2 SIM கார்டு யூஸ் பண்ணுறீங்களா? உஷார்.. இந்த சிம் ரூல்ஸ் தெரியலான உங்கள் நம்பர் கைமாறிடும்.. தெரிஞ்சுக்கோங்க..
மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களில் பெரும்பாலானோர் இப்போது 2 சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். உங்களிடம் இருக்கும் சிம் கார்டு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) என்று எந்தவொரு நிறுவனத்துடையதாக இருந்தாலும், இந்த அடிப்படை சிம் ரூல்ஸ் (SIM rules) விதி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதியை பற்றிய சரிவர தெரியாதவர்களின் கவனக் குறைவால் அவர்களுடைய மொபைல் நம்பரை இழக்கும் வாய்ப்போடு, அந்த எண் வேறொரு நபருக்கு கைமாறும் நிலைமையையும் சந்திக்க நெருடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்களிடம் எந்தவொரு டெலிகாம் (Telecom) சிம் கார்டு இருந்தாலும் சரி, இந்த அடிப்படை சிம் கார்டு விதி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் உள்ள பல சிம் கார்டு (SIM card) பயனர்களுக்கு இந்த அடிப்படை விதி தெரியாததனால், பலர் அவர்களின் மொபைல் நம்பர் (Mobile Number) எண்னை இழக்கும் அவலம் நடந்தேறி வருகிறது. இது என்ன விதி? ஏன் இது ஒவ்வொரு சிம் கார்டு பயனர்களுக்கு மிக முக்கியம் எனபதை இப்போது தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்கள் மொபைலில் உள்ள சிம் கார்டை நீங்கள் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிட்டால் அது எத்தனை நாட்களில் செயலிழக்கப்படும் என்று உங்களுக்கு தெரியுமா? எத்தனை நாள் இடைவெளியில் உங்களுக்கு சொந்தமான மொபைல் எண் வேறொரு நபருக்கு டெலிகாம் நிறுவனத்தால் கைமாற்றி தரப்படுமென்று உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மை தான், உங்கள் சிம் கார்டை சரி வர நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் அதன் சேவை துண்டிக்கப்பட்டு அந்த எண் வேறொரு நபருக்குவழங்கப்படும்.
உதாரணமாக, உங்கள் சிம் கார்டை நீங்கள் 60 நாட்களுக்குள் ரீசார்ஜ் (60 days recharge duration) செய்யவில்லை என்றால், உங்களுடைய சிம் கார்டு சேவை தற்காலிகமாக துண்டிக்கப்படும் (temporarily disconnected). இதற்கு நடுவே உங்கள் சிம் கார்டை ரீசார்ஜ் செய்யும்படி, உங்கள் சிம் கார்டுக்கு சொந்தமான டெலிகாம் (Telecom) நிறுவனம் பல எச்சரிக்கை செய்திகளை (Warning notifications) உங்களுக்கு அனுப்பும். அதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால், உங்கள் சிம் கார்டு சேவை துண்டிக்கப்படும்.
அடுத்தகட்டமாக, உங்கள் சிம் கார்டை மீண்டும் மீட்டெடுத்து பயன்படுத்திக்கொள்ள, கூடுதல் அவகாசம் வழங்கப்படும். அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்கும் (6 to 9 months grace period timing) நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படியும், நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், உங்கள் சிம் கார்டு ஒட்டுமொத்தமாக எச்சரிக்கை நகர்வுக்கு நகர்த்தப்படும். இந்த நிலையில் உங்கள் சிம் கார்ட் எண் (SIM card number) டெலிகாம் நிறுவனத்தின் முடிவுக்கு கட்டுப்படக்கூடிய கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இப்போதும் நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தி வந்த மொபைல் நம்பர் வேறொரு நபருக்கு கைமாற்றி (Mobile number transfer) கொடுக்கப்படும். மொத்தமாக உங்கள் சிம் கார்டை மீட்டெடுத்து பயன்படுத்திக்கொள்ள 12 மாத கால அவகாசம் வழங்கப்படும். இதற்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், உங்கள் சிம் கார்டு மொத்தமாக கைமாற்றப்படும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மொபைல் எண் கைமாறிய பிறகு, அதை உங்களால் மீட்டெடுக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.


Click it and Unblock the Notifications








