Home
News

Aadhaar அட்டையில் உங்களது புகைப்படம் பிடிக்கலையா? கவலை வேண்டாம்.. சுலபமாக புகைப்படத்தை மாற்றலாம்.. இதோ வழிமுறை

ஆதார் கார்டு (Aadhaar card) இருந்தால் தான் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியும். அதுவும் இந்த ஆதார் கார்டு இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். ஆனாலும் ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பெரும்பாலும் அவரவருக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், முதன் முதலில் ஆதார் எடுக்கப் போகும் போது அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் தான் சிலர் ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும். பின்பு சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். எனவே பலர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்து பயன்படுத்தத் தோன்றும். அது மிகவும் எளிதான விஷயம் தான். அதாவது தற்போது ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற சில வழிமுறைகள் உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Aadhaar அட்டையில் உங்களது புகைப்படம் பிடிக்கலையா? சுலபமாக மாற்றலாம்

வழிமுறை-1: முதலில் https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

வழிமுறை-2: அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அதன்பின்பு அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும்.

வழிமுறை-3: அடுத்து ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

Aadhaar அட்டையில் உங்களது புகைப்படம் பிடிக்கலையா? சுலபமாக மாற்றலாம்

வழிமுறை-4: அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. அதேபோல் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு எந்தவித டாக்குமெண்ட் கொடுக்க தேவையில்லை. குறிப்பாக அங்கு பணியில் இருக்கும் ஆதார் சேவை மைய அதிகாரி நேரடியாக வெப் கேமராவை கொண்டு உங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆதார் கார்டு தகவல்களைச் சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். சிலருக்குப் பெயரில் திருத்தங்கள் இருக்கலாம். சிலருக்கு முகவரியில் திருத்தங்கள் இருக்கலாம். எனவே இது போன்ற ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தலாம். அதுவும் இந்த இணையதளத்தில் வரும் செப்டம்பர் 14 வரை இலவசமாக ஆதாரை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Aadhaar அட்டையில் உங்களது புகைப்படம் பிடிக்கலையா? சுலபமாக மாற்றலாம்

அதாவது ஆன்லைனில் இலவசமாக ஆதார் (aadhaar)புதுப்பிக்க முன்னதாக ஜூன் 14, 2024 என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது அந்த இலவச ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது அரசு. அதாவது தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் வெளியான தகவலின்படி, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14, 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஆதார் சேவை மையம் சென்றால் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பித்து, அங்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது ஆதார் இணையதளம் வழியாக நீங்கள் இலவசமாகவே இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து செய்து உங்கள் தகவல்களை எளிதாகப் புதுப்பிக்க முடியும் .

Best Mobiles in India

English summary
nhappy your Aadhaar card photo? Here's how to easily update photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X