Home
News

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஆண்ட்ராய்டு எம் அம்சங்கள்

By Meganathan

கூகுள் ஐ/ஓ 2015 விழாவில் அன்நிறுவனத்தின் துணை தலைவர் டேவ் புர்க் ஆண்ட்ராய்டு எம் இயங்குதளம் குறித்தும் அதன் வெளியீடு குறித்த சில தகவல்களையும் வெளியிட்டார்.

கடந்த ஆண்டு கூகுள் வெளியிட்ட ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் புதிய வடிவமைப்பு மற்றும் இன்டர்பேஸ் மாற்றங்களை கொண்டிருந்தது. லாலிபாப் அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெளியீடாக கூகுள் கருதியது.

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஆண்ட்ராய்டு எம் அம்சங்கள்

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய அம்சங்கள் மற்றும் புதிய சேவைகளை ஆண்ட்ராய்டு எம் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு எம் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சில அம்சங்களை பாருங்கள்..

கைரேகை வசதி

கைரேகை வசதி

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் கைரேகை வசதி வழங்கப்பட்டுள்ளதோடு கைரேகை வசதி கொண்டிருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு பே

ஆண்ட்ராய்டு பே

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தின் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக ஆண்ட்ராய்டு பே அமைந்திருக்கின்றது. இந்த அம்சமானது என்எப்சி வசதி மற்றும் ஆண்ட்ராய்டு கிட்காட் கொண்டிருக்கும் அனைத்து கருவிகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தின் முக்கியமாந அம்சமாக டோஸ் இருக்கின்றது. இந்த அம்சமானது போனின் பேட்டரியை சிறப்பாக பயன்படுத்துவதோடு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்க வழி செய்கின்றது.

சார்ஜிங்

சார்ஜிங்

நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு பேட்டரியை சீக்கிரம் சார்ஜ் செய்ய உதவும் யுஎஸ்பி-சி சப்போர்ட் வழங்கப்படுகின்றது. ஆப்பிளின் லைட்னிங் கனெக்டர் போன்ற இந்த யுஎஸ்பி வேகமாக சார்ஜ் செய்ய வழி செய்கின்றது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அம்சங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க முடியும்.

சவுண்டு

சவுண்டு

புதிய இயங்குதளத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரிங்டோன், அலாரம், மியுசிக் ப்ளேபேக் மற்றும் வாய்ஸ் கால் ஆப்ஷன்களை கஸ்டமைஸ் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
check out here the list of unknown Android M features. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X