Home
News

Budget 2020: மொபைல் போன் உற்பத்தி ஊக்கம், மனித கழிவுகளை அகற்ற புதிய தொழில்நுட்பம்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஔவையாரின் ஆத்திச்சூடியையும், திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.

ஔவையார், திருவள்ளுவர்

ஔவையார், திருவள்ளுவர்

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து" என்ற குறளையும் மேற்கோள் காட்டினார். இதன் பொருள் நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர் என்பதாகும். அதேபோல் ஔவையாரின் "பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

பிரதமர் மோடியின் இலக்கானது டிஜிட்டல் இந்தியா என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றவாரான நடவடிக்கைள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. பணபரிவர்த்தனை உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மொபைல் போன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொபைல் போன் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்

மொபைல் போன் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்

பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் விவசாயத்தில் தொடங்கி வாசிக்கத் தொடங்கினார். அதன்பின் மொபைல் போன் உற்பத்தி இந்தியாவில் ஊக்குவிக்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போதுவரை சியோமி நிறுவனம் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை சிறுக சிறுக அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

 தொழில் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ. 27,300 கோடி

தொழில் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ. 27,300 கோடி

அதேபோல் தொழில்முனைவோர் தான் இந்தியாவில் மிகப்பெரிய பலம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ. 27,300 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதேபோல் இந்தியர்கள் இன்னும் வேலை தேடுபவர்களாக இல்லை தற்போது வேலை கொடுப்பவர்களாக மாறியுள்ளனர் எனவும் கூறினார்.

'பாரத் நெட்' இணையதள திட்டத்திற்கு ரூ.6,000 கோடி

'பாரத் நெட்' இணையதள திட்டத்திற்கு ரூ.6,000 கோடி

'பாரத் நெட்' இணையதள இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி செலவிடப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் 'வைபை' வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு ஆலோசனை பண பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை விவசாம் சார்ந்த தகவல்கள் கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்

புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்

குறிப்பாக மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் தாக்கலில் அறிவித்தார். இதன்மூலம் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

காற்று மாசை குறைக்கு ரூ.4400 கோடி

காற்று மாசை குறைக்கு ரூ.4400 கோடி

அதேபோல் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு மேல் இருக்கும் நகரங்களில் காற்று மாசை குறைக்கு ரூ.4400 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். சமீபத்தில் இந்திய தலைநகரம் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தையடுத்து அங்கு புதிய தொழில்நுட்பமாக காற்று சுத்திகரிப்பு டவர் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Union Budget 2020: FM nirmala sitharaman announces about mobile phone production, new technology to eliminate human waste
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X