Union Budget Mobile App: மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் நேரடியாக உங்கள் கையில்- எப்படி பதிவிறக்கம் செய்வது?

|

யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

மத்திய பட்ஜெட் மொபைல் பயன்பாடு

மத்திய பட்ஜெட் மொபைல் பயன்பாடு

2021 பட்ஜெட் தாக்கலை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நடைபெறும் அல்வா விழா படலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேநேரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் மத்திய பட்ஜெட் மொபைல் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

ஆவணங்களை எளிதாக பெறலாம்

ஆவணங்களை எளிதாக பெறலாம்

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பட்ஜெட் அச்சிடுதல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த யூனியன் பட்ஜெட் செயலி மூலம் பொதுமக்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்களையும் தகவல்களையும் எளிதாக பெறலாம் என கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக அச்சிடுதல் இல்லை

பட்ஜெட் தாக்கல் குறித்த முறை இத்தனை ஆண்டுகளாக அச்சிடுதல் வழியிலேயே பின்பற்றப்பட்டது. ஆனால் கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக முதல்முறையாக பட்ஜெட் தாள் அச்சிட வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய முன்னேற்றம் இதுஎன்றே கூறலாம்.

யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி

புதிதாக தொடங்கப்பட்ட யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என அனைவரும் எவ்வித தடையும் இன்றி பட்ஜெட் ஆவணங்களை அணுகலாம். இந்த பட்ஜெட் செயலி பொருளாதாக விவகாங்களின் வழிகாட்டுதலின்படி தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.

வலுவான புதிய சட்டம்: தனிநபர் தரவுகளை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை- பிரதமர் மோடி!வலுவான புதிய சட்டம்: தனிநபர் தரவுகளை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை- பிரதமர் மோடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஆவணங்களை இந்த மொபைல் செயலியில் பெறலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்கு கிடைக்கும். யூனியன் பட்ஜெட் ஆப்பை www.indiabudget.gov.in என்ற தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயன்பாட்டில் பட்ஜெட் ஆவணங்கள்

நிதி மசோதா, ஆண்டுக்கான நிதி ஆவணம், மானியங்கள் தேவை ஆகியவையோடு அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் இந்த மொபைல் பயன்பாட்டில் இருக்கும். இந்த பயன்பாடு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அணுக கிடைக்கும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபின் இந்த பயன்பாட்டில் பட்ஜெட் ஆவணங்கள் கிடைக்கும்.

source: zeenews.india.com

Best Mobiles in India

English summary
Union Budget 2021-22: Finance Minister Nirmala Sitharaman Launched Union Budget Mobile App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X