பறிபோனது 2.2 கோடி பயனர்களின் தனிநபர் தகவல்கள் - ஹேக்கர்கள் கைவரிசை! எங்கு தெரியுமா?

|

டிஜிட்டல் உலகில் அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. டிஜிட்டல் ஆதார் அடையாள அட்டை முதல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் தகவல், மருத்துவக்காப்பீடு என அணைத்து தகவலும் டிஜிட்டல் தகவல் ஆகிவிட்டது.

டிஜிட்டல் உலகம் பாதுகாப்பானது இல்லை

டிஜிட்டல் உலகம் பாதுகாப்பானது இல்லை

டிஜிட்டல் உலகத்தில் உள்ள தகவல் எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதே உண்மை, அதை நிரூபிக்கும் விதத்தில் பல ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுதும் நடந்துகொண்டே தன இருக்கிறது அந்த வரிசையில் தற்பொழுது நடந்துள்ள மிகப்பெரிய ஹேக் இதுவாக தான் இருக்கும்.

ஹேக் செய்யப்பட்ட பயனர்கள் யார் தெரியுமா?

ஹேக் செய்யப்பட்ட பயனர்கள் யார் தெரியுமா?

உலகின் முன்னணி இணைய வழி கல்வி அமைப்பான அன்அகாடமி பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட பயனர்களில் பலரும் விப்ரோ, இன்ஃபோஸிஸ், காக்னிசன்ட், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்று சுமார் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?

டார்க் வெப் தளத்தில் விற்பனை

டார்க் வெப் தளத்தில் விற்பனை

இந்த பயனர்களின் முழு விவரங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்படப் பல தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். திருடியது மட்டுமின்றி திருடிய தகவல்களை ஹேக்கர்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனையும் செய்துள்ளனர். கடந்த மே 3ம் தேதி டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த பிறகு தான் அன்அகாடமி நிறுவனத்திற்கே அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் ஜனவரி மதமே திருடப்பட்டுள்ளது.

சைபிள் (cyble) வெளியிட்ட தகவல்

சைபிள் (cyble) வெளியிட்ட தகவல்

இந்த அன்அகாடமி நிறுவனத்தில் நடந்த தகவல் திருட்டு குறித்து முதலில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணையப் பாதுகாப்பு நிறுவனமான சைபிள் (cyble) தான் கண்டுபிடித்துள்ளது. அன்அகாடமி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட தகவல்களில் பயனர்களின் பெயர் விபரம், இமெயில் விபரம், பாஸ்வோர்ட், கடைசியாகக் கணக்கைப் பயன்படுத்திய தேதி, சேர்ந்த தேதி, என அனைத்துத் தகவல்களும் டார்க் வெப் தளத்தில் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது.

Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!

பாஸ்வோர்ட் விபரங்களை உடனே மாற்ற உத்தரவு

பாஸ்வோர்ட் விபரங்களை உடனே மாற்ற உத்தரவு

பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தகவல்களும் அம்பலமாகி விற்பனைக்கு வந்ததால் உடனடியாக அனைத்து ஊழியர்களின் பாஸ்வோர்ட் விபரங்களை மாற்றம் செய்ய அந்நிறுவனங்கள் உஹரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான தகவல்கள் டார்க் வெப் வலைத்தளத்தில் ஹேக்கர்களால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயனாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்அகாடமி மறுப்பு

அன்அகாடமி மறுப்பு

ஆனால், இதுகுறித்து அன்அகாடமி மறுப்பு தெரிவித்து வருகிறது, நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹேமேஷ் சிங்க் கூறுகையில்,உண்மையில் வெறும் 1.1 கோடி பயனாளர்களின் தகவல்கள் தான் திருடப்பட்டுள்ளது.

வலுப்படுத்தப்பட்டுள்ள பயனர்களின் பாதுகாப்பு

வலுப்படுத்தப்பட்டுள்ள பயனர்களின் பாதுகாப்பு

ஆனால், அனைவரும் சுமார் 2.2 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகப் போலியாகக் கூறிவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இதைப்பற்றிக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மற்றும் சூழ்நிலையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். தற்பொழுது பயனர்களின் பாதுகாப்பை பல மடங்குவலுப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Unacademy Database Of 2.2 million Users Datas Have Been Hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X