விமர்சனம் : யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.!

பார்ப்பதற்க்கு மிகச் சிறிய மொபைல்போன் என்றாலும் அருமையான செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்படிகுவாட்-கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

பொதுவாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் வடிவத்தில் மிகப்பெரியதாக இருக்கும், மேலும் பாக்கெட்டில் வைக்க முடியாத வண்ணம் பெரியதாக இருக்கும். சமீபத்தில் யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் மிகக் குட்டியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் சட்டை பாக்கெட்டில் மிக அருமையாக வைக்க முடியும், அந்தஅளவிற்க்கு சிறிய கருவியாக உள்ளது இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.

ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் அனைவரையும் வியக்கவைக்கும் இந்த குட்டியான ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது, மற்ற மொபைல் மாடல்களில்
இடம்பெற்றுள்ள அனைத்து ஆப் வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் எடை மிகமிக குறைவாக உள்ளதால் மிக அருமையாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பெரிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதை விட இது மாதிரியான குட்டி மொபைல்போன் வாங்கிப் பயன்படுத்துவதற்க்கு மிக அருமையாக இருக்கும், அதன்பின் தனி ஸ்டைல் கொண்டுள்ளது இந்த அருமையான ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு இயங்குதளம்:

பார்ப்பதற்க்கு மிகச் சிறிய மொபைல்போன் என்றாலும் அருமையான செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்படி குவாட்-கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக குவாட்-கோர் செயலி சிறந்த வேகத்தை பாதுகாப்புடன் கொடுக்கும், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன், இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் அதன்பின் அனைத்துவித ஆப்ஸ்களையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும், எடுத்துகாட்டக பேஸ்புக், வாட்ஸ்ஆப், போன்ற அனைத்துவித ஆப்ஸ்களையும் இவற்றில் பயன்படுத்த முடியும், குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் அனைத்துவித ஆப்ஸ்களையும் பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டுள்ளது இந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.

சிறிய டிஸ்பிளே:

சிறிய டிஸ்பிளே:

இந்த குட்டி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை அளவில் மிகச்சிறியது, ஆனால் மிக அருமையாக இருக்கும் பார்ப்பதற்க்கு, 2.45-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன், அதன்பின் அளவில் மிகச்சிறிய டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்க்கு மிக அருமையாக இருக்கும்

மிக எளிமையான முறையில் கால் அழைப்புகள், மேசஜ் போன்றவற்றை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் உள்ள டிஸ்பிளேவினால் எந்தவொரு கண்பாதிப்பும் வராது, எனவே இவற்றை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது என யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளடக்க நினைவகத்தைக் கொண்டுள்ளது, மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு போடும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, எனவே தேவையான கோப்புகள், புகைப்படங்கள், வீடியோ, போன்ற அனைத்தையும் சேமித்துவைத்தக் கொள்ளமுடியும். மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் இடம்பெற்றுள்ள அனைத்து வசதியும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது எனவே இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும், இந்த சிறிய ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மிக அருமையான செயலாகும், எனவே பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீடியாடெக் எம்டி6735 எஸ்ஒசி செயல்திறன் கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன்

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

ஜெல்லி ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இதனுடைய ரியர் கேமரா 8எம்பி பிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்

இயறக்கை காட்சிகள், பயனம், விழா போன்ற அனைத்திறக்கும் இதனுடைய ரியர் கேமராவைப் பயன்படுத்தி மிக அருமையாக புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுக்க முடியும். மேலும் இந்த கேமராவில் எச்டிஆர் முறையைப் பயன்படுத்தி மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 2எம்பி பிக்சல் கொண்டுள்ளது, இந்த பிக்சல் கொண்டு அதிகமான வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுப்பது மிகவும் நல்லது, 2எம்பி பிக்சல் பொதுவாக குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் தெளிவாக கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது.

 பேட்டரி சிறப்பம்சம்:

பேட்டரி சிறப்பம்சம்:

இதனுடைய பேட்டரி அளவு மிகச்சிறியது, மேலும் 950எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன், அதிக நேரம் வரை இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும், மேலும் இதுனுடைய பேட்டரி வெப்பமடைய வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

நீண்டநேர விளையாட்டு, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்டர்நெட், கால்அழைப்புகள் போன்றவற்றிக்கு இந்த குட்டி மொபைல் மிகஅருமையாக பயன்படும் வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Unihertz Jelly Pro review Its not just worlds smallest 4G smartphone but much more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X