Home
News

23,800mah பேட்டரி.. 200MP கேமரா.. 2TB ஸ்டோரேஜ்.. கீழே விழுந்த தரைக்கு தான் சேதம்.. போனுக்கு இல்லை..எந்த மாடல்?

யுனிஹெர்ட்ஸ் (Unihertz ) என்பது அதிகம் அறியப்படாத சீன ஸ்மார்ட்போன் பிராண்டாகும். இது தனித்துவனமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இந்த பிராண்டு இப்போது 23,800mah பேட்டரி (battery) திறன் கொண்ட 5ஜி (5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஆம், யுனிஹெர்ட்ஸ் (Unihertz) நிறுவனம், புதுமையான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த நிறுவனம் யுனிஹெர்ட்ஸ் லூனா (Unihertz Luna) என்ற நத்திங் ஃபோன் (1) போன்ற குளோன் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இப்போது, இந்த நிறுவனம் ​​பவர் பேங்க் போன்ற பேட்டரி திறன் கொண்ட ஒரு ரஃகெட் ஸ்மார்ட்போனை (rugged smartphone) அறிமுகப்படுத்தியுள்ளது.

23,800mah பேட்டரி.. 200MP கேமரா.. 2TB ஸ்டோரேஜ்.. முரட்டுத்தனமான போன்..

சரி, இப்போது நிறுவனம் ஒரு ஹெவியான பேட்டரி திறனுடன் அறிமுகம் செய்திருக்கும் புதிய 5ஜி போன் பற்றிய விபரங்களை பார்க்கலாம், யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் இந்த போனை யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 (Unihertz Tank 3) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, யுனிஹெர்ட்ஸ் நிறுவனத்தின் டேங்க் சீரிஸ் வரிசையில் மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 (Unihertz Tank 3):

அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் உறுதியான பாடியை கொண்டுள்ளது. இது 5G இணைப்பை வழங்குகிறது. குறிப்பிட்டு பிரமிக்கும் வகையில், இந்த சாதனம் மிகப் பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், இது 23,800mAh கொண்ட பெரிய பேட்டரியை பேக் செய்கிறது. இந்த பேட்டரியானது 1,800 மணிநேர ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்குகிறது.

இது 118 மணிநேர வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நேரம், 98 மணிநேர மியூசிக் பிளேபேக், 48 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 38 மணிநேர கேமிங் நேரத்தை வழங்குகிறது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது 120W வயர்டு சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை 0-90% வரை வெறும் 90 நிமிடங்களில் நிரப்புகிறது. தோராயமாக ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஸ்டோரேஜ் & சிப்செட் (Unihertz Tank 3 Storage and Chipset):

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஒரு ரஃகெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் பிரீமியம் பிளாக்ஷிப் போன்களுக்கு நிகரான அம்சங்களை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200 SoC) சிப்செட் மூலம் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இயக்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையில் இயங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டுகள் மூலம் 2TB ஸ்டோரேஜ் வரை ஆதரிக்கிறது.

200MP கேமரா.. எவ்வளவு பெரிய டிஸ்பிளே?

இது 2460 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் கொண்ட 6.79' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200MP பிரைமரி சென்சார், 50 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 64 எம்பி நைட் விஷன் ஸ்னாப்பர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா அமைப்புடன், முன்பக்கத்தில், 50MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 விலை (Unihertz Tank 3 Price):

இது 40மீ லேசர் ரேஞ்ச் ஃபைண்டர், இன்பிராரெட் சென்சார், 1200 லுமன்ஸ் பிரைட்னஸ் நிலை கொண்ட எல்இடி ஃப்ளாஷ்லைட், டூயல் சிம், 6GHz 5G இணைப்பு, WiFi 6, புளூடூத் 5.3, GNSS மற்றும் NFC போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது 666 கிராம் எடையை கொண்டுள்ளது. இந்த புதிய யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஸ்மார்ட்போனின் விலை $499.99 ஆகும். இந்திய மதிப்பில் இது ரூ. 41,500 விலையில் AliExpress வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Unihertz Tank 3 with 23800mah battery 200MP camera 16GB RAM 2TB storage launched check price and specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X