பெத்த தகப்பன் பண்ணுற காரியமா இது.? இப்டி பண்ணிடீங்களே பில் கேட்ஸ்.!

  "பில் கேட்ஸ்" நம் காதுககளில் அடிக்கடி விழுமொரு "பணக்கார" பெயர். பொதுவாகவே "பெரிய மனுஷன்" என்றாலே பல ரகசியங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் நம்ம ஆளு "ரொம்ப ரொம்ப பெரிய மனுஷன்" என்பதால், நிச்சயமாக ஏதாவது ஒரு சுவாரசியமான மேட்டர் சிக்கும் என்று கிளறி பார்த்ததில், ஒன்றல்ல மொத்தம் 5 மேட்டர்கள் கிடைத்தது.

  பெத்த தகப்பன் பண்ணுற காரியமா இது.? இப்டி பண்ணிடீங்களே பில் கேட்ஸ்.!

  ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2018-ஆம் ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடத்திற்கு போட்டிபோடும் பில்லியனர்களின் ஒருவரான பில் கேட்ஸ், ஒரு அப்பாவாக தன் பிள்ளைகளுக்கு செய்த ஒரு காரியம், 24 பாத்ரூம்கள் உட்பட பல விஷயங்களை இந்த தொகுப்பில் காணவுள்ளோம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்கூல் படிக்கும் போதே "பிளே பாய் வேலை".!

  ஸ்கூலில் முதன் முதலாக கம்ப்யூட்டரை பார்த்த போது நாம் என்ன செய்தோம் என்று ஞாபகம் இருக்கிறதா.? பெயிண்ட் ஓப்பன் பண்ணி கலர் அடிச்சுட்டு கிடந்தோம். அந்த மவுஸ் பாலை வெளியே எடுத்து உருட்டி உருட்டி விளையாடினோம். ஆனால், நம்ம பில் கேட்ஸ் என்ன செஞ்சாரு தெரியுமா.? பிகர் உஷார் பண்ணாருப்பா.!

  எப்படி.?

  முதல் முதலாக கம்ப்யூட்டர்களை பெற்ற அமெரிக்கா பள்ளிகளில், பில் கேட்ஸ் படித்த பள்ளியும் ஒன்றாகும். ஏற்கனவே பெரிய அளவிலான கம்ப்யூட்டர் ஞானத்தை கொண்டிருந்த பில்கேட்ஸ், அவரின் ஸ்கூல் கம்ப்யூட்டரில், டிக்-டாக்-டோ போன்றதொரு கேமை வடிவமைத்தார். சமத்து பிள்ளையாக கேம் உருவாக்கிய பில் கேட்ஸ், அடுத்து செய்த கிருஷ்ணர் வேலை இருக்கே. அடேங்கப்பா.!

  கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே.! ஓ..ஓஒ.!

  தனது ஸ்கூல் கம்ப்யூட்டரை ஹேக் செய்த பில் கேட்ஸ், தனக்கு பிடித்த வகுப்பு தோழிகளுக்கு நடுவே தன்னை தானே அமர்த்திக்கொள்ளும் படியாக வகுப்பு இருக்கைகளில் மாற்றங்கள் செய்துள்ளார். இந்த மேட்டரை அறிந்த பின்னர், நான்லாம் என்ன இழவுக்கு தான் பி.எஸ்சி கம்ப்யூட்டர் படிச்சேனோனு புலம்ப தோணுது, மக்களே..! உங்க கிட்ட இருந்து ஏதாச்சும் புகைச்சல் கிளம்புதா.?

  ஒரு வீடு கட்ட 7 ஆண்டுகள்.!

  பள்ளி காலத்திலேயே ஹேக் செய்யுமளவு திறன் கொண்டிருந்ததால் தான், பில் கேட்ஸ் தற்போது 63 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக கொண்டுள்ளார். வாஷிங்டனில் அமைந்துள்ள இந்த வீட்டின் அளவு சுமார் 66 ஆயிரம் சதுரடி ஆகும். இதை கட்டி முடிப்பதற்காக எடுத்துக்கொண்ட காலம் என்னவென்று தெரியுமா.? - சுமார் 7 ஆண்டுகள்.!

  24 ரெஸ்ட் ரூம்கள்.!

