ஜப்பான் : கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஒரு கல்லறை'..!

|

1944-ஆம் ஆண்டு, பிப்ரவரி 17-ஆம் தேதி, இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பல கல்லறைகளில் ஒரு முக்கியமான கல்லறை கடலுக்கு அடியில், சுமார் 80 அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் தான் அமெரிக்காவின் மிக முக்கியமான குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒன்றுதான் - ஆப்ரேஷன் ஹேயில்ஸ்டோன் (Operation Hailstone). அந்த குண்டுவீச்சு நடவடிக்கையில் ஜப்பானின் கரோலின் தீவுகளில் உள்ள ஜப்பானிய கப்பல் மற்றும் விமான தளமானது அமெரிக்காவால் 'சர்வநாசம்' செய்யப்பட்டது.

கரோலின் கடல் தீவுகளில் அமெரிக்கவால் உருவாக்கப்பட்ட 'அந்த கல்லறை'யை, அதே அமெரிக்காவை சேர்ந்த நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான பிராண்டி முல்லர் (Brandi Mueller) என்பவர் புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

அழிவு :

அழிவு :

சுமார் 36 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் சுமார் 400 ஜப்பானிய வானூர்திகள் மற்றும் 50 போர் கப்பல்கள் அழிக்கப்பட்டன என்பதும், சுமார் 2000 ஜப்பானிய படை வீரர்கள் கொல்லப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடப்படாதவைகள் :

தொடப்படாதவைகள் :

நீருக்குள் மூழ்கி கிடக்கும் ஜப்பானிய கப்பலும், பீரிங்கிகளும், ஆயிரக்கணக்கான குண்டுகளும் சற்றும் 'தொடப்படாதவைகள்' என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டர்வாட்டர் கேமிரா :

அண்டர்வாட்டர் கேமிரா :

இந்த நம்ப முடியாத விவரமான புகைப்படங்களை அண்டர்வாட்டர் கேமிரா (Underwater Camera) எனப்படும் வாட்டர்ப்ரூஃப் கேமிரா உதவியுடன் புகைப்படமாக்கி உள்ளார் 32 வயதான அண்டர்வாட்டர் போட்டோகிராஃபர் பிராண்டி முல்லர்.

பீரங்கிகள் :

பீரங்கிகள் :

கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் த்ரீ சு-னு வகையை சேர்ந்த ஜப்பானிய பீரங்கிகள்.

வெடிப்பொருட்கள் :

வெடிப்பொருட்கள் :

ஜப்பானின் ராணுவ வளங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய ஜப்பானிய வெடிப்பொருட்கள்.

மூச்சு சுவாசக்கருவி :

மூச்சு சுவாசக்கருவி :

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் விமான ஒட்டிகள் சுவாசிக்க உதவும் மூச்சு சுவாசக்கருவி (breathing respirator) ஒன்று ஒரு கண்ணாடி குவியல் மத்தியில் கிடக்கிறது.

போர் விமானங்கள் :

போர் விமானங்கள் :

சற்றும் கண்டுப்பிடிக்கப்படாமல் நீரோடு மூழ்கி கிடக்கும் ஜப்பானிய போர் விமானங்கள்.

முதல் உதவி பெட்டி :

முதல் உதவி பெட்டி :

அழிக்கப்பட்டு மூழ்கி கிடக்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் மேல் நிற்கும் முதல் உதவி பெட்டியும், சில பாட்டில்களும்.

ராணுவ வாகனம் :

ராணுவ வாகனம் :

மூழ்கடிக்கப்பட்ட பீரங்கி மற்றும் விமானத்தின் மேல் கிடக்கும் ஜப்பானிய ராணுவ வாகனம்.

நீர்மூழ்கிக்குண்டுகள் :

நீர்மூழ்கிக்குண்டுகள் :

கடல்பாறைகள் போல் காட்சி அளிக்கும் நீர்மூழ்கிக்குண்டுகள்.

போர் கப்பல் :

போர் கப்பல் :

400 டன்களுக்கும் மேலான வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் உருகுலைந்து போன ஒரு ஜப்பானிய போர் கப்பல்.

பெட்டி :

பெட்டி :

இடிபாடுகளில் மத்தியில் காணப்பட்ட பாட்டில்கள் அடங்கிய பெட்டி..!

கப்பல் படை :

கப்பல் படை :

ஜப்பான் கப்பல் படையினர் முற்றிலுமாக நொறுக்கப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் புகைப்படம்.

கடல்வாழ் :

கடல்வாழ் :

நீரில் மூழ்கி கிடக்கும் ஜப்பானிய போர் இயந்திரங்கள் பலவும் கடல்வாழ் உயிரினங்களால் வண்ண மயமான முறையில் பவளப்படுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

நீர்மூழ்கி :

நீர்மூழ்கி :

குண்டு மழையில் சிக்கி சிதைந்து போன ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று.

க்யூரியாசிட்டி ரோவர..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/12/14-1450072192-formore.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>க்யூரியாசிட்டி ரோவரிடம் சிக்கிய விசித்திரம்..!</strong>க்யூரியாசிட்டி ரோவரிடம் சிக்கிய விசித்திரம்..!

<strong>அம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..!</strong>அம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..!

<strong>வரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..!</strong>வரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Underwater camera and Brandi Mueller reveals the Japans underwater graveyard. Read more bout this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X