Home
News

BSNL பயனர்களே மனச தேத்திக்கோங்க: 4G, 5G சேவை குறித்து உண்மையை அம்பலப்படுத்திய மத்திய மந்திரி.!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து மாறி தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை.

 5ஜி சேவை?

5ஜி சேவை?

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2024-ம் ஆண்டில் தனது சொந்த 5ஜி சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

அதாவது ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று தொடங்கப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு (2024) முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறினார்.

 4ஜி சேவை?

4ஜி சேவை?

மேலும் இதுதொடர்பாக அவர் கூறியது என்னவென்றால், பிஎஸ்என்எல் 5ஜி சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்றும், இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றும் தெரிவித்தார். பின்பு இந்த ஆண்டு 4ஜி சேவையும் அடுத்த ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம் என்று தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ் மற்றும் C-DOT

டிசிஎஸ் மற்றும் C-DOT

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டிசிஎஸ் மற்றும் C-DOT ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து 4ஜி திட்டத்தில்
செய்ய வேலை செய்து வருகிறது. இத்திட்டத்தை அப்படியோ ஒரு வருடத்தில் 5G க்கு மேம்படுத்தப்படும் என அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆகஸ்ட் 15

2023 ஆகஸ்ட் 15

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 2022 இந்தியன் மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில், 5ஜி சேவையை 2023 ஆகஸ்ட் 15-க்குள் அறிமுகம் செய்யும் எனன அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது இதை 2024-ம் ஆண்டு எனத் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் மறைமுக கட்டண உயர்வைக் கொண்டுவந்துவிட்டது பிஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது

மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது

telecomtalk வலைத்தளத்தின் தகவல்படி பிஎஸ்என்எல் நிறுவனம் மூன்று ப்ரிபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி உள்ளது. அதாவது தற்போது ரூ.269, ரூ.499, ரூ.769 ப்ரீபெய்ட் திட்டங்களில் நன்மையைக் குறைத்து மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பிஎஸ்என்எல்.

 பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. தற்போது இதன் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இப்போது 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு ரூ.8.96 இருந்தது, தற்போது ரூ.9.60-ஆக உயர்ந்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கையில், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்.

 பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்தபோது 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. பின்பு கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்களாகக் குறைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு ரூ.6.23 இருந்தது, தற்போது ரூ.6.65-ஆக உயர்ந்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஜிங் மற்றும் கேமிங் நன்மைகள் உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 84 நாட்கள் தான வேலிடிட்டி கிடைக்கும். அதாவது திட்டத்தின் தினசரி செலவு ரூ.8.54ல் இருந்து தற்போது ரூ.9.15 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல்ஸ் கேம் சேவை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி தற்போது 84 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Union Minister Ashwini Vaishnav has said that BSNL 5G service will be launched in 2024: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X