பள்ளிகளுக்கு பறந்த புது உத்தரவு.. பெற்றோர்களே Google Pay, PhonePe ஆப்பை ரெடியா வச்சிக்கோங்க!
பள்ளி சேர்க்கை மற்றும் பள்ளி தேர்வு கட்டணங்களை வசூலிப்பதற்கு, யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை ( Unified Payments Interface) ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் (Union Education Ministry) வலியுறுத்தி உள்ளது.
நிர்வாக செயல்முறைகளை நவீனமயமாக்குவதையும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வசதியை மேம்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. இதுகுறித்து - மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் என்சிஇஆர்டி (NCERT), சிபிஎஸ்இ (CBSE), கேவிஎஸ் (KVS) மற்றும் என்விஎஸ் (NVS) போன்ற தன்னாட்சி அமைப்புகளுக்கு கடிதமும் அனுப்பட்டுள்ளது.

அந்த கடிதத்த்தில், பள்ளிகளில் நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்த யுபிஐ, மொபைல் வாலட்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களை பயன்படுத்துவதை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (Department of School Education and Literacy) வலியுறுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கை, சட்டமன்றம், கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் மூலம் 'வாழ்க்கை மற்றும் பள்ளிப்படிப்பை எளிதாக்குவதை' ஊக்குவிப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். டிஜிட்டல் கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வது, அதிக வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் தொலைதூரத்தில் பணம் செலுத்தும் திறன் உள்ளிட்ட பல நன்மைகளை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரொக்க அடிப்படையிலான பணப்பரிமாற்றத்திலிருந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாறுவது பள்ளி நிர்வாகத்தை நவீனமயமாக்கும் என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் குடிமக்களை மையமாக கொண்ட, டிஜிட்டல் முறையில் முன்னேறிய நாடாக 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் இலக்கை ஆதரிக்கும் என்றும் அமைச்சகம் எடுத்துரைத்தது.
பள்ளிகளில் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் கட்டண முறைகளை எளிதாக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன, இது நவீனமயமாக்கப்பட்ட கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஆனால் இந்த முறை எப்போதுநடைமுறைக்கு வரும் அல்லது மெல்ல மெல்ல அமலுக்கு வருமா என்பது குறித்து தகவல் இல்லை; ஏனென்றால் இதுவொரு பரிந்துரையை ஆகும்; விதி அல்ல.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் ஆன நீரஜ் மிட்டல், கூகுள் பே (Google Pay) ஆனது எப்ஆர்ஐ (FRI) என்கிற ஃபிராட் ரிஸ்க் இன்டிகேட்டர் (Fraud Risk Indicator) உடன் இணைக்கப்படவில்லை என்று பகீர் கிளப்பி உள்ளார்.
அறியாதோர்களுக்கு எப்ஆர்ஐ என்பது டிஓடி (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு துறையால் (Department of Telecommunications) உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு" அமைப்பு ஆகும். இது நிதி மோசடிகளுடன் இணைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மொபைல் எண்களை "ஆபத்தானது" என்று சுட்டிக்காட்டும், குறிப்பாக டிஜிட்டல் கட்டண தளங்களில் நடக்கும் மோசடியான பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவும்.
அதாவது நீங்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பணம் செலுத்த முயற்சிக்கும்போது, மீடியம்-ரிஸ்க் நம்பர்களுக்கான வார்னிங் ஆனது பாப்-அப்களாக தோன்றும். அதுவே ஹை-ரிஸ்க் மற்றும் வெரி ஹை-ரிஸ்க் நம்பர்களாக வைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்த பரிவர்த்தனையே தடை செய்யப்படும். இது கூகுள் பே ஆப்பில் இல்லாததால் - கூகுள் பேவின் கீழ் நடக்கும் 3 யுபிஐ பேமெண்ட்களில் 1 பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கூகுள் பே ஆனது சராசரியாக அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளிலும் சுமார் 30% முதல் 35% பங்கை கொண்டுள்ளது என்பதும், கூகுள் பேயின் போட்டியாளர்களான போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகியவைகள் ஏற்கனவே எப்ஆர்ஐ அமைப்பை தங்கள் கட்டண சேவைகளில் ஒருங்கிணைத்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








