வீடியோ- ரோபோக்களாக மாறிய மாணவர்கள்: கொரோனாவுக்கு மத்தியில் அட்டகாசமாக நடந்த பட்டமளிப்பு விழா!

|

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரோபோக்களை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் ஜப்பான் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

அதேபோல் இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பு

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பு

மேலும் மாநிலங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம்

பிரதமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம்

ஜப்பானில் 5 மாகாணங்களில் பிரதமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானிலும் அதிகரித்து வருவதால் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த 7 ஆம் தேதிமுதல் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 92 பேர் பலி

ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 92 பேர் பலி

அதேபோல் ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 92 பேர் பலியாகியுள்ளனர். 3906 பேர் பாதிப்படைந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜப்பானில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் ஷின்ஜோ அபே திட்டமிட்டார்.

business breakthrough என்னும் பல்கலைக்கழகம்

business breakthrough என்னும் பல்கலைக்கழகம்

இதனிடையே ஜப்பானில் business breakthrough என்னும் பல்கலைக்கழகத்தில் ரோபோக்கள் மாணவர்களாகிய மாறி தங்களது பட்டங்களை பெற்றுக்கொண்டன. கொரோனா வைரஸ் அச்சத்தால் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்ய பல்கலைக் கழகம் எண்ணியது. இருப்பினும் பிபிடி பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையின் டீன் பேராசிரியர் சுகோ யானகா அவர் ஒரு அட்டகாச சிந்தனையை அறிமுகப்படுத்தினார். மேலும் 'நியூ மீ' எனும் ரோபோக்களை பயன்படுத்தி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

ரோபோக்கள் முகம் இருக்கும் இடத்தில் ஐபாட்கள்

ரோபோக்கள் முகம் இருக்கும் இடத்தில் ஐபாட்கள்

இந்த விழாவானது ரோபோக்கள் முகம் இருக்கும் இடத்தில் ஐபாட்கள் பொருத்தப்பட்டன. இந்த ஐபாட்களில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் லாகின் செய்து தங்களது பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!

நியூ மி எனும் ரோபோக்கள்

நியூ மி எனும் ரோபோக்கள் பாதி இயந்திரங்களாகவும் முகம் மனிதர்களாவும் ஒவ்வொன்றாக வந்து தங்களது பட்டங்களை பெற்றுக் கொண்டன. இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Best Mobiles in India

English summary
university in japan has held a graduation ceremony via robots

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X