மைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.! மறுபடியுமா?

மேலும் வாட்டர் மார்க், ஹோலோகிராம், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

|

தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் இந்தியா முழுவதும் 2019 ஜிலை மாதம் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.!

மேலும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் சார்பில், அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஓட்டுநர் உரிமம் வாகனப்பதிவு புத்தகம் ஆகியவற்றை ஓரே மாதிரயாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு புத்தகத்தை மோசடியாளர்கள் போலியாக தயாரிப்பதை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஓட்டுநர் உரிமம், பதிவு புத்தகம் ஆகிய இரண்டிலும் மைக்ரோசிப் மற்றும் QR கோடு இனி இடம்பெற்றிருக்கும்.

பின்பு இந்த வசதியில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், ஏடிஎம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான தகவல் தொடர்பு வசிதகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய ஓட்டுநர் உரிமத்தில், சம்பந்தப்பட்ட நபர் விபத்தில் பலியாகும் பட்சத்தில் தனது உடல் உறுப்புகளை தான செய்ய விரும்புகிறாரா என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் குறித்து தொடர்பு
கொள்ள வேண்டிய அவசர செல்போன் எண், ரத்த வகை உள்ளிட்டவையும் குறிப்பிடப்படும்.

மைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.!

மேலும் வாட்டர் மார்க், ஹோலோகிராம், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். நாடுமுழுவதும் நாள் ஒன்றுக்கு புதிதாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் எண்ணிக்கை 32,000
ஆக இருக்கிறது. பின்பு 43000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது புதுப்பிக்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Uniform Smart Driving Licenses Across India in 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X