யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி!

|

யூடியூப்பில் பதிவேற்றிய வீடியோக்கள் மூலமாக மாதம் ரூ.4 லட்சம் கிடைக்கிறது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்திருக்கிறார்.

மாதம் ரூ.4 லட்சம் வருமானம்

மாதம் ரூ.4 லட்சம் வருமானம்

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்ட முன்னேற்றத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். அதில் தனது அமைச்சகம் சாலை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசகரிக்கள் மதிப்பீடு செய்ய தொடங்கி இருப்பதாக கூறினார். யூடியூப்பில் பதிவேற்றிய வீடியோக்கள் மூலமாக மாதம் ரூ.4 லட்சம் கிடைக்கிறது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்திருக்கிறார்.

யூடியூப்பில் வீடியோ

யூடியூப்பில் வீடியோ

தொற்று நோய் காலத்தில் மேடையில் வெளியிடப்பட்ட அவரது விரிவுரை வீடியோக்களின் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதால், யூடியூப்பில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.4 லட்சம் ராயல்டி என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

கொரோனா ஊரடங்கில் தொடங்கிய பணி

கொரோனா ஊரடங்கில் தொடங்கிய பணி

கொரோனா ஊரடங்கு காலத்தில் இரண்டு வேலைகளை தாம் செய்ததாக குறிப்பிட்டார். சமையல் செய்ததாக குறிப்பிட்ட அவர், ஆன்லைன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட பல இடங்களில் 950-க்கும் மேற்பட்ட விரிவுரையாற்றியதாக கூறினார். யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றுவதன் மூலம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, மாதம் ரூ.4 லட்சம் ராயல்டி கிடைப்பதாக கட்காரி குறிப்பிட்டார்.

மாதம் ரூ.4 லட்சம் ராயல்டி

மாதம் ரூ.4 லட்சம் ராயல்டி

இதுகுறித்து பேசிய அவர், நான் சமையல்காரராகி, வீட்டில் சமையல் செய்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விரிவுரைகளை வழங்க ஆரம்பித்தேன். யூடியூப்பில் இதுவரை 950-க்கும் மேற்பட்ட விரிவுரைகளை ஆன்லைனில் வழங்கியதாக கூறினார். எனது யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது எனவும் யூடியூப் தற்போது தனக்கு மாதம் ரூ.4 லட்சம் ராயல்டி கிடைப்பதாகவும் கூறினார்.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட வீடியோ

யூடியூப்பில் வெளியிடப்பட்ட வீடியோ

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும். அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும்.

யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ

யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ

பலரும் வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவேற்று வருகின்றனர். ஒரு சிலர் பிரபலமடைய வேண்டும் என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சிலர் எதிர்பாராத வீடியோக்களையும், தங்களது அன்றாட நடைமுறைகளையும் பதிவிடுவார்கள் அந்த வீடியோ வைரலாகி பிரபலமடைவது உண்டு.

யூடியூப் ஷார்ட்ஸ்

யூடியூப் ஷார்ட்ஸ்

இனி இன்ஸ்டார ரீல்ஸ் போன்றே யூடியூப் பயன்பாட்டில் யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம் கிடைக்கும் என யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்தார். பயனர்கள் 30 வினாடிகள் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை வெளியிட்டு அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் ரூ.7 லட்சம் வரை ஒரு மாதத்திற்கு வருமானம் ஈட்ட முடியும் என யூடியூப் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பர்கள் வெளியிடப்படும் ஷார்ட் வீடியோ

யூடியூப்பர்கள் வெளியிடப்படும் ஷார்ட் வீடியோ

அதேபோல் யூடியூப்பர்கள் வெளியிடும் ஷார்ட் வீடியோவில் அதிக பார்வையாளர்கள் பெறும் 1000 திறமைவாய்ந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பெற்ற பார்வையாளர்கள் அடிப்படையில் மாதம் ரூ.74,000 முதல் ரூ.7.4 லட்சம் வரை வழங்கப்பட இருக்கிறது என யூடியூப் தரப்பில் யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் குறிப்பிட்டார்.

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

யூடியூப் ஷார்ட்ஸ் அம்சத்தில் சூப்பர் சாட் என்ற புதிய அம்சம் இருக்கிறது. இந்த புதிய அம்சம் மூலம் பார்வையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டாலும் வருவாயை அதிகரிக்கச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு சொந்தமான யூடியூப் தளம் யூடியூப் ஷார்ட்ஸ்-ல் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. நிறுவனம் படைப்பாளர்களுக்கு என 100 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.

ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம்

ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம்

வைரல் வீடியோக்களுக்கு இந்த முதலீட்டை நிறுவனம் செலவு செய்ய இருக்கிறது. யூடியூப் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் படைப்பாளர்கள் மாதம் ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம் ஈட்டலாம். இதற்கு யூடியூப் படைப்பாளர்கள் பயனர்களை கவர்ந்து பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Union Minister Nitin Gadkari said he Gets Rs.4 lakh Every Month as royalty From YouTube videos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X