மனிதர்களால் இயக்கப்படும் ரோபோ.. ஹாலிவுட் படத்தை கண்முன் ஓட்டிய சீன நிறுவனம்.. சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
உலகம் முழுவதும் அதிநவீன தொழில்நுட்ப வசதிக்குத் தான் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் Transformers, Pacific Rim படங்களில் காணப்பட்ட கற்பனை கதாபாத்திரங்கள் தற்போது சீனாவில் ரோபோவாக (Robot) வடிவமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சீனாவில் உள்ள UNITREE எனும் ரோபோடிக்ஸ் நிறுவனம் தான் உலகின் முதல் மனித வடிவ இயந்திர உடையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் GD01 என பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன இயந்திர உடை மனிதர்களின் சாரசரி உயரத்தை விட இரண்டு மடங்கும் பெரியதாக உள்ளது.

இந்த அதிநவீன இயந்திரத்திற்குள் ஏறி அமர்ந்த யூனி ட்ரீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வாவ் ஜிங்ஜிங், அதனை எப்படி இயக்குவது எனச் செயல்முறை விளக்கம் கொடுத்தார். அந்த சமயத்தில் வலுவான சுவர் ஒன்றை இயந்திரம் உடைப்பதும் காட்சிப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ரோபோ இரண்டு கால்களில் இருந்து எளிதாக நான்கு கால்களுக்கு மாற முடியும் எனவும் அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த இயந்திரத்தில் உள்ள இரண்டு கால்கள் மூலம் சாலைகளில் வேகமாக நடக்க முடியும் எனவும், நான்கு கால்களில் படிக்கட்டுகள் மற்றும் சிக்கலான நிலப்பரப்புகளில் எளிதாகப் பயணிக்க உதவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒரு தொழில்நுட்ப வீடியோ சாதாரணமாக வைரலாகாது. ஆனால் இந்த இயந்திரத்தின் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. அதற்கான காரணம் தொழில்நுட்ப திறன் மட்டுமல்ல, அது மனிதர்களின் கற்பனையை நேரடியாகத் தொடுகிறது.
இதை பார்த்தால் Machine போல மட்டும் தோன்றவில்லை. அது ஒரு பெரிய மெக்கானிக்கல் உயிரினம் போலத் தெரிகிறது. அதன் இயக்கம், சமநிலை, மனிதருடன் இணைந்து செயல்படும் விதம் எல்லாம் மக்களிடம் ஒரு உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்குகிறது. அதனால் தான் பலர் இதை சினிமா லெவல் டெக்னாலஜி என்று அழைக்கின்றனர்.
அதுவும் சினிமாவில் ஒரு பெரிய ரோபோவை உருவாக்குவது மிகவும் எளிது. CGI பயன்படுத்தி எதையும் காட்டலாம். ஆனால் உண்மையான உலகில் அப்படிப்பட்ட ஒரு இயந்திரத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவால் தான். ஒரு மனிதரை தூக்கிக்கொண்டு சமநிலையுடன் நகரும் ரோபோ உருவாக்க வேண்டுமெனில் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சரியாக நிர்வகிக்க வேண்டும். எடை, மோட்டார் சக்தி, Battery திறன், வெப்ப கட்டுப்பாடு, சென்சார் ரியாக்ஷன், AI Motion Control போன்ற அனைத்தும் இணைந்து வேலை செய்ய வேண்டும்.ஆகவே இதை அனைத்தும் கவனத்தில் கொண்டுதான் இந்த புதிய வகை மனித வடிவ இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்போது AI மிக வேகமாக வளர்ந்திருப்பதால் ரோபோக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது. பழைய ரோபோக்கள் சில வேலைகளை மட்டுமே செய்தன. ஆனால் புதிய தலைமுறை AI ரோபோக்கள் சுற்றுப்புறத்தை புரிந்து கொண்டு Balance மற்றும் Movement ஐ தானாக சரிசெய்கின்றன.
அதுவும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வகை ரோபோ இயந்திரம் மனிதர் தூக்க முடியாத கனமான பொருட்களை தூக்குவது, ஆபத்தான சூழலில் வேலை செய்வது, பேரிடர் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் உதவக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: interestingengineering


Click it and Unblock the Notifications