Home
News

Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இனி புது டிரெண்டா? விரல் அடக்க டிவைஸில் இவ்ளோ மேட்டரா? ஆனா விலை தான்!

ஸ்மார்ட் வியரபில் (Smart Wearable) பொருட்களின் விற்பனை இந்தியச் சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட் வியரபில் என்றால், நீங்கள் அணியக்கூடிய ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பேண்ட் போன்ற ஸ்மார்ட் கேட்ஜெட்களை குறிக்கிறது. சரி, நமக்கெல்லாம் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பற்றித் தெரிந்திருக்கும், ஆனால், ஸ்மார்ட் ரிங் பற்றி உங்களுக்குத் தெரியுமா? Ultrahuman ஸ்மார்ட் ரிங் தான் இப்போது புது டிரெண்டாகி வருகிறது.

அல்ட்ராஹுமன் ஸ்மார்ட் ரிங் டிவைஸ் அறிமுகம்

அல்ட்ராஹுமன் ஸ்மார்ட் ரிங் டிவைஸ் அறிமுகம்

ஸ்மார்ட் வியரபில் டிவைஸ்கள் பெரும்பாலானவை நம்முடைய ஆரோக்கியத்தின் நிலையான தகவலைச் சேகரித்து, நமக்குத் தெரியப்படுத்தும் வேலைகளைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகளை இப்போது இந்தியாவில் பலர் பயன்படுத்தத் துவங்கிவிட்டாலும், இப்போது ஸ்மார்ட் ரிங்க்ஸ் என்ற புதிய வகை வியரபில் டிவைஸ் டிரெண்டாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ரிங் டிவைஸ் அல்ட்ராஹுமன் ரிங் (Ultrahuman Ring) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய முயற்சி

ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய முயற்சி

பெங்களூரைச் சேர்ந்த அல்ட்ராஹுமன் என்ற ஃபிட்னஸ் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கிய தகவல் மற்றும் மாற்றத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு ஸ்மார்ட் வாட்சில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் ரிங் டிவைஸிலும் கிடைக்கிறது. அல்ட்ராஹுமன் ரிங்கில் மேம்பட்ட சென்சார்கள் மற்றும் அல்காரிதம்கள் உள்ளது.

உங்கள் ஆரோக்கியம் பற்றி நோட்டிபிகேஷன் கொடுக்கும் ஸ்மார்ட் ரிங்

உங்கள் ஆரோக்கியம் பற்றி நோட்டிபிகேஷன் கொடுக்கும் ஸ்மார்ட் ரிங்

இவை உங்கள் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உங்களின் ஸ்லீப் தகவலையும் கண்காணிக்கிறது. இதில் உங்கள் மூவ்மென்ட்ஸ் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் கூட அளவிடப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ரிங்கில் உள்ள சென்சார்கள் உங்களுடைய ஆரோக்கிய தகவலைக் கண்காணிப்பதுடன், அவற்றைச் சரியான நேரத்தில் நோட்டிபிகேஷனாகவும் உங்கள் போனில் காண்பிக்கிறது. ஆம், நிறுவனம் இதற்கு ஏற்ற ஒரு ஃபிட்னஸ் டிராக்கிங் ஆப்ஸை உருவாக்கியுள்ளது.

Ultrahuman ஸ்மார்ட் ரிங் டிவைஸில் என்னென்ன இருக்கு?

Ultrahuman ஸ்மார்ட் ரிங் டிவைஸில் என்னென்ன இருக்கு?

இந்த Ultrahuman ஸ்மார்ட் ரிங் டிவைஸில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் ரின் டிவைஸின் வடிவமைப்பிற்கு வரும்போது, ​​அல்ட்ராஹுமன் ரிங் ஒரு அசத்தலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மிகவும் கடுமையான நிலைமைகளைத் தாங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரிங்கிங் வெளிப்புறம் டைட்டானியத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் டங்ஸ்டன் கார்பைடுடன் கோட் செய்யப்பட்டுள்ளது.

இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது

இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது

இது இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது என்று நிறுவனம் கூறியுள்ளது. இது வெளிப்புறத்தில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. எல்லா நேரத்திலும் அணிந்திருக்கத் தேவையான சிறப்பான வடிவமைப்பை இந்த டிவைஸ் பெற்றுள்ளது. உங்களுடைய உறக்கத்தின் போது கூட இவற்றை நீங்கள் அணிந்துகொள்ளலாம். ஆரோக்கியம் தவிர, அல்ட்ராஹுமன் ஸ்மார்ட் ரிங் பயனர்களின் உடற்பயிற்சி அல்லாத செயல்பாடு தெர்மோஜெனீசிஸ் (NEAT) பற்றிய தரவை சேகரிக்கிறது.

அல்ட்ராஹுமன் ரிங் விலை என்ன?

அல்ட்ராஹுமன் ரிங் விலை என்ன?

அல்ட்ராஹுமன் ஸ்மார்ட் ரிங் விலை கிடைக்கும் தன்மையைப் பொறுத்தவரை, அல்ட்ராஹுமன் ரிங் ஜூலை 7 முதல் மதியம் 12 மணிக்கு உலகளவில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட யூனிட்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஷிப் செய்யப்படும். முதல் 200 ஆர்டர்களுக்கு, அல்ட்ராஹுமன் ரிங் ரூ.14,999 என்ற விலையில் கிடைக்குமாம். அடுத்த 300 ஆர்டர்களின் விலை ரூ. 16,999 ஆகும்.

யாருக்கெல்லாம் இது யூஸ் ஆகும்?

யாருக்கெல்லாம் இது யூஸ் ஆகும்?

அதேபோல், ஸ்மார்ட் ரிங்கின் 2,500 ஆர்டர்களுக்குப் பிறகு, அல்ட்ராஹுமன் ரிங்கின் விலை ரூ. 22,499 ஆக உயரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வெளிப்படையான உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த விலையில் ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் அல்லது புது ஸ்மார்ட்போன் டிவைஸையே வாங்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பிரத்தியேக சில கேட்ஜெட் பிரியர்களுக்கு இதன் லுக் மற்றும் அம்சம் கவர்ந்திழுக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் மறக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Ultrahuman Ring Could Be The New Trend Smart Wearable To Improve Metabolic Health
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X