செருப்பு தைக்கும் தொழிலாளியை 'கெளரவப்படுத்திய' அப்துல் கலாம்..!

|

ஒருமுறை அப்துல் கலாம் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது 'கரண்ட்' போய் விட்டது, அப்போது கலாம் என்ன செய்தார் தெரியுமா..? ஒரு முறை மதிற்சுவர்களில் கண்ணாடி பீங்கான்காளை பொருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அது ஏன் என்று தெரியுமா..? இப்படி மதிப்புக்கு உரிய அப்துல் கலாம் பற்றிய பல 'குட்டிக்குட்டி' கதைகள் நமக்கு தெரியாமலேயே போய் விட்டன. முக்கியமாக, செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை அப்துல் கலாம் 'கெளரவப்படுத்திய' கதை..!

செருப்பு தைக்கும் தொழிலாளியை 'கெளரவப்படுத்திய' அப்துல் கலாம்..!

அப்துல் கலாம் முதலில் ஒரு சிறந்த மனிதப்பிறவி, பின் தான் மாபெரும் விஞ்ஞானி, இந்தியாவின் ஏவுகணை மனிதன், மக்களின் குடியரசு தலைவர், தலைச்சிறந்த குடிமகன் என எல்லாம்..! அவர் வாழ்வில் நடந்த சுவாரசியமான சின்ன சின்ன கதைகளை கேட்டால், அப்துல் கலாம் எவ்வளவு பெரிய புனிதமான மனிதப்பிறவி என்பது புரியும்..!

உரை :

உரை :

ஒரு முறை மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது 'கரண்ட்' போய்விட்டது. உடனே கீழே இறங்கி வந்து சுமார் 400 மாணவர்களுக்கு நடுவே நின்று, தன்னால் முடிந்த கனத்த குரலை கொண்டு உரையை தொடர்ந்தாரம்..!

கண்ணாடி பீங்கான் :

கண்ணாடி பீங்கான் :

ஒருமுறை தன் பாதுகாப்பிற்காக மதிற்சுவரில் கண்ணாடி பீங்கான்களை பொறுத்துவதை நிராகரித்து விட்டார். ஏனெனில் அவைகள் பறவைகளை காயப்படுத்தக் கூடும் என்பதால்..!

செருப்பு தைக்கும் தொழிலாளி :

செருப்பு தைக்கும் தொழிலாளி :

கேரளாவின் ராஜ் பவனில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, குடியரசு தலைவரின் விருந்தினராக இருவரை உடன் அழைத்து சென்றார் அப்துல் கலாம். ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி, மற்றொருவர் சிறிய ஓட்டல் ஒன்று வைத்து நடத்துபவர்..!

யோசனை :

யோசனை :

ஒருமுறை மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர்களோடு நேரம் செலவிட்டது மட்டுமின்றி அவர்களின் யோசனைகளை மிகவும் கவனமாக கேட்டறிந்தாரம்..!

சேமிப்பு :

சேமிப்பு :

கலாம் அவர்கள் தன் வாழ்நாள் சேமிப்பு மற்றும் தன் சம்பளம் ஆகிய அனைத்தையும் பூரா (PURA) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்க்கு வழங்கி கொண்டிருந்தாராம்..!

நன்றி :

நன்றி :

தனக்கு வரும் அத்துணை பரிசு மற்றும் கடிதங்களுக்கும் அவரே தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாய் கொண்டிருந்தார், அப்துல் கலாம்..!

புகைப்படம் :

புகைப்படம் :

ஒரு முறை நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் ஆகி கொண்டே போன போதும், எல்லா குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னாராம்..!

நாற்காலி :

நாற்காலி :

ஒரு நிகழ்ச்சியில் தனக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தன்னை விட பெரிய நாற்காலி ஒன்றில் அமர மறுத்துவிட்டாராம், வேறொரு நாற்காலியில் தான் அமர்ந்தாராம் அப்துல் கலாம்..!

கேள்வி :

கேள்வி :

குடியரசு தலைவராக இருக்கும் போது 'யாஹூ ஆன்சார்ஸ்' வலைதளத்தில் தீவிரவாதம் சார்ந்த கேள்வி ஒன்றையும் கேட்டார் அப்துல் கலாம்..!

 துண்டு கீரை :

துண்டு கீரை :

கலிஃபோர்னியாவில் நடைப்பெற்ற மாநாடு ஒன்றில் இந்திய மாணவர் ஒருவரை தன் தட்டில் சாப்பிடும்படி சொன்னாராம்..! ஒரு துண்டு கீரையை எடுத்து அந்த மாணவர் சாப்பிட்டாராம்..!

ஐ யம் கலாம் :

ஐ யம் கலாம் :

அணு இயற்பியல் தொடங்கி ஆன்மீக அனுபவம் வரை மொத்தம் 15 புத்தகங்களை எழுதி உள்ள அப்துல் கலாமை பற்றி 'ஐ யம் கலாம்' (I am kalam) என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் (2011) வெளியானது குறிப்பிடத்தக்கது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>அமெரிக்காவை ஆளும் 'சக்தி வாய்ந்த' இந்தியர்கள்..!</strong>அமெரிக்காவை ஆளும் 'சக்தி வாய்ந்த' இந்தியர்கள்..!

<strong>தெரியுமா ? கடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...!</strong>தெரியுமா ? கடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X