Home
News

Amazon ஜெஃப் பெசோஸ் பற்றிய a to z வரையிலான அரிய விஷயங்கள்! நம்பமுடியாத இவரின் வாழ்கை!

ஜெஃப் பெசோஸ் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இல்லையென்றால் இந்த பெயரையாவது கேள்வி பட்டிருப்பீர்கள். உலகின் மிக பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் தான் ஜெஃப் பெசோஸ். இவரை பற்றி உங்களுக்கு தெரியாத 20 அரிய விஷயங்களை தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

உலகின் முதல் பணக்காரர்

உலகின் முதல் பணக்காரர்

200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் நபராக மாறியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். அதன்படி 56 வயதான இவர் தற்போது 205 பில்லயன் டாலர் மதிப்புடையவர். குறிப்பாக உலகின் இரண்டாவது பணக்காரரான பில் கேட்ஸை விட கிட்டத்தட்ட 89பில்லியன் டாலர் அதிகம் சொத்து சேர்த்துள்ளார்.

ஜெஃப் பிறப்பு

ஜெஃப் பிறப்பு

ஜெஃப் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி 1964 ஆம் வருடம் ஜாக்லின் ஜிஸ் ஜார்ஜென்சன் மற்றும் டெட் ஜார்ஜென்சன் தம்பதியருக்கு பிறந்தார். இந்த தம்பதி திருமணமான ஒரு வருடத்தில் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று மைக் பெசோஸை திருமணம் செய்து கொண்டார். மைக் பெசோஸ் ஜெஃப் 4 வயது இருக்கும் போது தத்தெடுத்துகொண்டார்.

தாத்தா கொடுத்த நம்பிக்கை

தாத்தா கொடுத்த நம்பிக்கை

ஜெஃப் பெசோஸின் தாத்தா தாரன்ஸ் ப்ரெஸ்டன் அமெரிக்காவின் அணு சக்தி கமிஷனில் பணியாற்றி வந்தார். இவர் ஜெஃப் வாழ்க்கையில் பெரிய பங்காற்றியதோடு, ஜெஃப் கணினியில் கவனம் செலுத்தவும் ஊந்துகோலாக இருந்தார்.

சிறுவயதிலேயே இதில் இவர் தான் டாப்

சிறுவயதிலேயே இதில் இவர் தான் டாப்

சிறு வயதில் இருந்தே கருவிகள் எப்படி இயங்குகிறது, அதில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது போன்ற காரியங்களில் கவனம் செலுத்தி வந்ததோடு மற்றவர்களை காட்டிலும் தனித்து விளங்கினார்.

சிறுவயதில் இவர் உருவாக்கிய கருவிகள்

சிறுவயதில் இவர் உருவாக்கிய கருவிகள்

சோலார் குக்கர்,ரோபோட் செக்யூரிட்டி சிஸ்டம் பெசோஸின் சில கண்டுபிடிப்புகளாகும்

அறிவாளியாக விளங்கிய ஜெஃப்

அறிவாளியாக விளங்கிய ஜெஃப்

உயர் கல்வியில் சிறந்து விளங்கிய ஜெஃப் பள்ளியில் அறிவாளியாக விளங்கியதோடு கணினி மற்றும் எலக்ட்ரிக்கல் இனஜினியரிங் பயின்றார்

தாத்தா சொன்ன அறிவுரை இது தான்

தாத்தா சொன்ன அறிவுரை இது தான்

இரக்கம் செலுத்துவது எளிதான காரியம் இல்லை என்று ஜெஃபின் தாத்தா அவரிடம் கூறியுள்ளார்

முதலில் வேலை பார்த்த நிறுவனம்

முதலில் வேலை பார்த்த நிறுவனம்

ஜெஃப் பெசோஸ் முதலில் பிடல் என்ற டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதன் பின் டி.ஈ ஷா நிறுவனத்தில் சேர்ந்தார்

பணியிடத்தில் காதல்

பணியிடத்தில் காதல்

டி.ஈ ஷா நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த மெக்கென்ஸீயுடன் காதல் கொண்டு இருவரும் 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்

எந்த நாட்டு குழந்தையை இவர் தத்தெடுத்தார் என்று தெரியுமா?

எந்த நாட்டு குழந்தையை இவர் தத்தெடுத்தார் என்று தெரியுமா?

ஜெஃப் மெக்கென்ஸீ ஜோடிக்கு 3 ஆண் குழந்தாகள் இருந்தாலும் சீனாவில் இருந்து பெண் குழந்தையை தத்தெடுத்தனர்

அமேசான் திறப்பதற்கு முன்

அமேசான் திறப்பதற்கு முன்

டி.இ ஷா நிறுவனத்தில் தான் வகித்த மூத்த அதிகாரி பதவியை துறந்து அமேசான் நிறுவனத்தை துவங்கினார்

அமேசான் பெயருக்கு முன்னாள் இருந்த டயப்பர்

அமேசான் பெயருக்கு முன்னாள் இருந்த டயப்பர்

அமேசான் என்ற பெயரை பெறுவதற்கு முன் பல பெயர்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது

ஜெஃப் நம்பிக்கை

ஜெஃப் நம்பிக்கை

ஜெஃப் பெசாஸ் சிறிய குழுக்களில் செயல்படுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார்

குறைவான முதலீட்டில் ஆர்வம்

குறைவான முதலீட்டில் ஆர்வம்

ஆரம்பத்தில் இருந்தே குறைவான முதலீடுகளில் ஆர்வம் காட்டினார் ஜெஃப்

செலவு செய்ய அஞ்சாதா மனிதர்

செலவு செய்ய அஞ்சாதா மனிதர்

மற்ற விஷயங்களில் குறைவாக செலவிட்டாலும் நல்ல காரியங்களுக்காக செலவு செய்ய அஞ்ச மாட்டார் ஜெஃப்

போட்டி போட்டு வேலை

போட்டி போட்டு வேலை

என்றும் போட்டிகளை எளிதாக கொள்ள மாட்டார், எல்லாவற்றிலும் வெற்றி காணாமல் ஓய மாட்டார். நிறுவனத்தில் நிச்சயம் அனைவரும் போட்டி போட்டு வேலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் பெசோஸ்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஜெஃப்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஜெஃப்

2003 ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தலையில் காயமுற்றார்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை வாங்கியவர்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை வாங்கியவர்

2013 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை 250 மில்லியன்களுக்கு வாங்கினார்

விண்வெளி பயனத்தில் ஆர்வம்

விண்வெளி பயனத்தில் ஆர்வம்

சிறு வயதில் இருந்தே விண்வெளி பயனத்தில் ஆர்வம் கொண்ட ஜெஃப் பெசோஸ் அனைவரும் பயனிக்கும் படியாக குறைந்த கட்டணத்தில் விண்வெளி பயனத்தை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

அமேசான் ப்ரைம் ஏர்

அமேசான் ப்ரைம் ஏர்

அமேசானின் புதிய திட்டம் அமேசான் ப்ரைம் ஏர், இதன் மூலம் பொருட்களை ஆளில்லா வானூர்தி மூலம் வினியோகிக்க முடியும், ஆனால் இத்திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Unbelievable Interesting Facts About Jeff Bezos And His Extreme Wealth : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X