மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் யார் தெரியுமா?
2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட் உட்பட 12 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

தொடர்ந்து 43 அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. இதில் மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக அஸ்வினி வைஸ்ணவ் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அஸ்வினி வைஸ்ணவ் ரயில்வே, தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.
தொழில்நுட்ப துறை, மின்னணுத் துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட துறையாகும். தகவல் தொழில்நுட்பத்துறை என அழைக்கப்பட்ட இந்த துறை 2012 ஆம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையாக மாற்றப்பட்டது. பின் தகவல் தொழில்நுட்பத்துறை முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சம் உருவானது.
தற்போது மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஸ்வினி வைஸ்ணவ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி ஆவார். தற்போது இவர் பாஜக-வின் உறுப்பினராக உள்ளார். 28 ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஒடிசா மாநிலத்தில் இருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

43 அமைச்சர்களின் பட்டியல்
1.நாராயணன் ரானே
2. சர்பானந்த சோனோவால்
3. வீரேந்திர குமார்
4. ஜோதிராதித்ய சிந்தியா
5. ராம்சந்திர பிரசாத் சிங்
6. அஸ்வின் வைஷ்ணவ்
7. பாஸுபதி குமார் பராஸ்
8. கிரண் ரிஜிஜு
9. ராஜ்குமார் சிங்
10. ஹர்தீப் சிங் புரி
11. மன்சுக் மன்தாவியா
12. பூபேந்தர் யாதவந்
13. புருஷோத்தம் ரூபாலா
14. கிஷன் ரெட்டி
15. அனுராக் சிங் தாக்கூர்
16. பங்ஜக் சவுத்ரி
17. அனுப்ரியா சிங் படேல்
18. சத்ய பால் சிங் பாகல்
19. ராஜீவ் சந்திரசேகர்
20. சோபா கராண்டஜே
21. பானு பிரதாப் வர்மா
22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
23. மீனாட்சி லேகி
24. அனுபமா தேவி
25. நாராயணசாமி
26. கவுஷல் கிஷோர்
27. அஜய் பட்
28. பி எல் வர்மா
29. அஜய் குமார்
30. சவுகான் தேவ்சிங்
31. பகவந்த் கூபா
32. கபில் மோரேஷ்வர் பாட்டீல்
33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்
34. சுபாஷ் சர்கார்
35. பகவத் கிஷன் ராவ் காரத்
36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்
37. பாரதி பிரவீன் பவார்
38. பிஷ்வேஸ்வரர் துடு
39. சாந்தனு தாகூர்
40. முஞ்சபரா மகேந்திர பாய்
41. ஜான் பார்லா
42.எல் முருகன்
43. நிஸித் பிரமானிக்


Click it and Unblock the Notifications