'தல' அஜித்குமாரின் இன்னொரு 'அவதாரம்'..!
"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் கூட நானா செதுக்குனதுடா..!" என்பது வெறும் சினிமா டயலாக் மட்டும் இல்ல, நம்ம 'தல' அஜித் குமாரின் நிஜ வாழ்க்கையோட நிதர்சனமும் கூட !
தமிழ் பேச தெரியாத பள்ளிப் படிப்பை கைவிட்ட சிறுவன், டூ விலர் மெக்கானீக்காக வேலையில் சேர்ந்து, அதன் மீது கொண்ட ஆர்வத்தால் பைக் டயர்களை கடன் வாங்கி போட்டிகளில் கலந்து கொண்டு, பின் நாட்களில் பெரிய பைக் ரேசர் ஆனவர்.
பின் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்கள் என தொடங்கி இன்று தமிழ் நாட்டின் மிக பெரிய ஸ்டார் ஆன நம்ம 'தல' அஜித் குமாருக்கு இன்னொரு அவதாரமும் உண்டு. அதை பற்றி பின்வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம் வாங்க ரசிக பெருமக்களே..!

ஆர்வம் :
பைக், கார், சினிமா மீது மட்டுமல்ல, நம்ம 'தல' அஜித்துக்கு கேஜட்கள் மீதும் ஆர்வம் அதிகம் !

கில்லாடி :
நம்ம 'தல' சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை வடிவமைத்து பறக்க விடுவதில் கில்லாடி..!

உரிமம் :
விமானம் ஓட்ட உரிமம் பெற்றுள்ளஒரே இந்திய நடிகர்..!

சோதனை ஓட்டம் :
சென்னையில் உள்ள ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட்டில் நம்ம 'தல' அடிக்கடி தன் சிறிய வகை விமானங்களின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்துவார்..!

நிர்வாகி :
ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட் தளத்தின் நிர்வாகிகளில் நம்ம 'தல'யும் ஒருவர். மற்றொருவர் கே.அரவிந்த் (ரோட்டார் ஸ்போர்ட்).

எல்39 ஜெட் :
இது அஜித்தின் எல்39 ஜெட்..!

ஜெட்கேப் பி70 :
இது பூமராங்க் ஸ்பிரின்ட் ஜெட்கேப் பி70 டர்பைன்..!

ஹாபி :
இவரின் இந்த பொழுதுபோக்கை செல்லமாக ஆர்சி ஹாபி என்பார்கள், அதாவது ரேடியோ கன்ட்ரோல் ஹாபி..!

தோல்வியடைந்தேன் :
முதலில் பலமுறை தோல்வியடைந்தேன், பின் என் விமானங்கள் பறக்க பறக்க உற்சாகம் கொண்டேன் என்று 'தல' ஒருமுறை கூறியுள்ளார் !

ஹீரோ :
தன் திரைபடங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நம்ம 'தல' ஹீரோதான்..!

குட்டி விமானம் :
பெரிய 'தல' கிட்ட குட்டி விமானம்..!

ரிப்பேர் :
ஓட்டுவது மட்டுமல்ல ரிப்பேர் என்றாலும் அது 'தல' கைக்குதான் வரும்..!

'தல' கிரேட் :
எல்லாமே பெர்ஃபக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதில் 'தல' கிரேட்..!
புகைப்படங்கள் : அஜித் ஃபேன்ஸ் கிளப்ஸ்


Click it and Unblock the Notifications