  ஒரே நேரத்தில் 200 விருந்தாளிகளை கூட தக்கவைக்கும் பார்ட்டி ரூம், 24 ரெஸ்ட் ரூம்கள், ஆறு சமையலறைகள் உட்பட வானமே எல்லை என்கிற அளவில் போய்க்கொண்டே இருக்கிறது அந்த அரண்மனை. பெண்கள் மீதான கண், ஆடம்பரம் மீதான ஆர்வம் என பில் கேட்ஸ் மிகவும் கூலான மனிதராக தெரிகிறார் அல்லவா.? அடுத்தது என்னவென்று பார்ப்போம்.!

  நண்பனுடன் இணைந்து..

  கல்லூரி படிப்பானது இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலைப்பாட்டில் ஹார்வர்ட்டில் இருந்து டிராப்-அவுட் ஆனார் பில் கேட்ஸ். ஏனெனில் புதிய தலைமுறையினருக்கான கணினி நிரலாக்க மற்றும் எழுதும் மென்பொருளின் கனவுகளை அவர் முயற்சிக்க விரும்பினார். பில் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆலன் ஆகியோரின் உதவியுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதற்கு மைக்ரோசாப்ட் என்று பெயரிட்டனர்.

  டிராப்-அவுட் ஆனது என்னாச்சு.?

  அந்த பட்டப்படிப்பை 2007 ஆம் ஆண்டில் முடித்தவுடன், பில் கேட்ஸ் ஹார்வர்டில் இருந்து கௌரவ பட்டம் ஒன்றை பெற்றார். அதாவதுடிராப்-அவுட் ஆகி வெளியேற்றப்பட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வாங்கினார். இந்த இடத்தில் "டாடி எனக்கொரு டவுட்" எழுகிறது. கத்துக்குட்டியாக இருந்த காலத்திலேயே கலக்கிய பில் கேட்ஸ், ஜாம்பவானாக உருமாறிய பின்னர் பரீட்சைக்கு படித்து இருப்பாரா.? இல்லை சும்மாவே போய் எழுதி இருப்பாரா.? அவரைத்தான் கேட்க வேண்டும்.

  நிஜமாகவே புத்திசாலியா.? இல்லை அதிர்ஷ்டமா.?

  சிலரால் உண்மையை ஜீரணித்துக்கொள்ளவே முடியாது. பில் கேட்ஸ்-ன் ஊழியர்களுக்கு தான் திறமை உள்ளது. அதை வைத்து தான் பில் கேட்ஸ் முன்னேறுகிறார் என்றதொரு 'டால்க்' உண்டு. அவர்களுக்கெல்லாம் சாட் டெஸ்ட் என்பதை பற்றி கூற விரும்புகிறேன்

  சாட் டெஸ்ட் என்றால் என்ன.?

  SAT என்பது ஸ்டாண்டர்ட்டைஸ்டு டெஸ்ட் எனப்படும். கடந்த 1926-ல் இருந்து, அமெரிக்காவில் பரவலான முறையில் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும் இந்த டெஸ்டை பில் கேட்ஸும் எழுதினார். அதில் அவர் எடுத்த மதிப்பெண்கள் என்னவென்று தெரியுமா.? 1600-க்கு 1590.!

  Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
  ஒரு அப்பாவாக பில் கேட்ஸ் செய்த காரியம்.!

  ஒரு அப்பாவாக பில் கேட்ஸ் செய்த காரியம்.!

  ஜனவரி 17, 2018-ன் தகவலின்படி பில் கேட்ஸ்-ன் சொத்து மதிப்பு 94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதில் அவரின் பிள்ளைகளுக்கு சேரப்போகும் பங்கு என்ன தெரியுமா.? வெறும் 10 மில்லியன் டாலர்கள் தான். ஏன் என்று கேட்தற்கு "அவர்கள் எதையும் செய்ய தகுதியானவர்களாக இருக்க வேண்டும். மாறாக எதையும் செய்ய கூடாதவர்களாக இருக்க கூடாது" என்று கூறிவிட்டார். அதாவது அதீத பணம் அவர்களை திறமையற்றவர்களாக மாற்றிவிட கூடாது என்பது தான் பில் கேட்ஸின் நோக்கம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Unknown Facts About The Billionaire Bill Gates. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more