நோக்கியா பிளஸ் நத்திங்.. ஆண்ட்ராய்டு சாம்ராஜ்யமே ஆடிப்போகும் போன்! எந்த மாடல்?
ஆப்பிள், சாம்சங், நோக்கியா உள்ளிட்ட எந்தவொரு மிகப்பெரும் நிறுவனமும் தொட்டிராத டிசைனில் யுனிஹெர்ட்ஸ் (Unihertz) நிறுவனத்தின் ஜெல்லி ஸ்டார் (Jelly Star) ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச்சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று பெயர்பெற்றுள்ள, இந்த போனின் அம்சங்கள் வேற லெவலில் இருக்கிறது.
ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும், அதன் போன்களை எளிதில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க புதுவிதமான டிசைன்களையே முதலில் பின்பற்றுகின்றன. என்னதான் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் நன்றாக இருந்தாலும், டிசைன் சரியில்லை என்றால் கதை முடிந்தது. அந்த போனை பெயிலியர் மாடலில் வாடிக்கையாளர்கள் சேர்த்துவிடுவார்கள்.

இதனாலேயே, இப்போது வரும் மாடல்கள் அட்டகாசமாக வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட அட்டகாசமான டிசைன்களுக்கு பெயர்பெற்ற நிறுவனமென்றால், அது யுனிஹெர்ட்ஸ் என்னும் சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. இந்த நிறுவனத்தின் போன்கள் அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் அம்சங்களிலும் கூட அட்டகாசமாகவும் இருக்கும்.
இந்த வரிசையில், உலகிலேயே மிகச்சிறிய ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, யுனிஹெர்ட்ஸ் நிறுவனம். நத்திங் போன்களை போல டிரான்ஸ்பரென்ட் (Transparent) டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 4ஜி சிம், 48 எம்பி கேமரா என்று அம்சங்களில் அள்ளி தூக்குகிறது. இந்த போனின் மொத்த அம்சங்கள் பின்வருமாறு.

ஜெல்லி ஸ்டார் அம்சங்கள் (Jelly Star Specifications): இந்த போன் 3.0 இன்ச் (480 x 854 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.
மைக்ரோ எஸ்டி (Micro SD) கார்டு சப்போர்ட் உள்ளது. 10W சார்ஜிங் உடன் 2000 mAh பேட்டரி வருகிறது. டூயல் நானோ சிம் (Nano SIM) கார்டு வசதி உள்ளது. ப்ளூடூத் 5.3, (Bluetooth 5.3) மற்றும் வை-பை வி2.0 (Wi-Fi) இருக்கிறது. 2G, 3G, 4G சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜிபிஎஸ் (GPS), பேயோடியூ (BeoDou) மற்றும் கலிலியோ (Galileo) நேவிகேஷன் வசதி உள்ளது.
மேலும், பேக் மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Back Mounted Fingerprint Sensor), ஜி-சென்சார் (G-Sensor), காம்பஸ் கைரோஸ்கோப் (Compass Gyroscope), பிராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. 3.5மிமீ ஆடியோ ஜேக் வருகிறது.
ஃஎப்எம் ரோடியோ (FM Radio) உள்ளது. இந்த ஜெல்லி ஸ்டார் ஸ்மார்ட்போன் ரெட் (Red) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. 95.1 மிமீ நீளம், 49.6 மிமீ அகலம், 18.7 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த போனின் மொத்த எடை பேட்டரி உடன் சேர்த்து 116 கிராம் மட்டுமே இருக்கிறது. இந்த போன் கிக்ஸ்டார்டர் (Kickstarter) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், ஹாங்காங்கில் மட்டுமே வாங்க முடியும்.
அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்த நாடுகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 1,329 ஹாங்காங் டாலருக்கு (Hong Kong Dollar) வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ.17,000 ஆகும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








