்களை சீர்குலைக்கும்" வண்ணம், கடந்த ஆண்டு நிகழ்ந்த ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவுத்தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் முகத்திரை எப்படியெல்லாம் கிழிந்த என்பதை நாம் நன்கு அறிவோம்.

ஜியோ போன்றே மலிவான திட்டங்களை தொகுத்து வழங்கத்தொடங்கின. இன்னும் சொல்லப்போனால் தங்கள் சந்தை நிலையை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளை அறிமுகப்படுத்தின, அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருகின்றன.

எது வரம்புகள் இல்லாத அழைப்பு நன்மைகளை தருகிறது.?
அப்படியான திட்டங்களில் பெரும்பாலானவைகள், அதிக வேக தரவு மற்றும் இலவச குரல் அழைப்புகள் உடன் சில இலவச எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகின்றன. அவைகளில் எது வரம்புகள் இல்லாத அழைப்பு நன்மைகளை தருகிறது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் இக்கட்டுரை அதை தெளிவுப்படுத்தும்.

ரூ.350/- என்ற புள்ளியில் கிடைக்கும் மாதாந்திர ரீசார்ஜ்.?
இங்கு ரூ.350/- என்ற புள்ளியில் கிடைக்கும், எந்தவிதமான பேச்சு நேர வரம்பும் இல்லாத சில கவர்ச்சிகரமான ரீசார்ஜ் பொதிகள் பட்டியலிடப்பட்டுள்ள. இந்த அனைத்து திட்டங்களுமே குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 4ஜி டேட்டா நன்மைகளையும் கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149/- திட்டம்.!
இந்த ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 0.15ஜிபி என்ற தினசரி வரம்பிலான மொத்தம் 4.2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கும். ஒருவேளை வாடிக்கையாளர், இந்த அன்றாட வரம்பை தாண்டும் பட்சத்தில் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு நன்மையானது, எல்லா ஆபரேட்டர்களிலும் இலவசம் மற்றும் வரம்பற்றவையாகும். உடன் 300 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 309 ரீசார்ஜ் திட்டம்.!
இந்த ரீசார்ஜ் பேக் ஆனது 49 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. அந்த வரம்பு முடிந்த பின்னர், வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெறக்கூடிய அதிகபட்ச தரவு 49 ஜிபி ஆகும். குறிப்பாக, இதன் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளானது வரம்பற்றவையாகும்.

ஏர்டெல் ரூ.349/- ரீசார்ஜ் பேக்.!
இந்த ஏர்டெல் திட்டமன்றகு அதன் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குவதோடு, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் இந்த ஏர்டெல் ரூ.349/- ஆனத்தூபி தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. இது (ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தின் படி) 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

வோடபோன் ரூ. 348 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.!
இந்த வோடபோன் ரீசார்ஜ் திட்டமானது, நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும். இந்த திட்டத்தின் இதர நன்மைகளை பொறுத்தமட்டில் (வோடாபோன் வலைத்தளத்தின் படி) வரம்பற்ற உள்ளூர்/ வெளியூர் அழைப்பு நன்மையை மொபைல் மற்றும் லேண்ட்லைன் ஆகிய இரு இணைப்புகளுக்குமே வழங்குகிறது.

ஐடியா ரூ. 349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.!
இந்த ஐடியா திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு வரம்பற்ற பேச்சு நேரத்தை கொடுக்கிறது. உடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த வாய்ப்பின்கீழ் பயனர்கள் மொத்தம் 28 ஜிபி அளவிலான டேட்டாவை அணுகலாம்.

ஐடியா ரூ.357 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.!
தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன், வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் அதிவேக தரவு ஆகிய நன்மைகளை வழங்கும் இந்த ஐடியா திட்டடமானது ரூ.8/- என்ற விலைக்கு கூடுதல் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் நுழைவு நடக்காமல் போயிருந்தால், இந்த அளவிலான மொபைல் தரவு மற்றும் அழைப்பு விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.!


Click it and Unblock the Notifications