இன்னும் அடங்காமல் இந்தியர்களை கண்காணிக்கும் சீனா! டெலிவரி ஆப்ஸ் நிறுவனத்தை கூடவிடவில்லை!

|

பாதுகாப்பு காரணத்திற்காகச் சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னரும், Nykaa, Uber India, PayU, Flipkart, Zomato, Swiggy போன்ற பல நிறுவனங்களின் இந்திய தலைவர்களைச் சீன இன்னும் கண்காணித்து வருகிறது என்ற பரபரப்பு தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி உட்பட சில முக்கிய இந்திய தலைவர்கள், நிறுவனங்கள், நிறுவனர்களைச் சீன கண்காணித்து வருகிறது.

ஹாங்காங்

சீனாவின், ஹாங்காங் பகுதியில் அமைந்திருக்கும் ஷென்ஸென் (Shenzhen) என்ற இடத்திலிருந்து செயல்பட்டு வரும் Zhenhua Data Information Technology Co. Limited என்ற நிறுவனம் தான் இந்த கண்காணிப்பு வேலைகளை செய்து வருகிறது என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட 10,000 க்கும் மேற்பட்ட முக்கியமான குடிமக்களைச் சீனா உளவு பார்க்கிறது என்பது அம்பலமாகியுள்ளது.

அம்பலமாகியுள்ளது

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட 10,000 க்கும் மேற்பட்ட முக்கியமான குடிமக்களைச் சீனா உளவு பார்க்கிறது என்பது அம்பலமாகியுள்ளது. இதுமட்டுமின்றி, முக்கிய தலைவர்களுடன் நைகா, உபெர் இந்தியா, பேயு, பிளிப்கார்ட், ஜொமாடோ, ஸ்விக்கி போன்ற இந்திய நிறுவனங்களின் முக்கிய தலைவர்களும் கண்காணிக்கப்படுவது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord போனின் கம்மி விலை வேரியண்ட் விற்பனைக்கு ரெடி! எப்போ வாங்கலாம் தெரியுமா?

Zhenhua நிறுவனம்

இத்துடன், பண பரிவர்த்தனை செய்யும் பயன்பாட்டு நிறுவனங்களான Paytm, Razorpay, PhonePe, Pine Labs, Aways Payments, மற்றும் IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ள FSS payment gateway ஆகியவற்றையும் சீனா கண்காணிக்கிறது. Zhenhua நிறுவனத்தின் டேட்டாபேஸ் தளத்தில் சுமார் 1400 இந்திய நிறுவனங்களின் பட்டியல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Zomato, Swiggy

இதில் குறிப்பாக இவர்களின் அதிக கவனம், Nykaa, Uber India, PayU, Flipkart, Zomato, Swiggy போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் பல்வேறு கல்வி மற்றும் விநியோக செயலிகளையும் சீனா தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீனஸ் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான அடையாளம்! விஞ்ஞானிகள் போட்டுடைத்த உண்மை!

இன்னும் சரியாக சொல்லப்போனால்

இன்னும் சரியாக சொல்லப்போனால் சீனாவின் டிராகன் பார்வை டெலிவரி பயன்பாடுகள், இறைச்சி விற்பனையாளர் பயன்பாடுகளைக் கூட விட்டுவைக்கவில்லை. Bigbasket, Daily Bazaar, Zappfresh, Fresh Meat Market, Zomato, Swiggy, FoodPanda, bike, B2B போன்ற டெலிவரி தலங்களையும் சீனா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

டிஜிட்டல் போர்

இந்த பகிர் தகவல் அணைத்து நிறுவனர்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் கவலையடையச் செய்துள்ளது. சீனாவின் கண்காணிப்பில் இருந்து முக்கிய தலைவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Under Xi s eye From Paytm to Zomato here are companies being monitored by China: Trai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X